தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் குழந்தைப் போராளியை அடுத்த இதழில் அறிமுகம் செய்கிறேன் - என்று சென்றவாரம் எழுதியிருந்தேன். இளம் இயக்குநர் உதயபாரதியின் 'பாலாறு' திரைப்படத்தைப் பார்த்த உடனேயே ஏற்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பின் எதிர்விளைவுதான் அது. அப்படி நான் எழுதியதற்கும் உடனடி எதிர்விளைவு இருந்தது. விவரம் தெரிந்த நண்பர் ஒருவர், கட்டுரையைப் படித்தவுடனேயே தொடர்பு கொண்டார். தொடக்கக் கால போராளி ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, 'அவர்தானே அந்தக் குழந்தைப்...
 கடந்த மாதம் கிளிநொச்சியில் காணாமல் போனதாக கூறப்பட்ட குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜூன் 21ஆம் திகதி முதல் கிளிநொச்சியில் மூன்று வயது குழந்தை ஒன்று காணவில்லை என பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்திருந்தது. இந்நிலையில் கிளிநொச்சி உருத்திரபுரம் எள்ளுக்காடு என்ற பிரதேசத்தில் உள்ள வயல்வெளியில் இருந்து இந்த குழந்தையின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸைார் தெரிவித்தனர். மீட்கப்பட்ட குழந்தையின் சடலம் தற்பொழுது கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. உதயகுமார் யர்சிகா என்ற இந்தக்...
அடுத்தமாதம் நடக்கவுள்ள பாராளுமன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சிக்கோ, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கோ அறுதிப் பெரும்பான்மை பலம் கிடைக்காது என்ற அனுமானம் பரவலாகக் காணப்படுகிறது. இந்தக் கணிப்பு சரியாக அமைந்தால், அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சாதகமான ஒரு நிலையை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பு, கூட்டமைப்பின் தலைவர்கள் மத்தியில் காணப்படுகிறது. கொழும்பின் அடுத்த அரசாங்கத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுப்பதை நோக்கமாகக் கொண்டே, இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தேர்தலை...
இலங்கை மீதான போர் குற்றச்சாட்டு தொடர்பில் ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கைக்கு ஒப்பான போலி அறிக்கையினை தயாரித்து வெளியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு நெருங்கிய குழுவொன்று செயற்பட்டு வருவதாக புலனாய்வுத் துறையினர் அரசாங்கத்துக்கு தகவல் வழங்கியுள்ளனர். பொதுத் தேர்தல் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளதால் தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் இந்த அறிக்கையினை வெளியிட இக்குழு தீர்மானித்துள்ளது. அந்த அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னாள் பாதுகாப்புச்...
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் பிரதான பங்குவகித்த மேற்குலகும் இந்திய றோ கட்டமைப்பும் பாராளுமன்ற தேர்தலில் பிளவா? இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை றோ ஆதரிக்க காரணம் என்ன? மேலும்,  இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேன ஆளுமையில் பலவீனம் அடைந்துவிட்டாரா?எதிர்வரும் மாதம் நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் மகிந்தவை வெற்றி பெற வைப்பதில் இந்திய தூதரகத்தில் மறைந்துள்ள  முக்கிய அதிகாரி யார்? எனும் பல்வேறு வகையான கேள்விகளுக்கு திடுக்கும் ஆதாரங்களுடன்  தெளிவானபதில்களை...
லண்டனில் மரணமான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் பத்மநாதன் பாவலனின் பூதவுடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை  மாலை பருத்தித்துறை, சுப்பர்மடம் இந்து மயானத்தில் தீயுடன் சங்கமமானது.. லண்டனிலிருந்து எடுத்து வரப்பட்ட பாவலனது பூதவுடல் யாழ். பருத்தித்துறையிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பாவலனது பூதவுடலுக்கு கிரிக்கெட் வீரர்கள், பாடசாலை மாணவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் நேற்று அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மாலையில் பருத்தித்துறை, சுப்பர்மடம் இந்து மயானத்தில் பாவலனின் பூதவுடல்...
  வவுனியா, பம்பைமடுப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் இருந்து பூவரசன்குளம் நோக்கி  சென்ற ஆட்டோ மீது மன்னார் வீதியில் இருந்து வவுனியா நோக்கி வந்ம ஹயஸ்ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதியதில் ஆட்டோவில் பயணித்த பெண் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர். இச் சம்பவத்தில் வவுனியா,...
  நேற்று காலை 7.30மணியளவில் பாரதி சனசமூகநிலையம் மற்றும் பாரதி முன்பள்ளி போன்றவற்றில் இருக்கும் மக்கள் மற்றும் சிறுபிள்ளைகளின் வேண்டுகோளிற்கமைய அவா்களிற்கு குழாய் கிணறு ஒன்றை பெற்றுத்தந்து திரு றோய்ஜெயக்குமாா்மக்கள்மேல் உள்ள கரிசனையை உறுதிப்படுத்தியுள்ளாா்.இக்குழாய் கிணறிற்குதிரு.றோய் ஜெயக்குமாரினால் ரூபா100000 நன்கொடையாக வழங்கப்பட்து.வேலைத்திட்டங்கள் யாவும் இனிதேநிறைவேறிற்று  
  கலங்க வைத்த கடைசி உரை! தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் தனது தளபதிகளை எப்போதும் மக்களோடு மக்களாக அவர் இருக்கச் செய்திருந்தார். தான் சொல்ல விரும்பும் கருத்துகளை, செய்திகளை அந்தத் தளபதிகள் மூலமாக மக்களிடம் உடனுக்குடன் அவர் சேர்த்து வந்தார். ஆனால், 2007-ல் நான்காம் கட்ட ஈழப் போர் தொடங்கியபோது… கிளிநொச்சி, பரந்தன், ஆனையிறவு என வரிசையாக வீழ்ச்சி ஏற்பட… புலிகளின் தளபதிகளைக்கூட மக்களால் சரிவர சந்திக்க முடியாத நிலை...
  தென்னிலங்கையில் வரவிருக்கின்ற புதிய அரசாங்கத்தை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக கூட்டமைப்பே விளங்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளரும் முன்னாள் எம்.பியுமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா, உள்வட்ட வீதியில் உள்ள ஈபிஆர்எல்எப் கட்சியின் பிரசாரக் கூட்டத்தின் போதே இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து அங்கு கருத்து தெரிவிக்கையில், தென்னிலங்கையில் ஆட்சி அதிகாரத்தை யார் பெறுவது என்ற போட்டி நடைபெறுகிறது. எங்களைப் பொறுத்த வரை ஜனவரி...