எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது திருகோணமலை மாவட்டத்தில் வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி என்.ஏ.ஏ.புஸ்பகுமார தெரிவித்துள்ளார். இதன்படி இம்முறை வாக்கெண்ணும் நடவடிக்கை திருகோணமலை தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னர் வாக்கெண்ணும் பணிகள் திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் திருமலை வித்தியாலம் ஆகிய இடங்களில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் இம்முறை குறித்த இரு இடங்களையும் வாக்கெண்ணும் பணிகளுக்காக பயன்படுத்த போவதில்லை என மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி மேலும்...
வவுனியா நொச்சிக்குளத்தைச் சேர்ந்த பெண்மணியொருவர் பணத்திற்கு ஆசைப்பட்டு தனது 7 பவுண் தாலிக்கொடியை நேற்று முன்தினம் திருடர்களிடம் பறிகொடுத்த பரிதாப சம்பவமொன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. மேற்குறித்த சம்பவம் குறித்து வவுனியா பொலிஸார் தெரிவிக்கையில், நாகரீகமாக உடையணிந்த ஆணொருவரும் பெண்ணொருவரும் நொச்சிக்குளத்தை சேர்ந்த பெண்மணியை அணுகி தாங்கள் இரத்தினபுரியிலிருந்து வந்திருப்பதாகவும் தங்களிடம் இரத்தினக்கல் ஒன்று இருப்பதாக சிங்களம் மற்றும் தமிழ் கலந்த கொச்சை தமிழில் பேசியதுடன் இரத்தினக்கல்லின் பெறுமதி 15 லட்சம் ரூபா...
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நான் நடு நிலையாகவே செயற்படுவேன். எனக்கு எந்த கட்சி வெற்றி பெறும் என்பது முக்கியமல்ல. ஜனவரி 8ம் திகதி பெற்ற வெற்றியை பாதுகாக்கும் வகையிலான அரசாங்கம் ஒன்றே எனக்கு அவசியமாகும்,,, ..மஹிந்த ராஜபக்சவுடன் ஜனவரி 8 ம் திகதிக்கு முன்னர் இருந்த எதிர்ப்பு இன்னும் உள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச வெற்றிபெற மாட்டார். அவர் தொடர்ந்து...
video
இந்த ஆட்டம் எப்படி..? முகநூல்களைக் கலக்கும் இந்த வீடியோ காட்சிகள்…….
தேர்தல் சுவரொட்டிகள் பேருந்துகள் மீது ஓட்டப்பட்டிருந்தால் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் மீதே சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர் எச்சரித்துள்ளார். யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் சாரதிகள் , நடத்துனர்கள் , போக்குவரத்து சபை ஊழியர்கள் மற்றும் பேருந்து நிலைய பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களை சந்தித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன அவற்றை பொலிசார் அகற்றி வருகின்றார்கள். இலங்கை போக்குவரத்து சபைக்கு...
video
இலங்கையில் உள்ள இணைய பாவனையாளர்களிடையே தற்போது அதிகம் பேசப்படும் விடயமாக பொலிஸாருடன் மோதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண்ணின் காணொளி மாறியுள்ளது. போக்குவரத்து பொலிஸாரிடம் வாக்குவாதம் செய்து தலைக்கவசம் ஒன்றையும் எடுத்துச் சென்ற அவரின் காணொளி இணையத்தில் தீ போல பரவியுள்ளது. பொலிஸ் அதிகாரிகள் அவரது சாரதி அனுமதிப் பத்திரத்தை எடுத்துக்கொண்டமையால் ஆத்திரமடைந்தமையாலேயே அவர் அவ்வாறு நடந்துகொண்டுள்ளார். அதி சொகுசு பி.எம்.டபிள்யூ காரில் வந்த குறித்த பெண் கைதுசெய்யப்பட்டு பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன்...
  வடமாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சினால் முன்னாள் போராளிகள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள், மாவீரர் குடும்பங்களுக்கு உதவும் செயற்றிட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வரும் என மாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் காலை மேற்படி செயற்றிட்டம் தொடர்பில் அமைச்சின் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில், கடந்த 2014.12.19ம் திகதி...
திர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் வேட்பாளர்களாக 9 பேரின் பெயர்கள் யாழ்.தேர்தல் மாவட்டத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி யாழ்.மாவட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டிருக்கும் 9 பேரின் பெயர்களாக சி.க.சிற்றம்பலம், சொலமன் சிறில், நாச்சியார் செல்வநாயகம், மயில்வாகனம் தேவராஜ், அந்தோனிப்பிள்ளை மேரியம்மா, மேரிகமலா குணசீலன், சூ.செ.குலநாயகம், கனகநமநாதன், அ.குணபாலசிங்கம் ஆகியோர்...
ஐ படத்திற்கு பிறகு தனுஷ், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார் எமி ஜாக்ஸன். மேலும், இவர் உதயநிதிக்கு ஜோடியாக கெத்து என்று படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பின் போது எமி ஜாக்ஸன் ஒரு மலைச்சரிவில் இருந்து தவறி விழ, உடனே கருணாகரன் அவரை காப்பாற்றினார் என்று ஒரு செய்தி வந்தது. இதனால், அவர் வீட்டில் என்ன நடந்தது என்பதை சமீபத்தில் உதயநிதி முன்னணி வார...
Total அஜித் எப்போதும் சினிமா சம்மந்தப்பட்ட எந்தவிதமான விழாக்களிலும் கலந்துக்கொள்ள மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால், திரைத்துறையில் யாராவது காலமாகினால் முதல் ஆளாக வந்து நிற்பார். தற்போது அதிலும் அஜித் சில காலங்களாக கலந்து கொள்வதில்லை, கே.பாலசந்தர், பாலுமகேந்திரா போன்ற ஜாம்பவான்கள் மரணமடைந்த போது கூட அஜித் வரவில்லை. அதேபோல் நேற்று காலமான இசையுலகின் ஜாம்பவான் எம்.எஸ்.வியின் மரணத்திற்கு வராதது அனைவரிடையே பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. இது குறித்து விசாரிக்கையில் அஜித்...