தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப மக்கள் முன்வரவேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் இன்று (18.7) தெரிவித்தார். வவுனியாவில் உள்ள சுவர்க்கா விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வெள்ளையர்களின் சாம்ராஜ்ஜியத்தின் பின்னர் எமது நாடு சுதந்திரமாடைந்த போதிலும் தமிழர்கள் அடிமைசாசனத்திற்குள் தள்ளப்பட்டிருந்தார்கள். அதன் தொடர்ச்சியாகவே தமிழர் விடுதலைக்காக சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதற்கான அகிம்சை...
  எங்களின் தலைவர் பிரபாகரன் என தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றி பேசி இனவாதத்தை தூண்டி சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று மஹிந்த மீண்டும் வரக்கூடிய நிலையை கூட்டமைப்பு உருவாக்குகிறது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான ஆனந்தசங்கரி குற்றம் சாட்டியுள்ளார். வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது - இந்த...
அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பிரசாரக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிளவு வெளிப்பட்டது. மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் இடம்பெற்ற இந்தக்கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்கவில்லை. குறிப்பாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இந்தக்கூட்டத்தை பகிஸ்கரித்தார். அத்துடன் எஸ்.பி.திஸாநாயக்க, சாந்த பண்டார, சரத் அமுனுகம ஆகியோரும் இந்தக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எனினும் கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா பதற்றத்துடன் காணப்பட்டார். இதற்கிடையில் குறித்த கூட்டம் ஆரம்பமாவதற்கு சற்று முன்னர்...
தமிழ் அரசியல்வாதிகள் பலரைப் படுகொலை செய்த முதல்தரக் கொலைகாரனுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் இடம் அளிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், சந்திரநேரு மற்றும் பேராசிரியர் ரவீந்திரநாத் ஆகியோரின் படுகொலைகளில் நேரடியாகத் தொடர்புடைய நபருக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள்...
இலங்கை வாழ் முஸ்லிம் மக்களின் எதிர்காலத்திற்கு எனது நல்வாழ்த்துக்கள் என்று நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; நிலையான நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் நோக்கி செல்கின்ற எமது தேசத்தில் இஸ்லாம் மதம் எவ்வாறு பங்களிக்கின்றது என்பதை ஈதுல் பிதுர் பண்டிகை எமக்கு நினைவூட்டுகின்றது. இன்­றைய தினத்தில் ஈதுல் பிதுர் பண்­டி­கையை கொண்­டாடும் இலங்­கைவாழ் மற்றும் அனைத்­து­லக முஸ்லிம் மக்­க­ளு­கக்கும் எனது மன­மார்ந்த வாழ்த்­துக்­களைத்...
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பில் தேர்தல் பிரசாரங்களின் போது தற்போது கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த விடயத்தில் தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட்டு அடுத்த வருடத்திலாவது தீர்வைக் காண முன்வர வேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று முன்தினம் திருகோணமலையில் நடைபெற்ற கட்சியின் கிளைக் கூட்டத்தில் உரையாற்றும் போதும் இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார். தேர்தலில் தமிழ் மக்கள் உரிய ஆதரவினை ஒருமித்து வழங்கினால் 2016ம் ஆண்டு தமிழ்...
  தமிழ் தேசிய மக்கள் முன்னனி வேட்பாளருக்கு புலனாய்வுத் துறை அச்சுறுத்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வன்னி வேட்பாளர் ஒருவருக்கு புலனாய்வுத் துறையினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரியவருகிறது. தமிழ் தேசிய மக்கள் முன்னனி சார்பாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடும் மன்னார் மாவட்ட இளம் வேட்பாளரான பெற்றிக்ஸ் ஜெனன் அவர்களின் வீட்டுக்குச் சென்ற புலனாய்வுத் துறை என தம்மை அடையாளப்படுத்தியோர் அவரது குடும்ப விபரம்,...
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை, யாழ்.மாவட்டத்தில் இன்றுவரை 17 கட்சிகளும் 12 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருக்கின்றன. இன்றைய தினம் 11 கட்சிகளும், 9 சுயேட்சை வேட்பாளர்களும் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். குறிப்பாக தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் முன்னாள் நீதிபதி விக்னராஜாவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதம வேட்பாளராக அங்கஜன் ராமநாதனும், மக்கள் விடுதலை முன்னணி...
இளைய தளபதி விஜய் மற்றும் தல அஜித் தான் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாருக்கான ரேஸில் முதலிடத்தில் இருப்பவர்கள். இந்நிலையில் அஜித் தற்போதெல்லாம் தன் வயதை காட்டிக்கொள்ளாமல் எதார்த்தமான தோற்றத்திலேயே தான் நடிக்கின்றார். ஆனால், விஜய் இன்றும் இளமையாக தான் தன் படங்களில் தோன்றுகிறார். முதன் முறையாக அட்லீ படத்தில் அஜித்தை போலவே விஜய்யும் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். அது என்னவென்றால் இப்படத்தில் எந்தவிதமான ஆடம்பரமும் இல்லாமல் தன் நிஜ...
தல அஜித் வீரம் பட வெற்றிக்கு பிறகு மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தின் 75 சதவீத படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்த எந்தவொரு தகவலும் வெளியாகாத நிலையில், தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்திற்கு பிறகு அஜித் சத்யஜோதி நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க ஒப்புகொண்டிருகிறார். இப்படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா? பல காலமாக ’இந்த கூட்டணி ஒன்று...