திரைக்கு வந்து 5 நாள்களிலேயே ரூ. 215 கோடியை 'பாகுபலி' திரைப்படம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மிகக் குறுகிய நாள்களில் வசூலில் 200 கோடி ரூபாயைத் தொட்ட இந்திய சினிமா என்ற பெருமையையும் 'பாகுபலி' பெற்றுள்ளது.   இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் மிகப் பிரமாண்டமான திரைப்படமாக கடந்த 3 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட 'பாகுபலி' திரைப்படம், கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது. சரித்திரகால திரைப்படம் என்றாலும், தொழில்நுட்ப ரீதியில் மிக நேர்த்தியாக...
தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையில் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றிய ஊழியர்கள் பணியிலிருந்து நிறுத்தப்பட்ட நிலையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக குறிப்பிட்ட ஊழியர்கள் முப்பத்தைந்து பேர் ஒப்பந்த அடிப்படையில் சிற்றூழியர்களாக கடமையாற்றி வந்த நிலையில், நேற்று வியாழக்கிழமை எந்த வகையான முன்னறிவித்தலும் இன்றி வேலையில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளார்கள். இவர்களுடைய போராட்டத்தைத் தொடர்ந்து தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு வருகை தந்த தமிழ்தேசிய கூட்டமைபின் வடமாகாண சபை உறுப்பினர்களான...
வவுனியா, தர்மலிங்கம் வீதியில் உள்ள நவாலியூர் சோமசுந்தரப் புலவர் திருவுருவச் சிலை முன்பாக ஆடிப்பிறப்பு கொண்டாட்ட நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. வவுனியா வரியிறுப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆடிப்பிறப்பு நிகழ்வு தொடர்பாகவும், நவாலியூர் சோமசுந்தரப் புலவர் பாடிய 'ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே' என்ற பாடலை நினைவுபடுத்திய கருத்துரைகள் இடம்பெற்றதுடன் ஆடிக்கூழ் காய்ச்சப்பட்டு நிகழ்வில் வருகை தந்தவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் வவுனியா...
நடை பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் பாராளுமன்ற முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கான முழுப் பொறுப்பையும் முஸ்லிம் அரசியல் தலைவர்களே பொறுப்பேற்க வேண்டும் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் இசட் .ஏ.எச்.ரகுமான் தெரிவித்தார் . கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு நிஸாம் காரியப்பர் தலைமையில் வியாழக் கிழமை (16) மாலை நடைபெற்ற போது உரையாற்றுகையிலேயே ரகுமான் மேற்கண்ட விடயத்தை தெரிவித்தார் . அவரங்கு...
கால் பாதங்களில் வெடிப்பு வந்தால் பார்ப்பதற்கு அசிங்கமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் விரும்பிய காலணிகளை அணிய முடியாது.ஆனால், இந்த கால்வெடிப்புகள் வருவதற்கு கடினமான செருப்புகளும் ஒரு காரணம்.அதுமட்டுமல்லாமல் சிலருக்கு சோப்பில் உள்ள வேதிப்பொருட்களின் ஒவ்வாமையினால் வெடிப்பு உண்டாகும். சிலர் பாதங்களை சுத்தமாக வைத்து கொள்வது இல்லை.இதனாலும் கால் வெடிப்புகள் வரும். கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள் இதோ வேப்பிலையில் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசினால் குணமாகும். நீங்கள் தினமும் சொரசொரப்பான கல்லில்...
நாட்டுக்கு உயிர் கொடுத்த தலைமையை மீண்டும் ஆட்சியில் அமர்த்துங்கள் என விமல் வீரவன்ச கூறியுள்ளார். மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள பரப்புரைக் கூட்டம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே விமல் வீரவன்ச இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் கருத்துரைக்கும் போது:- தேசத்துக்கு உயிர் கொடுங்கள்’ என்ற தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரத்தை இம்முறை நாங்கள் முன்னெடுக்கவுள்ளோம். எமது கன்னி தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை...
video
விசித்திரங்களால் உருவானதே வாழ்க்கை. ஆனால், சில விசித்திரங்கள் நம்மை உச்சகட்ட வியப்பில் ஆழ்த்துபவை. அப்படி ஒரு உச்சகட்ட விசித்திரம் ஜெர்மனில் நிகழ்ந்துள்ளது. நேற்று முன்தினம் ஜெர்மன் பொலிசாருக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது. மறுமுனையில் பதட்டத்துடன் பேசிய இளம்பெண், “ஒரு குட்டி அணில் என்னை விடாமல் துரத்துகிறது. யாராவது உடனே உதவிக்கு வாருங்கள்.” என்றார். இத்தனை வருட பொலிஸ் அனுபவத்தில் இப்படி ஒரு அழைப்பு வராததால் குழம்பிய ஜெர்மன் பொலிசார் உடனடியாக...
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்ற புதிய அரசாங்கம் இதுவரையில் தமிழ் மக்களுக்கு எந்த பயனையும் தரவில்லை. மாறாக தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு துரத்தப்பட்ட மகிந்தவை மீண்டும் ஆட்சி பீடத்தில் ஏற்றவே முனைகின்றது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த இக்கட்டான நிலை தொடர்பில் தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டிய நிலையில் உள்ளனர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்.கந்தர்மடப்பகுதியில் இன்று வியாழக்கிழமை...
தமிழ்பேசும் மக்கள் வடக்கு, கிழக்கில் இம்முறை நல்லதொரு வெற்றியை ஈட்டித்தருவார்களேயானால் 2016ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கான தீர்வை நிச்சயம் பெற்றுத்தருவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமாகிய இரா.சம்பந்தன் தெரிவித்தார். நடைபெறவுள்ள தேர்தல் செயல்முறை தொடர்பில் கட்சியின் மாவட்ட கிளைக் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் விளக்கமளித்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தமிழ்த்...
எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு எண் இதுவரையில் வெளியாகியுள்ளது. அதற்கிடையில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைத்துள்ள விருப்பு எண் 15ஆகும். மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுர குமார திஸாநாயக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதோடு அவருக்கு கிடைத்துள்ள விருப்பு 10. இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு கிடைத்துள்ள விருப்பு 16. அவர் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.