மகிந்த ராஜபக்ச நிதியமைச்சராக பதவி வகித்த காலத்தில் 20 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட இலங்கை வங்கியின் பணம் கடனாக வழங்கப்பட்டமை சம்பந்தமான விடயத்தில் குற்றவாளி என பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் (கோப்) அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
இரண்டு நிறுவனங்கள் மற்றும் இரண்டு அரசசார்பற்ற நிறுவனங்கள் இலங்கை வங்கியிடம் இருந்து பெற்ற 627 கோடி ரூபா கடனை மீள செலுத்தவில்லை.
அத்துடன் 19 ஆயிரத்து 375 கோடி ரூபாவை...
ஒரே அணி, ஒரே தலைமை, ஒரே குரலில் தமிழ்மக்கள் சார்பாக பேசக் கூடிய த.தே.கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்யுங்கள்!
Thinappuyal -
கடந்த 2010 ஆண்டு நடந்த தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போடப்பட்ட மொத்த வாக்குகள் 148,503 ஆகும். இதில் 19,774 வாக்குகள் (13.32%) செல்லுபடியாகாத வாக்குகள் ஆகும்.
இதே நிலைமை வேறு தேர்தல் மாவட்டங்களிலும் காணப்பட்டன. இந்த செல்லுபடியாகாத வாக்குகளில் 5 % குறைவாகப் பெற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களும் அடங்கும்.
விகிதாசார வாக்களிக்கும் முறை 1978 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட யாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்னர்...
எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் மாட்டப்பட்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் படம் திடீரென அகற்றப்பட்டுள்ளது.
Thinappuyal -
எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் மாட்டப்பட்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் படம் திடீரென அகற்றப்பட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக மைத்திரிபால சிறிசேனவே இருக்கும் நிலையில், கொழும்பு 7இல் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் அவரது படம் மாட்டப்பட்டிருந்தது.
எனினும், நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் அங்கு செய்தியாளர் மாநாட்டை நடத்திய போது, மைத்திரிபால சிறிசேனவின் படம் அகற்றப்பட்டு, அங்கு வெற்றிலைச் சின்னத்துடன்...
எதிர்வரும் தேர்தலை தமிழ் மக்கள் மக்கள் தங்களது பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கான பேரம் பேசும் தேர்தலாக மாற்றிக்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளரான பொன்.செல்வராசா தெரிவித்தார்.
Thinappuyal -
எதிர்வரும் தேர்தலை தமிழ் மக்கள் மக்கள் தங்களது பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கான பேரம் பேசும் தேர்தலாக மாற்றிக்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளரான பொன்.செல்வராசா தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை வேட்பாளர் பொன்.செல்வராசாவின் தேர்தல் பிரசாரப் பணிகள் புதன்கிழமை பிற்பகல் மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டன.
இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்கு விசேட பூஜைகள் நடாத்தப்பட்டதுடன் அரசடி பெரியதம்பிரான ஆலயத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதல் தேர்தல்...
கொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மனைவியை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடச் செய்ய எடுத்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த முயற்சியை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொலை செய்யப்பட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் மனைவி சசகிலா ராவிராஜை எப்படியாவது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடச் செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட செய்ய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சி மேற்கொண்ட...
நாட்டின் பிரதமரை தெரிவு செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவே பிரதமரை தெரிவு செய்வதற்கு தேவையானது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் தெரிவு தொடர்பில் ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கருத்து ஜனநாயக விரோதமானது.
பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரை ஆதரிக்கின்றார்களோ அவரையே பிரதமராக தெரிவு செய்ய வேண்டும்.
அவ்வாறான ஒருவரை நியமிப்பதே ஜனாதிபதியின் கடமையாகும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர்...
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் ‘தேசத்துக்கு உயிர் கொடுப்போம் மஹிந்தவுடன் ஒன்றிணைவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் இன்று வெள்ளிக்கிழமை அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது. கூட்டத்தை ஆரம்பிக்கிறார் மஹிந்த!
Thinappuyal -
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் 'தேசத்துக்கு உயிர் கொடுப்போம் மஹிந்தவுடன் ஒன்றிணைவோம்' என்ற தொனிப்பொருளின் கீழ் இன்று வெள்ளிக்கிழமை அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.
இக்கூட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்ட தினேஷ் குணவர்தன, இலங்கை வரலாற்றில் மிகவும் பிரபல்யமான புண்ணியஸ்தலங்கள் அமைந்துள்ள அநுராதபுரத்திலிருந்து மஹிந்தவை பிரதமராக்குவதற்கான...
ஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கைப் பிரகடனம் அடுத்த வாரத்தில் வெளியிடப்பட உள்ளதாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
Thinappuyal -
ஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கைப் பிரகடனம் அடுத்த வாரத்தில் வெளியிடப்பட உள்ளதாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
ஓராண்டு காலத்திற்குள் பத்து லட்சம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்குதல், பாரிய அபிவிருத்தித் திட்டங்கள், மக்களுக்கு பல்வேறு வழிகளில் நிவாரணங்களை வழங்குதல் போன்ற நலன் திட்டங்களை உள்ளடக்கிய ஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கைப் பிரகடனம் விரைவில் வெளியிடப்படும்.
மேல் மாகாணத்தை நகரீக வலயமாக மாற்றுதல், 2500 கிராம வீதிகளை புனரமைத்தல்,...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக, ஜே.வி.பி கட்சி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கான வரப்பிரசாதங்கள் மற்றும் உரிமைகளுடன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதனால், ஏனைய வேட்பாளர்களின் உரிமை மறுக்கப்படுகிறது என ஜே.வி.பி சுட்டிக்காட்டியுள்ளது.
இன்று மனித உரிமை ஆணைக்குழுவில் இது குறித்து ஜே.வி.பி முறைப்பாடு செய்யவுள்ளது.
1986ம் ஆண்டு 4ம் இலக்க ஜனாதிபதி உரிமைச் சட்டத்திற்கு அப்பால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு வரப்பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன.
இதனால் ஏனைய வேட்பாளர்களுக்கு...
நாட்டை மாத்திரமன்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் நாசமாக்கியுள்ள மஹிந்த ராஜபக்சவை அரசியல் ரீதியாகத் தோற்கடிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தவறிவிட்டதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஜனவரி 8ம் திகதி மஹிந்த ராஜபக்சவின் நிர்வாகம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அரசாங்கத்தை அமைத்த போதும் மஹந்த ராஜபக்சவை அரசியல் ரீதியாகத் தோற்கடிக்கத் தவறியிருப்பதாக அவர் கூறினார்.
கட்சித் தலைமையகத்தில்...