இன்று காலை 10.30 மணியளவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பாக வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டபோது தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளியான பிரபாகரன் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக வவுனியா மாவட்டச்செயலகத்துக்கு வருகை தந்திருந்தார். // Posted by Thinappuyalnews on Monday, July 13, 2015   நீங்கள் ஏன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிடுகின்றீர்கள் என அவரிடம் கேட்டபோது எமது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களினால் உருவாக்கப்பட்டது தான் தமிழ்த்...
யாழ்ப்பாணத்தில் காதலன் வீட்டின் முன்பாக யுவதியொருவர் தனக்குத்தானே தீமூட்டி தற்கொலை செய்து கொள்ள முயன்ற பரபரப்பு சம்பவம் பற்றிய மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளன. அச்சுவேலி வடக்கை சேர்ந்த சேர்ந்த 26 வயதான இந்த யுவதி பொலிஸ் கொன்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். தற்போது வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் அச்சுவேலி- இடைக்காட்டை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். நீண்டநாட்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். காதலியுடன் இஸ்டம்போல உல்லாசம் அனுபவித்துவிட்டு,...
வவுனியாவில் இன்று இடம்பெற்ற திருமணம் பலரின் புருவங்களை உயர வைத்துள்ளது. தாயகத்தில் இதுவரை நடைபெற்ற திருமணங்களில் வித்தியாசமானதும் ஆரோக்கியமான நிகழ்வொன்று நடைபெற்றது. வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று இடம்பெற்ற மதிசூதனன் – இரமீலா ஆகியோரின் திருமண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. இதன்போது நலிவுற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த, திருமண தம்பதிகளால் பண உதவி வழங்கி வைக்கப்பட்டது. மணமகனின் தந்தையான முன்னாள் கிராம சேவகரான முத்துராசாவினால் வவுனியா பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டு நலிவுற்ற...
குருணாகல் மாவட்டத்தில் தாம் போட்டியிடவுள்ளதாக வெளியாக தகவலை பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா மறுத்துள்ளார் மஹிந்த ராஜபக்ச குருணாகலில் போட்டியிடுவதை வைத்துக்கொண்டு இந்த வதந்தி பரவியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ச மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் அவரை தொடர வேண்டிய அவசியம் இல்லை. மஹிந்த தொடர்பில் மக்கள் நல்லதொரு தீர்ப்பை வழங்குவர் என்று சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார். ராஜபக்ச மேற்கொள்ளும் அனைத்து சூழ்ச்சிகளும் முறியடிக்கப்படும் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று விசேட அறிவிப்பை நிகழ்த்தவுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் தாம் செயற்பட உள்ள விதம் தொடர்பில் ஜனாதிபதி அறிவிக்கவுள்ளார். இம்முறை நாடாளுமன்றத் தேர்தலின் போது கட்சிச் சார்பற்ற ஓர் நிலைப்பாட்டை ஜனாதிபதி பின்பற்றுவார் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி மைத்திபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு...
எனது உயிர் துப்பாக்கியால் பறிக்கப்படலாம், மனம் திறந்தார் ஜனாதிபதி மைத்திரி. யாரால் சுடப்படுவார் என விளக்குகிறார் சிரேஸ்ட ஊடகவியலாளர் ரத்தினம் தயாபரன். மைத்திரி கடந்த காலங்களில் இரண்டாம் நிலைத் தலைவர். இன்றைய நிலையில், அடுத்த நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைப்பது யார்...? வட - கிழக்கின் அரசியல்,ஆதிக்கம் யாரிடம், தேர்தல் பற்றி லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் விளக்குகிறார் சிரேஸ்ட ஊடகவியலாளர் ரத்தினம் தயாபரன்.
இலங்கையில் யுத்தத்துக்குப் பின்னரான சூழலில், உள்ளூரில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலைகளிலிருந்தும் பொருளாதாரப் பிரச்சினைகளிலிருந்தும் தப்பி அவுஸ்திரேலியாவுக்கு சென்று வாழ முயன்று தோற்றுப் போனவர்கள் பலர், பல்வேறு துயரங்களுக்கு நடுவே மீண்டும் சொந்த ஊர்களில் வாழ்க்கையைத் தொடங்க முயன்று வருகின்றனர். அப்படியானவர்களில் ஒருவர் தான் வைத்திலிங்கம் லிங்கராஜன். யாழ் குடாநாட்டின் கிழக்குக் கரையோரத்தில் உள்ள கட்டைக்காடு என்ற பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த மீனவர். ஆஸ்திரேலியா செல்லும் கனவு கலைந்துபோன நிலைமையில் பெரும்...
   நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட ஜனாதிபதியாக மூன்றாவது தடவையாகவும் பதவி வகிக்க வேண்டும் என்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இந்த வருடம் ஜனவரி மாதம் நாட்டு மக்கள் மீது வலிந்து ஜனாதிபதி தேர்தலைத் திணித்தார். இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாகப் பதவி வகித்த அவர், அந்த பதவிக்காலம் முடிவடைவதற்கு இரண்டு வருடங்கள் இருந்த நிலையிலேயே இந்த ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அறிவித்தலை வெளியிட்டிருந்தார். மூன்றாம் தடவையாக ஜனாதிபதியாகப் பதவி...
  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை தடுப்பதற்காக நல்லாட்சிக்கான ஐக்கியதேசிய முன்னணியை உருவாக்குதென்ற முடிவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவுடனயே  முன்னெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முன்னணியை அமைப்பதற்கு ஜனாதிபதி தனது முழு ஆதரவை வழங்கியுள்ளதாக பிரதமர் அலுவலகத்தை சேர்ந்த சமன் அத்தாவுடஹெட்டி தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலுள்ள சிறிசேன விசுவாசிகள் வெள்ளிக்கிழமை இரவு ஜனாதிபதியை சந்தித்து தாங்கள் ஐக்கிய தேசிய கட்சி...
  நல்லாட்சியைத் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்வதற்காக எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. ஏழு மாவட்டங்களில் யானை சின்னத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்களில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியுடனும் இணைந்து போட்டியிடவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், வன்னி மற்றும் மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்களில்...