மகாராஷ்டிராவில் சாலையில் நடந்து சென்ற 3 வயது சிறுமி மீது கார் ஒன்று ஏறி இறங்கியும், அந்த குழந்தை சிறு காயங்களுடன் உயிர் பிழைத்த அதிசயம் நடந்துள்ளது.
நாசிக்கில் கடந்த யூன் மாதம் 18ம் திகதி, வீட்டில் இருந்த 3 வயது சிறுமி ஜோயா, திடீரென வீட்டில் இருந்து வெளியே வந்து சாலையைக் கடக்க முயன்றாள்.ஆனால், அப்போது அங்கே வந்த கார் ஒன்று எதிர்பாரா விதமாக அவள் மீது, ஏறி...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவசரமாக தேர்தல்கள் ஆணையாளரை இன்று காலை சந்தித்துள்ளதாக தெரியவருகிறது.
பந்துல குணவர்தன, காமினி லொக்குகே, குமார் வெல்கம ஆகிய முன்னாள் அமைச்சர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
மஹிந்த ராஜபக்ச கையெழுத்திட்டுள்ள வேட்புமனுவில் இருந்து அவரது பெயர் இறுதி நேரத்தில் நீக்கப்பட்டால், அது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மஹிந்த ராஜபக்ச தரப்பு தேர்தல் ஆணையாளருடன் கலந்துரையாடுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனு வழங்கலில் இறுதி முடிவு தமது கைகளில் இருக்கவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
Thinappuyal -
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனு வழங்கலில் இறுதி முடிவு தமது கைகளில் இருக்கவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமது வெற்றிக்காக பாடுபட்ட சிவில் குழுக்களை ஜனாதிபதி கடந்த புதன்கிழமையன்று சந்தித்தார்.
இதன்போது சிவில் குழுக்கள், மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனு வழங்கல் தொடர்பில் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டன.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி தாம் தனிப்பட்ட ரீதியில் மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்கலை எதிர்த்ததாக குறிப்பிட்டார்.
எனினும் இறுதி முடிவு...
குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை! எதிரிகள் இருவரும் விடுதலை!- நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு.
Thinappuyal -
ஒன்பது வருடங்களுக்கு முன்னர் துப்பாக்கி மற்றும் அதற்குரிய தோட்டாக்கள் என்பவற்றுடன் கைது செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு எதிரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படாததைச் சுட்டிக்காட்டி, அவர்களை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி நெல்லியடி பிரதேசத்தில் அதிகாலை 4 மணியளவில் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருந்த இரண்டு இளைஞர்களையே இவ்வாறு விடுதலை செய்து யாழ்ப்பாணம்...
மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவியை கைது செய்ய நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் பிடிவிராந்து உத்தரவு
Thinappuyal -
மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவியை கைது செய்ய நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் பிடிவிராந்து உத்தரவு பெற்றுக்கொண்டுள்ளது.
வெல்லம்பிட்டி பிரதேசத்தில் காணப்படும் சேற்று நிலமொன்றை அண்டிய பகுதிகளில் வசித்து வரும் சட்டவிரோத குடியேற்றக்காரர்களை வெளியேற்றுவதற்காக பெருந்தொகைப் பணத்தை லஞ்சமாக கோரியதாகவும் அதில் 50 லட்ச ரூபா ஏற்கனவே முற்பணமாக பெற்றுக் கொண்டதாகவும் பிரசன்ன மற்றும் அவரது மனைவி மயூரீன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது...
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் இரண்டாவது கணவனுடன் சேர்ந்து 13 வயது சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய தாய் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இங்குள்ள ஒரு பள்ளிக்கு குழந்தைகள் உதவி மைய அதிகாரிகள் சமீபத்தில் வந்திருந்தனர். பிற ஆண்களிடம் எப்படி பழக வேண்டும்?. பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாகாமலிருக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன? என்பது தொடர்பாக ஆறாம் வகுப்பு மாணவிகளிடையே அவர்கள் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.அப்போது,...
“உங்களை காயப்படுத்துவதற்கான கேள்விகளோ, சந்தேகங்களோ அல்ல… நிலவுகின்ற சூழலை புடம் போடுவதற்கான வழிமுறையே…”
Thinappuyal News -
முள்ளிவாய்க்காலின் பின் முன்னாள் போராளிகள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் குறித்து குளோபல் தமிழ்ச் செய்திகள் சார்பில் பலருடன் தொடர்பு கொண்டிருக்கிறேன்.. இவர்களில் பலர் ஆண் போராளிகள்.. பலர் பெண் போராளிகள்...
வாழ்வாதாரப் பிரச்சனைகள் காரணமாக துயரங்களை அனுபவித்தவர்களுக்கு சிலரிடம் இருந்து உதவிகளை பெற்று கொடுத்திருக்கிறேன்... இந்த பதிவைப் பார்க்கும் என்னுடன் தொடர்பு கொண்டவர்களுக்கு இதன் உண்மைத் தன்மை புரியும்...
அண்மையில் முன்னாள் போராளி ஒருவருடன் தொடர்பு கொண்ட போது, தாம் எதிர்கொள்ளும்...
யாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் ” சென். பீற்றர்ஸ் ” தேவாலயம் படுகொலையின் 20 வது நீங்கா நினைவின் நாள்…
Thinappuyal News -
யாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் ” சென். பீற்றர்ஸ் ” தேவாலயம் படுகொலையின் 20 வது நீங்கா நினைவின் நாள்…
இரண்டே நாள்களில் இருநூறுக்கும் அதிக அப்பாவிப் பொதுமக்களை பலி கொண்ட அரச படைகளின் முன்னேறிப் பாய்ச்சல் நடவடிக்கை..1995.07.09 ஆம் திகதியன்று வட பகுதியில் பலாலி இராணுவ முகாமில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் தாம் ஏற்கனவே திட்டமிட்டிருந்த முன்னேறிப் பாய்ச்சல் இராணுவ நட வடிக்கையை வலிகாமம் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகள் ஊடாக...
உறவினர்கள் சுற்றி நிற்க, கணவனை நிர்வாணமாக்கி கண்மூடித்தனமாக காஸ் டியூப்பால் தாக்கும் வீடியோ வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது.
சமூக வலைதளமான வாட்ஸ்அப்பில் தற்போது ஏராளமான அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் வெளியாகி அவ்வப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
லஞ்சம் வாங்கும் போலீஸ், ஹான்ஸ் போடும் சிறுவன், வற்புறுத்தி குடிக்க வைக்கப்படும் சிறுவன், சக அதிகாரியை கெட்ட வார்த்தையால் வறுத்தெடுக்கும் போலீஸ்காரர் என அந்த பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. அந்த வரிசையில்,
உறவினர்கள் தூண்டுதலோடு...
பொதுத் தேர்தல்! யாழில் சுயேட்சையாக போட்டியிடும் அனந்தி – வாக்குகளை சிதறடிக்க சதியா?
Thinappuyal News -
வடமாகாணசபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் சுயேட்சை குழுவாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார். அதற்காக யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
தமிழரசு கட்சியின் உறுப்புனராகவும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினராகவும் உள்ள அனந்தி, தமிழரசு கட்சியிடம் வேட்பாளர் நியமனம் கேட்காமல், ஈ.பி.ஆர்.எல்.எவ் இடம் ஆசனம் கேட்டுள்ளார். இதன்படி கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்குள் செய்யப்பட்ட உடன்படிக்கை காரணமாக அதனை வழங்கவில்லை என தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா நேற்றய...