முன்னாள் வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக மூன்று தடவை பதவி வகித்த தா. சிவசிதம்பரத்தின் சிலை இன்று (25.7) திறந்து வைக்கப்பட்டது. இவரின் ஞாபகார்த்தமாக வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் மக்கள் சேவை மாமணி நா. சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் மாவட்ட சபை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மு. சிற்றம்பலம் சிலையை திறந்து வைத்தார். இதேவேளை கலாபூசணம் செ. தேவராசா மலர் மாலை அணிவித்ததுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாணசபை உறுப்பினர்கள். பாராளுமன்ற வேட்பாளாகள் பொது...
வவுனியாவில் குடும்பப்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு வவுனியா ஆச்சிபுரம் கிராமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவர் நேற்று (24.07.2015) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. பிரேம ராதிகா வயது 25 என்ற 4 வயது குழந்தை ஒன்றின் தாயாரான குடும்பப் பெண்ணே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இறுதியாக இவர் கட்டாரில் இருக்கும் கணவரிடம் தொலைபேசியில் உரையாடியதன் பின்னர் மாலை 4.30 மணியளவில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்....
முல்லைத்தீவு மாவட்ட சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் குடும்பங்களை சந்தித்தார் - அமைச்சர் டெனிஸ்வரன்... ஏற்க்கனவே அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் 24-07-2015 வெள்ளி காலை 11:30 மணியளவில் செல்வபுரம் மாதர் அபிவிருத்தி சங்க கட்டிடத்தில், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அரசியல் கைதிகளின், கிராம அபிவிருத்தி திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட குடும்பங்களை சந்தித்து அவர்களது வாழ்வாதாரம் தொடர்பாகவும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இவ்விசேட சந்திப்பில் வடக்கு மாகாண கிராம...
கிளிநொச்சி மாவட்ட சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் குடும்பங்களை  சந்தித்தார் - அமைச்சர் டெனிஸ்வரன்... ஏற்க்கனவே அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் 24-07-2015 வெள்ளி காலை 4:00 மணியளவில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அரசியல் கைதிகளின், கிராம அபிவிருத்தி திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட குடும்பங்களை சந்தித்து அவர்களது வாழ்வாதாரம் தொடர்பாகவும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இவ்விசேட சந்திப்பில் வடக்கு மாகாண கிராம...
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள தலைவர்களுடன் நந்திக்கடல் சட்டவிரோத மீன்பிடி தொடர்பில் விசேட கலந்துரையாடல் - வடக்கு மீன்பிடி அமைச்சர்... நந்திக்கடலில் சட்டவிரோத மீன்பிடி முறையில் ஈடுபடுபவர்களை கைது செய்யாது ஆதரவு வழங்குவதாக வந்த தகவலை தொடர்ந்து 24-07-2015 வெள்ளி மதியம் 1:00 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தில் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட விசேட சந்திப்பில் அமைச்சின் செயலாளர்...
  முல்லைத்தீவு மாவட்ட உடையார்கட்டு விசுவமடு நன்னீர் மீன்பிடியாளர் சங்கத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு 24-07-2015 வெள்ளி காலை 10 மணியளவில் உடையார்கட்டு குளத்துக்கு ஒதுக்கப்பட்ட 60இ000 நன்னீர் மீன்குஞ்சுகளில் ஒரு தொகுதி முதலக்கட்டமாக இன்று குளத்தில் வைப்பிலிடப்பட்டது. இன் நன்னீர் மீன்பிடியாளர்களை ஊக்குவிக்கும் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சரின் திட்டத்திற்கு அமைவாக இன்றையதினம் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதுஇ இன் நிகழ்வில் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் அமைச்சின் செயலாளர்...
ஒரு சிறந்த தலைமையின் கீழ் அவர்கள் போராடி சாதனை படைத்தார்கள். பெண்களுக்கான உரிமைக் குரல் பாராளுமன்றத்திலும் ஒலிக்க வேண்டும். த.தே.ம.முன்னனியின் வன்னி வேட்பாளர் சிவரதி பாதிப்படைந்த வன்னித் தேர்தல் தொகுதியில் ஒரு பெண் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்து வேண்டும் என்ற நோக்கத்தில் நான் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றேன். உண்மையில் கடந்த 60 வருடகாலமாக எமது பெண்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி நலிந்து சிதைவடைந்த நிலையில் அவர்களுக்காக பேசுவதற்கு யாருமற்ற நிலையில் இருக்கின்றார்கள். அது எனது மனதிலே ஆழமாக பதிந்துள்ளது. நாம் பெண்ணியத்திற்கான...
புதுக்குடியிருப்பு தேவிபுரம் கிராமத்தில் 24.07.2015 அன்று மக்கள் சந்திப்பில் சிவசக்தி ஆனந்தன். வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் து.ரவிகரன், இ.இந்திரராசா, முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரியும், திரு.இ.இந்திரராசாவின் செயலாளருமாகிய திரு.பாலசிங்கம், வவுனியா ஈச்சங்குளம் முதியோர் சங்கத்தலைவர் திரு.ஜெகநாதன், லண்டனிலிருந்து வருகை தந்துள்ள சமுக சேவகர் திரு.சுந்தர், தேவிபுரம் முதியோர் சங்கத்தினுடைய முக்கியஸ்தர் சந்திரிக்கா அன்ரி, சிவில் அமைப்பின் பிரதிநிதி திரு.அன்ரூ, இவர்களுடன் கிராம மக்களும் கலந்துகொண்டிருந்தனர். தேவிபுரம் முதியோர் சங்க கட்டடம் அமைப்பதற்காக...
வவுனியா பூந்தோட்டம் வீதியில் இன்று இரவு (19.7) இரு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மோதுண்டதில் இருவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பூந்தோட்டம் பகுதியில் இருந்து வந்த கார் முன்னால் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டு எதிரில் வந்த காருடனும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இருவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ...
தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் பொலிஸாருக்கு இதுவரையில் கிடைத்திருக்கும் 78 முறைபாகளுக்கமைய 102 பேர் நேற்று வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. தேர்தல் செயலக முறைப்பாடு பிரிவிற்கு தேர்தல் அறிவித்த நாளில் இருந்து நேற்று வரையில் 471 முறைபாடுகள் கிடைத்துள்ளதோடு, அம்முறைப்பாடுகளில் 139 முறைப்பாடுகள் அரசாங்கத்தின் நியமனங்கள் மற்றும் பதவி உயர்வு தொடர்பிலாகும். அதிக முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் கிடைத்திருப்பதோடு, அதன் எண்ணிக்கை 70ஆகும். தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில்...