யாழ்.பல்கலைக்கழகப் போராட்டம் பெருவெற்றி! தமிழ் சமூகம் முழு ஆதரவு!! 4 ஆயிரம் வரையான மக்கள் பங்கேற்பு யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் மிகப்பெரும் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பு படுகொலைகள் தொடர்பிலான ஐ.நா விசாரணை அறிக்கையை வெளியிடுமாறு வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் காலை 10 மணியளவினில் பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகியிருந்தது. யாழ்.பல்கலைக்கழக சமூகம் மற்றும் பொது ஜன அமைப்புக்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த...
    இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. விசாரணை அறிக்கையை விரைவில் வெளியிடுமாறு வலியுறுத்தியும், இறுதிப் போரில் அரச படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கோரியும் யாழ். பல்கலைக்கழக சமூகத்தின் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகியது. பேரணி இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் இருந்து ஆரம்பமாகி இராமநாதன் வீதியூடாக பலாலி வீதியை அடைந்து கந்தர்மடம் சந்தியில் திரும்பி...
  நாட்டைத் துண்டாடி பயங்கரவாதத்தை விதைத்த கரும்புலிகளுக்க சுதந்திர தினத்தன்று விடுதலையளிக்கப்பட்டதாகவும் எனினும் நாட்டைக் காப்பாற்ற முன் வந்த தலைவனோடு சேர்ந்தியங்கிய தமக்கெதிராக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் விசனம் வெளியிட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச. இன்று காலை குற்றப்புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலமளித்து வெளியேறிய சந்தர்ப்பத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதோடு தனது குழந்தைகளுக்கு எதிராகவும் முறைப்பாடுகள் வரக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் நுகேகொட கூட்டத்தின் பின்னரே இவ்வாறு நடப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனினும், இன்றைய தினம் இடம்பெற்ற...
    மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆரையம்பதி தாளங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலயத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் 6.5 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய மாடிக்கட்டிடத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமனற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரன் ஆகியோர் திறந்து வைத்தனர். பாடசாலை அதிபர் சா.மதிசுதன் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா வைபவத்தில் மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் உட்பட கல்வி அதிகாரிகள் பலர் கலந்து...
  பொத்துவில் தகரம்பல காட்டுக்குள் நேற்று முன்தினம் காணாமல்போன நபர் இன்று மாலை 4.00 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். அட்டாளைச்சேனை – 2 ஆம் பிரிவியைச் சேர்ந்த சேகு இஸ்மாயில் அப்துல் றஹீம் (வயது42) என்ற நபரே காணாமல்போய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். பொத்துவில் பொலிஸாருடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரும் காணாமல் போன நபரின் குடும்ப உறவினர்களுடன் இணைந்து பொத்துவில் தகரம்பல மற்றும் உடும்பங்குளம் காட்டுப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இத்தேடுதல் நடவடிக்கை...
    இனவாதத்தை இல்லாதொழிக்கும் பயணத்தில் தாம் எடுத்த நடவடிக்கைகளுக்கு இரண்டு குழுக்கள் எதிர்ப்பை வெளியிட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். குருநாகலில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் ஒன்றே வடக்கு மாகாணசபை முதல்வரின் இனவாத கருத்தெனவும் , அதற்கான பதிலை கன்னத்தில் அறைந்தால் போல சர்வதேச சமூகம் வழங்கியதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதார். இங்கு கருத்து வெளியிட்ட பிரதமர் அச்சு ஊடகங்கள் தொடர்பிலும் தனது அதிருப்தியை...
  ஐநா தீர்மானத்தை எரித்தவர்கள் எங்களுடைய மக்களின் நலன்களுக்காக எதையும் செய்யவில்லை-சுமந்திரன்:-  ஐநா தீர்மானத்தை எரித்தவர்கள் எங்களுடைய மக்களின் நலன்களுக்காக எதையும் செய்யவில்லை-சுமந்திரன்:- காணொளி நன்றி : கயீபன்
  தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நீர்கொழும்பு ஹோட்டலில் கடந்த சனி, ஞாயிறு தினங்களில் இடம்பெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டது. தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைவதால் அக்கட்சிக்கு வழங்கப்பட வேண்டிய அமைச்சுப் பதவிகள், அரச பதவிகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் விரைவில் பேச்சு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்தக்...
  இலங்கையின் உள்நாட்டுப்போரின் இறுதியில், நாட்டின் வடக்கே விஸ்வமடு அருகில் 30,000 முதல் 35,000த்துக்கும் அதிகமான சடலங்கள் இருந்ததாக அந்த சடலங்களுக்கு பிரேதபரிசோதனை செய்யச் சென்ற   அதிகாரிகள் மூலம் அறிந்ததாக மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்திருக்கிறார். இரண்டு கிழமைகளுக்கு முன்னரே தமக்கு இந்த தகவல் தெரியவந்ததாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்த ராயப்பு ஜோசப், இலங்கை போரின் இறுதிப்போரில் நடந்தது இனப்படுகொலையே என்று இலங்கையின் வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சரியென்றும் தெரிவித்தார். போரின்...
  வாரிஸ் டைரி! உலகின் முன்னணி ஆஃப்ரிக்க மாடல் அழகி. லாரா ஸிவ், உலகின் முன்னணி ஃபேஷன் பத்திரிகையான ‘மேரி க்ளேய்ர்’ நிருபர். வாரிஸ், தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார். ‘‘சோமாலியாவில், கரடுமுரடான ஒரு பாலைவனக் கிராமத்தில்தான் நான் பிறந்தேன். எங்களது நாடோடிக் குடும்பம். இங்குள்ள பாத்ரூமைவிட மிகச் சிறியது எங்கள் குடிசை. பசுமையே பார்த்திராத கண்கள் என்றாலும், எல்லா குழந்தைகளையும்போல நானும் சந்தோஷமாகத்தான் இருந்தேன். ஆடு மாடுகளை மேய்ப்பேன். வரிக்குதிரைகளோடு ஓடுவேன்....