சிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆவர்களின் 6ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும். தமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு இத்தளங்கள்...
  இலங்கை குறித்த ஐ.நாவின் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமைக்கு சில நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஐ.நாவின் உறுப்புரிமை கொண்ட ஜப்பான், அமெரிக்கா, சீனா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் அறிக்கை பிற்போடப்பட்டமைக்கு ஆதரவளித்துள்ளன. ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரவதிவிடப் பிரதிநிதி காரியாலயம் இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு இது குறித்து கால அவகாசம் வழங்க வேண்டும் என அந்த நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன. யுத்த காலத்தில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித...
    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திரி என அழைக்கப்படுகின்ற கௌரவ.எம்.சுமந்திரன் (பா.உ) அவர்களது கொடும்பாவி இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஒரு கண்டனப்பேரணியில் எறியூட்டப்பட்டிருக்கின்றது. சர்வதேச அரங்கிலும், இலங்கையிலும் தமிழ் மக்கள் மத்தியில் வளர்ந்தும் வரும் சுமந்திரன் மீதான செல்வாக்கு, குறிப்பாக யாழ் மண்ணில் கற்றறிந்த தமிழ் மக்கள் மத்தியில் வளர்ந்துவரும் அங்கீகாரம் என்பவற்றை கண்டு எழுந்திருக்கின்ற பொறாமையும் ஆற்றாமையும், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தம்முடைய இருப்புக்கு எதிராக சுமந்திரனின் தேர்தல் வெற்றி...
  மக்களை பிழையான பாதையில் கட்சிகள் வளிநடத்தகூடாது -இரா.சம்பந்தன் இனப்படுகொலை தொடர் நாம் தெளிவாக உள்ளோம் ஜ.நா விசாரனை பிற்போடப்பட்டமையானது தாக்கத்தை ஏற்படுத்தப்போவதில்லை ஜனாயக ரீதியாக நாம் சரியான திட்டங்களை வகுத்து வருகிறோம்-இரா.சம்பந்தன் யாழ் நகரில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான மகளிர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கொடும்பாவி எரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில்...
  ஜனாதிபதி பதவி மற்றும் அந்த பதவிக்குரிய அதிகாரங்களை நீக்குவது குறித்து அரசியலமைப்பு உருவாக்கல் குழுவில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. ஜனாதிபதி பதவியையும் அதற்கான அதிகாரங்களும் நீக்கப்பட வேண்டும் என்பதே அரசியல் கட்சிகளில் நிலைப்பாடாக இருந்து வருகிறது. உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் ஜனாதிபதி பதவி மற்றும் அதற்குரிய அதிகாரங்கள் உள்ளடக்கப்படக் கூடாது என ஜே.வி.பி அரசியலமைப்பு உருவாக்கல் குழுவிற்கு அறிவித்துள்ளது. தற்போதைய ஜனாதிபதி பதவி மற்றும் அதற்கான அதிகாரங்கள் அமுலில் இருந்தாலும் ஜனாதிபதி மைத்திரிபால...
  யாழ் நகரில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான மகளிர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கொடும்பாவி எரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் உண்மை நிலையை வெளிப்படுத்தக் கோரியும், அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கை குறித்த போர்க்குற்ற விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கக் கோரியும்...
  காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் உண்மை நிலையை வெளிப்படுத்தக் கோரியும், அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கை குறித்த போர்க்குற்ற விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கக் கோரியும் யாழ். நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. தொடர்ந்து பேரணியாகச் சென்றவர்கள் ஆஸ்பத்திரி வீதியூடாக காங்கேசன்துறை வீதிக்குச் சென்று தமிழாராய்ச்சி மாநாடு படுகொலை நினைவுச்சின்னம் அமைந்துள்ள இடத்தை அடைந்ததனர். அங்கு பொதுக்கூட்டம்...
  ஐநா அறிக்கை பிற்போடப்பட்டதை கண்டித்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நாளை சனிக்கிழமை 21.02.2015   யாழ்ப்பாண மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்னால் நடைபெற உள்ளது.இவ் மாபெரும் கவனயீர்பு போராட்டத்தை   சரணடைந்த மற்றும் காணாமல் போனவர்களை தேடும் உறவினர் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  மடு பெரிய பண்டிவிரிச்சான் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வு... மடு பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வு 06-02-2015 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் ஆரம்பமானது, நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிபம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக மடு கோட்ட உதவி கல்விப்பணிப்பாளர் திரு.எமிலியாம்பிள்ளை அவர்களும் கலந்து...