சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புக்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை மீண்டும் அதிகரிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். உரிய வட்டி விகிதத்தைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை தொடர்ந்தும் தெரிவிக்கையில், சிரேஷ்ட பிரஜைகளினால் வங்கிகளில் வைப்புச் செய்யப்படும் நிலையான வைப்புகளுக்கு வழங்கப்பட்டு வந்த 15% விசேட வட்டி வீத முறைமை இன்று 8% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த...
  வடமராட்சி தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் வாள் வெட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. வாள்களுடன் நேற்றிரவு(31.03.2024) சென்ற குழு ஒன்று பருத்தித்துறை தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் உள்ள நபர் ஒருவர் மீது வாளால் வெட்டியதுடன் வாளால் வெட்டியபோது கீழே வீழ்ந்த கை துண்டையும் ஏடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக சிகிச்சை இதன்போது கையை இழந்தவர் செல்வநாயகம் செந்தூரன் எனும் 30 வயதுடைய இளம் குடும்பத்தர் என கூறப்படுகிறது. இந்நிலையில் வாள் வெட்டுக்கு...
  ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்த அனைவருக்கும் ஏப்ரல் விடுமுறைக்கு பின்னர் நியமனம் வழங்க நடவடிக்கை எடுப்போம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(01.04.2024) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். பரீட்சை பெறுபேறுகள் இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில்,''மேல் மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பரீட்சை நடத்தி, பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையிலும் ஆசிரியர்...
  தெஹிவளை சந்தி, காலி வீதியில் அமைந்துள்ள மேம்பாலத்தில் பயணித்துக் கொண்டிருந்த சொகுசுக் கார் ஒன்று நேற்று இரவு திடீரென தீப்பற்றியுள்ளது. அதனையடுத்து காரின் சாரதி உடனடியாக செயற்பட்டு காரை விட்டு வெளியேறியமையால் காயங்கள் இன்றி தப்பித்துக் கொண்டுள்ளார். இயந்திரக் கோளாறு இதனையடுத்து தெஹிவளை மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. எனினும் கார் எரிந்து சேதமடைந்துள்ளது. இயந்திரக் கோளாறு காரணமாகவே குறித்த கார் தீப்பற்றி இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
  கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு(Bandaranaike International Airport) எரிபொருள் ஏற்றிச் சென்ற தொடருந்துடன் லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து ராகம(Ragama) பேரலந்த தேவாலயத்திற்கு அருகில் உள்ள தொடருந்து கடவையில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் தொடருந்து இயந்திரம் சேதமடைந்துள்ளதாகவும், லொறிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணை இந்நிலையில் விபத்தில் காயமடைந்த லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்தின் போது அருகில் இருந்த மரக்கறி விற்பனை நிலையம் பலத்த...
  கடலில் மூழ்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர். கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் காலை உடல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மேலதிக சிகிச்சை காலி முகத்திடலில் கொடிக்கம்பத்திற்கு அருகில் பெண் ஒருவர் திடீரென கடலில் குதித்துள்ளார். பொலிஸ் ஆய்வாளர் ஏ.எச்.பி.எஸ். அத்தியட்சகர் உள்ளிட்ட குழுவினர் குறித்த பெண்ணை பத்திரமாக மீட்டுள்ளனர். அத்துடன், மேலதிக சிகிச்சைக்காக குறித்த பெண்ணை...
  சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவை(Aswesuma Welfare Allowance) வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இடம்பெற்ற அஸ்வெசும நலன்புரி சபை கூட்டத்தில் இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். பெயர் பட்டியல் கேகாலை(Kegalle), நுவரெலியா(Nuwara Eliya), பதுளை(Badulla) மற்றும் பொலன்னறுவை(Polonnaruwa) மாவட்டங்களில் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்தின் கீழ் 2500 ரூபாவை பெற்றுக்கொள்வதற்கு தகுதி பெற்ற பயனாளிகள்...
  30 லட்சம் ரூபா மோசடி தொடர்பில் நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் லென்லி ஜோன்சன் ஆகியோரை கைது செய்ய முடியாமல் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் திணறுவதாக தெரியவந்துள்ளது. 6 நாட்களுக்கு முன்னர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் பொரலஸ்கமுவவில் உள்ள தமிதா அபேரத்னவின் வீட்டிற்கு சென்றிருந்த போதிலும், இருவரும் ஏற்கனவே வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரியாவுக்கு அனுப்புவதாகக் கூறி 30 இலட்சம் ரூபாவை ஏமாற்றியதாக அவர்கள்...
  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஈஸ்டர் தாக்குதலை நடத்தியது யாரென்ற தகவலைகூறிய அந்த மர்ம நபரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இப்போது தேடத் தொடங்கியுள்ளனர். வெளிநாட்டுத் தூதரகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போதே இந்தத் தகவலை அவர் கூறினார் என்று மைத்திரி, குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் கூறியிருந்தார். இதனையடுத்து இப்போது அந்த நிகழ்வு இடம்பெற்ற இடத்தின் சி.சி.ரி.வி. காணொளிகளை அவர்கள் சோதித்துள்ளனர். கோபமடைந்த நாடு இதேவேளை நல்லாட்சி அரசு சீனாவுடன் நெருங்கிச் செயற்பட்டது. அதன் காரணமாக, கோபமடைந்த...
  சுன்னாகம் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் தேங்காய் உடைத்துவிட்டு வந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சின்னத்தம்பி அர்ஜீனன் என்ற 68 வயதானவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். ஆலயமொன்றுக்கு தேங்காய் உடைத்துவிட்டு வந்த முதியவர் இயலாத நிலையில் வரம்பொன்றில் அமர்ந்த நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இறப்புக்கான காரணம் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. உடற்கூற்றுப் பரிசோதனையில் இறப்புக்கான காரணம் தெரியவரும் என கூறப்படுகின்றது.