தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்கள் ஆதரவாளர்களால் அழைத்து வரப்படும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது. இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களான சீ.யோகேஸ்வரன், பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், ஞா.ஸ்ரீநேசன், கு.சௌந்தரராஜா, கோ.கருணாகரம், இரா.துரைரெட்ணம், எஸ்.வியாளேந்திரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர். அத்தோடு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கும் இவர்களால் மலர் மாலை சூட்டப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களின்...
  இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்திற்குள் த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர் சுமந்திரன் தொலைபேசியில் உரையாடியமை ஊடாக தேர்தல் திணைக்களத்திற்கும் கூட்டமைப்பிற்கும் இடையில் தொடர்புகள் உள்ளதாகவும், முறைகேடுகள் நடைபெறும் எனவும் ஈ.பி.டி.பி சுமத்திய குற்றச்சாட்டை கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. இன்றைய தினம் வேட்புமனுத் தாக்கல் செய்ததன் பின்னர் வேட்புமனுக்கள் தொடர்பாக ஆட்சேபனை தெரிவிக்கும் நேரத்தில், தேர்தல் திணைக்களத்திலிருந்து வந்திருந்த தொலைபேசி அழைப்பினை சுமந்திரன் எடுத்திருந்தார். இந்தநிலையில் அது முறைகேடு என ஈ.பி.டி.பி குழப்பம்...
புங்குடுதீவில் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி வித்தியாவின் இரத்த மாதிரியும், சந்தேக நபர்களது இரத்த மாதிரியும் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டு பெறப்பட்ட அறிக்கை இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மே 13 ஆம் திகதி கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களது மாதிரிகளை இரசாயணப்பகுப்பாய்விற்கு உட்படுத்தி அந்த அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கடந்த வழக்கு விசாரணையின் போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் வீரச்சாவடைந்ததாக இலங்கை அரசு தெரிவித்ததன் பின்னர் - விடுதலைப் புலிகள் அமைப்பு தொடங்கப்பட்டபோது, பிரபாகரனுக்கு உறுதுணையாக இருந்த உலகத் தமிழர் பேரவைத் தலைவரான இரா.சனார்த்தனம் அவர்கள் – மே 2009 இல் இந்திய  ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்திலிருந்து சில…… ”பிரபாகரனை எத்தனையோ தடவை இலங்கை அரசும் மீடியாக்களும் கொலை செய்திருக்கின்றன. ஆனால், அந்த செய்திகளை பிரபாகரன் ஒருபோதும் மறுத்தது கிடையாது. பிரபாகரன் மிக பத்திரமான...
பாராளுமன்றத் தேர்தல் - 2015 வன்னி தேர்தல் மாவட்டம் மா.றோய் ஓய்வு பெற்ற இலங்கை வங்கி முகாமையாளர். இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர் சுய அறிமுகம் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக நான் ஓர் கண்ணியமான வங்கியாளனாகப் பணிசெய்து சகல வளங்களிலும் ஐஸ்வரியவானாகவும், சமுதாயத்தில் மிக உயர் அந்தஸ்திலும்; வாழ்ந்துவந்;த நான், காலத்தின் கட்டாயம் கருதி மக்கள் சேவையில் மனநிறைவுடன் இறங்குகின்றேன். இதற்கான காரணம் என்ன? என்பதை எனது அன்பிற்குரிய மக்களுக்கு...
  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் கீழ் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பொது தேர்தலுக்காக போட்டியிடுவதற்கு ராஜபக்ச குடும்பத்தில் மூன்று பேர் இணைந்துள்ளனர். சமல் ராஜபக்ச, நிரூபமா ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் அவ் வேட்பாளர்களாகும். ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பிரணான்டோவும் தேர்தலில் போட்டியிடவுள்ளார். மாகாண சபை உறுப்பினர் அஜித் ராஜபக்ச இம்முறை பொது தேர்தலில் போட்டியிடவுள்ளார். எனினும் அவர் ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல என தெரிவிக்கப்படுகின்றது.  
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இளம் சுயேட்சை குழு ஒன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையினில் அக்குழு தம்மை வெளிப்படுத்த மறுத்துள்ளது. இக்குழுவின் முதன்மை வேட்பாளரான சுந்தரலிங்கம் சிவதர்சன் என்பவருக்கு 21 வயதாகும். அந்த சுயேட்சை குழுவில் தேர்தலில் போட்டியிடும் 10 பேரில் ஆறு பேர் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அத்துடன் அவர்கள் அனைவரும் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஊடகவியலாளர்களை சந்திப்பதை தவிர்த்து அவர்கள் வேட்புமனுவை தாக்கல்...
  எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாணத்தில் இன்று வேட்புமனுவினை தாக்கல் செய்துள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பினில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (சட்டத்தரணியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் த.தே.ம.மு தமிழ்காங்கிரஸ் கட்சி தலைவர்) செல்வராஜா கஜேந்திரன் (முன்னாள் நா.உ) மணிவண்ணன் (சட்டத்தரணி) ஆனந்தி சிவஞானசுந்தரம் (ஓய்வுபெற்ற அதிபர்-...
தமிழகத்தைச் சேர்ந்த பெண் விவசாயி ஒருவர் உயிரைப் பறிக்கக் கூடிய ரத்தம் தொடர்பான நோயோடு போராடிவந்த 10 வயதுச் சிறுவனின் உயிரை காப்பாற்றியுள்ளார். போடிநாயக்கனூரில் ஏலக்காய் தோட்டத்தில் பணிபுரிந்து வந்த சரண்யா தங்கம் (26), என்பவரின் ஊரிலுள்ள ஒரு அமைப்பில் சில வருடங்களுக்கு முன்பு ரத்தக் குருத்தணு தானம் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது.அதில் பதிவு செய்த 200 கொடையாளர்களில் சரண்யாவும் ஒருவர். கடந்த ஆண்டு 10 வயது சிறுவன்...
சர்வதேச செலவாணி நிதியகம் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு திருப்ப செலுத்த வேண்டிய கடன் தொடர்பாக கிரீஸ் அரசு கொண்டு வந்துள்ள புதிய கடன் உடன்பாட்டிற்கு ஐரோப்பிய நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சர்வதேச செலவாணி நிதியகம், ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிற நாட்டு வங்கிகளுக்கு கிரீஸ் நாடு செலுத்தவேண்டிய சுமார் 310 பில்லியன் யூரோ கடன் தொகையின் இறுதி நாள் கடந்த யூன் 31ம் திகதியே முடிவடைந்தது.கடனை திருப்பி...