இந்திய மீனவர்களை தாக்கியதாக தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை இலங்கை கடற்படையினர் மறுத்துள்ளனர். இலங்கை கடற்படையின் பேச்சாளர் கொமாண்டர் இந்திக சில்வா இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார். இலங்கையின் கடற்படையினர் ஒருபோதும் எல்லைத்தாண்டிய செயல்களில் ஈடுபடுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமையன்று இந்திய மீனவர்களை மூவரை, இலங்கை கடற்படையினர் தாக்கினர் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதன்காரணமாக சுமார் 500 படகுகளில் தொழிலுக்கு சென்ற இந்திய மீனவர்கள் தொழிலை கைவிட்டு கரைக்கு திரும்பியதாகவும்...
கொழும்பு கோட்டை ரயில்வே நிலையத்தில் பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த 6 சீனப்பிரஜைகள் கைதுசெய்யப்பட்டனர். இந்தநிலையில் பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின்பேரில் அவர்களுக்கு தலா 100 ரூபா அபராதத்தை செலுத்துமாறு கோட்டை நீதிவான் உத்தரவிட்டார். வெளிநாட்டவர்கள் சிலர் ரயில்வே நிலையத்தல் பிச்சையெடுக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் ஐந்தாவது ஆறாவது ஆட்களே பிச்சையெடுக்கும் தொழிலை திட்டமிடுபவர்கள் என்றும் அவர்களே ஏனையவர்களை கொள்ளுப்பிட்டியில் உள்ள வாடகை வீட்டில் இருந்து பிச்சையெடுப்பதற்காக...
நீர்க்கடுப்பு ஏற்பட்டால் தாங்க முடியாத வலியை அனுபவிக்க வேண்டிவரும்.அதிகமாக கோடைக்காலத்தில் தான் நீர்க்கடுப்பு ஏற்படுகிறது, உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததுதான் நீர்க்கடுப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம். கோடைக் காலத்தில் தினமும் குறைந்தது 4 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். தாகம் அடங்கும்வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் சரியாகக் குடிக்காவிட்டால், சிறுநீரில் தாதுகள் அதிகமாகச் சேர்ந்து படிகமாகி, சிறுநீரின் அடர்த்தி அதிகரித்துவிடும். இதனால்தான் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படுகிறது, கடுக்கிறது....
பொருட்களின் விலைகள் குறைவு என்று கூறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பகல் கனவு காண்கின்றாரா என முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க பொருட்களின் விலைகள் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றார். இது அப்பட்டமான ஓர் பொய்யாகும். என்ன பொருளின் விலை குறைந்துள்ளது என நாம் கேட்கின்றோம். ரணில் பகல் கனவு காண்கின்றார். ஹம்பாந்தோட்டை விமான நிலையத்தில் நட்டமாம். இரண்டு விமான நிலையங்கள் தேவையில்லை என்றால் ஏன் ரணில் மொனராகல் சென்று விமான...
லிபரல் கட்சியின் தேசிய சபை உறுப்பினர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க, ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியலில் இருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லிபரல் கட்சியின் செயலாளர் கமல் நிசங்க இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார். ரஜீவ விஜேசிங்க, முன்னர் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார். பின்னர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் பிரதியமைச்சராக பதவி வகித்தார். அந்தநேரத்தில் ரணில் விக்கிரமசிங்கவை விமர்சித்து விட்டு வெளியேறினார். தற்போது மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்க முன்னின்று செயற்படுகிறார்....
இனவாதத்தை தூண்டுவோருக்கு கொழும்பு மக்கள் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல பாடம் புகட்டுவார்கள் என மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பீதியடைந்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி மிக வலுவான ஓர் வேட்பாளர் குழுவினை நிறுத்தியுள்ளது. விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் தினேஸ் குணவர்தன போன்றவர்கள் இனவாதத்தை தூண்டி பிரச்சாரம் செய்து வருகின்றனர். போலியான பிரச்சாரங்களை இவர்கள்...
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் முடிவுகள் முழு உலகிற்கும் முக்கியமானது என அமெரிக்க புலனாய்வு பிரிவின் முன்னாள் பொறுப்பாளர் டெனிஸ் பிளயார் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொதுத் தேர்தல் முடிவு இந்திய பிராந்திய வலய நாடுகளைப் போன்றே முழு உலகிற்கும் முக்கியமானது. தென்கிழக்காசியாவின் பிரதான போக்குவரத்து கேந்திர நிலையமாக இலங்கை காணப்படுகின்றது. இலங்கையின் ஜனாநாயக நெறிமுறைமைக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அமெரிக்க எதிர் கொள்கைகளை பின்பற்றினார். தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால...
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் வெற்றி குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் அனுர பிரியதர்சன யாப்பா ஆகியோருடன் இந்தக்கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கூட்டமைப்பு தோல்வி கண்டால் சுசில் பிரேமஜயந்தவை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கவும் உடன்பாடு காணப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு வெற்றிப்பெற்றால் மஹிந்தவை காட்டிலும் பிரதமராக நியமிக்க பல சிரேஸ்ட...
  "நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 25 ஆம் திகதி சனியன்று யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், இதனை எதிர்வரும் 25 ஆம் திகதி யாழ். உடுவில், மருதனார்மடத்தில் நடைபெறும் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டத்தில் வெளியிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில்...
  எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது ஆத்திரமான மனநிலையில் செயற்படுவதாக கூறப்படுகிறது. மகிந்த ராஜபக்சவே ஜனாதிபதியாக பதவி வகிக்கும் போதே தோல்வியடைந்த ஒரே ஜனாதிபதி. கடந்த ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்தார். அதேபோன்ற படுதோல்வியை அவர் பொதுத் தேர்தலில் சந்திப்பார் என எதிர்வுகூறப்பட்டு வருகிறது. இந்த தோல்வியை தானும்...