சர்வதேசத்திற்கு இத்தேர்தல் ஊடாக மிக முக்கியமான செய்தியைச் சொல்லப்போகும் தமிழர்களாகிய நாம், எமது பலத்தையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்த வேண்டிய காலகட்டமிது. தமிழர்களின் அரசியல் பலத்தை தமிழர்களாகிய நாம்தான் தீர்மானிக்க வேண்டும். எமது விடுதலைக்காக வித்தாகிப்போன மாவீரர் தியாகங்களை மதித்து எமது அரசியல் பலத்தை நிரூபிப்போம். அவர்கள் கொண்ட விடுதலை இலட்சியத்தை அடையும்வரை தொடர்ந்தும் பலத்தோடு நாம் பயணிப்போம். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்.மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான சிவஞானம்...
இலங்கைத் தீவிலே தமிழினம் சுயநிர்ணயத்தை அடிப்படையாகக் கொண்ட இனமாக மாற்றுகின்ற வழியில் நாங்கள் பயணித்து விடுதலையைப் பெற்றெடுக்கும் ஒரு பலமாக இந்த பாராளுமன்ற தேர்தலை பயன்படுத்த வேண்டும் என தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். எமது நாடு அரசியல் சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் கடந்த நிலையில் எந்தவொரு அரசியல் கட்சியையோ அல்லது கட்சியின் கொள்கைகளையோ பின்பற்றாமல் சுயேட்சைக்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தொடர்பிலான தகவல்களை வெளியிடவுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப்  புலிகள் அமைப்பிற்கு பணம் வழங்கிய முறை தொடர்பிலான அனைத்து தகவல்களையும் வெளிப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று மதியம் இதற்காக ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை, ஆயர் பணியில் இருந்து ஓய்வுபெற விரும்புவதாக கத்தோலிக்கத் திருச்சபைக்கு அறிவித்திருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சுகவீனம் காரணமாகவே, மன்னார் ஆயர் பணியில் இருந்து ஓய்வுபெற விண்ணப்பித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் கொழும்பு சென்ற கொண்டிருந்த போது, மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை, மாரடைப்பினால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு தற்போது சிகிச்சை...
மக்களின் கோரிக்கையின் நிமித்தமே தாம் 3ம் தவணையும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டதாக மகிந்த தெரிவித்துள்ளார். சிங்க ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதற்காகவே தாம் 18ம் திருத்தச் சட்டத்தை கொண்டுவந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தாம் எடுத்துக் கொண்ட வேலைத்திட்டங்களை முடிப்பதற்கு இன்னும் காலம் தேவைப் பட்டது. இதனாலேயே மூன்றாம் தவணைக்கு போட்டியிட வேண்டியதாக இருந்தது. இதேவேளை தாம் இந்த தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர், தம்மையே மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமிப்பார். இதனை...
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரச்சார விளம்பரங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புகைப்படங்களை பயன்படுத்துவதை தவிர்க்க முன்னணி பிரச்சார குழு தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஏற்படுகின்ற மோதல்களை தவித்துக் கொள்ளவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் சில நாட்களுக்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இணக்கப்பாட்டொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இருவருக்கும் இடையில் இணக்கப்பாட்டை...
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடையும் வரையில் நான் ஊமையாக இருக்க விரும்புகிறேன் என வடமாகாண முதலமைச்சர் சீ்.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். இன்றைய தினம் யாழ்.பிரம்மகுமாரிகள் சபையில் புதிய கட்டிடம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் வடக்கு முதலமைச்சர் கலந்து கொண்டார். இதந்போது, ஊடகவியலாளர்கள் சிலர் அவரிடம் கேள்விகள் தொடுக்க முற்பட்டபோது, நான் பேசவில்லை. தேர்தல் முடியும் வரையில் நான் ஊமையாக இருக்கவே விரும்புகிறேன். மேலும் நான் பேசி இணையங்களில் வெளியான வீடியோ தொடர்பில் நிச்சயமாக...
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினால் எதிர்வரும் 05 வருடத்தினுள் உலக நாடுகளில் பெரிய அளவிலான பகுதியை கைப்பற்றிக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ள வரைபடம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பி.பி.சி செய்தி சேவையினால் இந்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 2020ம் ஆண்டளவில் உலகின் பல நாடுகளை கைப்பற்றிக்கொள்வதற்கு இந்த தீவிரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக பி.பி.சி ஊடகவியலாளர் அன்ட்றூ ஹோக்ஸ்சன் என்பவரினால் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இவ் வரைபடத்திற்கமைய ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு கைப்பற்றிக்கொள்ள எதிர்பார்த்திருக்கும் பகுதிகளில் ஐரோப்பாவின் சில பகுதிகள்,...
பிரபல்யமான றகர் விளையாட்டு வீரரான வசீம் தாஜுதீன், கடத்தப்பட்டதாக கூறப்படும் இலங்கை செஞ்சிலுவை சங்கத்துக்கு சொந்தமான வாகனம் தொடர்பில் அச்சங்கம் விளக்கமளித்து கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான ஆரோக்கிய பணிகளுக்கு போக்குவரத்து வசதிக்கு உதவி வழங்கும்படி கேட்டு சிரிலிய பவுண்டேசனின் செயலாளரான குமாரி திஸாநாயக்க எமது தலைவருக்கு ஓர் உத்தியோகப்பூர்வ வேண்டுகோளை கடந்த 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் திகதி முன்வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து...
சிரியல சவியா பவுண்டேசனின் தலைவியான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷவிடம் WP-KA 0642 இலக்க டிபெண்டர் வாகனம் கையளிக்கப்பட்டது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வாகனத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியால் ஷிரந்தி ராஜபக்ஷ 2011ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் 2015ஆம் திகதி ஜனவரி வரையிலும் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வாகனத்தின் ஊடாகவே பிரபல்யமான றகர் விளையாட்டு வீரரான வசீம் தாஜுதீன் கடத்தப்பட்டதாக தகவல்கள்...