சிறுவன் பாலச்சந்திரன் தலைவனின் மகனாக இருந்ததற்காக பிஸ்கட் துண்டைச் சாப்பிடச் கொடுத்து கொன்றழித்தவர்களையும் எங்களுடைய சகோதரிகளை கிடங்குகளை வெட்டி, சகோதரர்களை நிர்வாணமாக்கி கொன்றழித்தவர்களுக்கும் எதிர்வரும் 17ம் திகதி பதிலடி கொடுப்போம். இந்தத தேர்தல் வரலாற்று ரீதியாக உலகத்திற்குச் சொல்லுகின்ற தேர்தலின் அடையாளமாக இருக்கப் போகின்றது என கூட்டமைப்பின் வேட்பாளர் சிறீதரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 17ம் திகதி மீண்டும் ஓயாத அலைகள் அடிக்கும், வலைப்பாட்டில் பொன்.காந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பள்ளிக்குடா கடற்றொழிலாளர் சங்க...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று முதல் விஷேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு வழங்கவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் பாதுகாப்புக்கென நியமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரே (PSD) இதுவரை குறித்த பாதுகாப்பு சேவையை வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட தேர்தல் வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, தெஹிவளை பள்ளிவாசலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு மர்மமாக முறையில் மரணமான பிரபல்யமான றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீனின் ஜனாஸா தோண்டியெடுக்கப்பட்ட நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கார்த்தி, லக்ஷ்மி மேனன் நடித்து கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த திரைப்படம் கொம்பன். பல பிரச்சனைகளை சந்தித்து வெளிவந்த இத்திரைப்படம் வெற்றி பெற்றது. ஆனால் வெளிவந்த நான்கு மாதத்திற்கு பிறகு இது ஒரு கொலைச்சம்பவத்துக்கு காரணமாய் அமைந்துள்ளது. மூன்று மாதத்திற்கு முன்பு மானாமதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சுற்றுலாவிற்கு கொடைக்கானல் சென்றுள்ளனர். இதில் ராம்நாத் என்பவரும் பொன் முத்துராமலிங்கமும் அருகருகே அமர்ந்துள்ளனர். அப்போது வேனில் கொம்பன் படத்தை போட்டுள்ளனர். இதில் கார்த்தி நடித்த...
இளைய தளபதி தற்போது புலி படத்தின் ரிலிஸில் மிக பிஸியாக இருக்கின்றார். இவர் நடிப்பில் கடைசியாக வந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் கத்தி. இப்படம் தற்போது வரை தெலுங்கில் வரவில்லை, ஏனெனில் இதை ரீமேக் செய்யலாம் என்று பிரபல தயாரிப்பு நிறுவனம் படத்தின் உரிமையை வாங்கியுள்ளதாம். ஆனால், விவசாயிகள் குறித்து படத்தின் கதை இருப்பதால் பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடிக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.
தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் அசின். இதன் பின் பாலிவுட்டிலும் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்று அமீர் கானுக்கு ஜோடியாக கஜினி படத்தில் நடித்தார். படம் ஹிட் ஆனாலும் அவருக்கு பெரிய பெயர் ஒன்றும் கிடைக்கவில்லை, இந்நிலையில் இவர் பிரபல தொழிலதிபர் ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது. இவர் நடிப்பில் விரைவில் ஆல் இஸ்...
தமிழ் சினிமாவில் தற்போது ஒரு படத்தில் இரண்டு நடிகர்கள் சேர்ந்து நடிப்பது சாதாரணமாகி கொண்டு வருகின்றது. இந்நிலையில் ஹாலிவுட்டில் மாபெரும் வரவேற்பு பெற்ற ‘வாரியர்’ என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்யவுள்ளதாக ஒரு பேச்சு அடிப்படுகின்றது. இதில் விக்ரம், சூர்யா, கார்த்தி ஆகிய மூவரையும் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என கூறப்படுகின்றது. ஏற்கனவே பாலா இயக்கத்தில் சூர்யா, விக்ரம்...
அஜித் எப்போதும் தன்னுடன் நடிக்கும் அனைவரையும் சமமாக தான் நடத்துவார், இதனால் என்னவோ அவரை எல்லோருக்கும் பிடிக்கும். தற்போது தல-56 படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பிற்காக காத்திருக்கும் அஜித், ஓய்வு நேரத்தில் காக்கா முட்டை படத்தை பார்த்துள்ளார். இதில் சிறுவர்களின் நடிப்பு அஜித்தை மிகவும் கவர்ந்ததால், உடனே படக்குழுவினர்களுக்கு போன் செய்து தன் வாழ்த்துக்களை கூறியுள்ளார். விரைவில் அந்த சிறுவர்களை அஜித் சந்திப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜோதிகா நடிப்பில் வெளியான 36 வயதினிலே மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் சிறந்த குடும்ப தலைவியாக, தன் மகளின் கனவிற்காக தன் கனவுகளை தியாகம் செய்யும் கதாபாத்திரத்தில் ஜோதிகா வாழ்ந்திருப்பார். நிஜ வாழ்விலும் தன் குழந்தைகளுக்காக சினிமாவில் பல வருடங்கள் நடிக்காமல் இருந்தார். சமீபத்தில் சென்னையில்குழந்தைகளுக்கான ஓட்டப்பந்தய போட்டி நடந்தது. இதில் ஜோதிகாவின் மகன் தியா கலந்து கொண்டு ஓடினார். அவரை உற்சாகப்படுத்துவதற்காக நேரில் வந்து மைக்கை...
பாலியல் பிரச்சனைகளை சந்தித்து வரும் ஆண்கள் பீட்ரூட்டை சாப்பிடுவதன் மூலம் அதிலிருந்து மீளலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.ஏனெனில், பீட்ரூட்டை சாப்பிடும் போது, அதில் உள்ள நைட்ரேட்டுகள் வாயில் உள்ள பாக்டீரியாக்களால் நைட்ரைட்டுகளாக மாற்றமடைகிறது.பீட்ரூட்டை நன்கு மென்று விழுங்கும் போது, வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களால் அது நைட்ரிக் ஆக்ஸைடாக மாறி, பிறப்புறுப்புகளில் உள்ள இரத்த நாளங்களை விரியச் செய்து, உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.பீட்ரூட்டில் உள்ள சத்துக்கள் பீட்ரூட்டில் தண்ணீர்...