கட்சியின் முடிவை மீறி முஸ்லீம் காங்கிரசுடன் இரகசிய ஒப்பந்தம் செய்த தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள்!
Thinappuyal News -0
கிழக்கு மாகாணசபை ஆட்சி தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பினதும், தமிழரசுக்கட்சியினது தலைமையினதும் கட்டுப்பாடுகளை மீறி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் ஒப்பந்நமொன்றை செய்துள்ளனர் இலங்கை தமிழரசுக் கட்சியின் சில உறுப்பினர்கள். கிழக்கு மாகாண அமைச்சர் பதவியை பெறுவதற்காக அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக தமிழரசுக்கட்சியினரால் குற்றம்சுமத்தப்படுகிறது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் செயலாளர் சட்டத்தரணி கே.துரைராஜசிங்கமும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் அதன் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான...
சமீபத்தில் லிபியா தேசத்தின் கடற்கரை பகுதியில் அழைத்து வரப்பட்ட 21 கிறிஸ்தவர்களை இஸ்லாமிய தீவிரவாதிகள் என்ற மிருக பயங்கரவாதிகள் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இந்த காணொளி காட்சி இந்த வலைப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.. இருதயம் பலகீனமானவர்கள் யாரும் பாக்க வேண்டாம்.
Thinappuyal News -
நிலத்தில் விழுந்த கோதுமை மணி
மரண பயம் அறியா கிறிஸ்தவ கோதுமை மணிகள் - "என் இயேசுவே" என்று பாடி கொண்டே உயிரை விட்ட மாவீர்கள்.
இந்த உலகின் இறுதி நாட்களுக்கு அழைத்து செல்லும் முக்கியமான நிகழ்வுகள். ஆதாரம்: பிபிசி தொலைகாட்சி மற்றும் Fox தொலைகாட்சி மற்றும் அல்-ஜசீரா தொலைகாட்சி நிறுவனங்கள்
சமீபத்தில் லிபியா தேசத்தின் கடற்கரை பகுதியில் அழைத்து வரப்பட்ட 21 கிறிஸ்தவர்களை இஸ்லாமிய தீவிரவாதிகள் என்ற மிருக பயங்கரவாதிகள் கழுத்தை...
திருப்பதியில் சிறிசேன தரிசனத்துக்காக உடைக்கப்பட்ட தங்கக் கதவின் பூட்டு! வெடித்துள்ள சர்ச்சை!
Thinappuyal News -
திருப்பதிக்கு வந்த இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன வழிபாட்டுக்காக தங்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டதால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
இந்தியாவுக்கு அரசு முறைப் பயணமாக வந்த இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, தனது மனைவியுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
சுப்ரபாதம் சிறப்பு தரிசனத்தில் நேற்று புதன்கிழமை காலை சுவாமியை தரிசனம் செய்ய சிறிசேன வந்த போது, ஏழுமலையான் கோயிலின் மூலவர் அறையின் தங்கக் கதவுகளை திறக்க...
மாற்றம் அமைப்பின் நிகழ்ச்சியில் வடமாகாண அமைச்சர்கள் பங்கேற்கமாட்டார்கள் விக்னேஸ்வரன் அறிவிப்பு!
Thinappuyal News -
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்களும் மாகாண அமைச்சர்களும் பங்கேற்பதாக சேஞ்ச் என்ற நிறுவனம் வெளியிட்டிருக்கும் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்நிகழ்ச்சியில் வடக்கு மாகாண அமைச்சர்கள் பங்கேற்கமாட்டார்கள் என முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் சேஞ்ச் அமைப்பின் பொதுச்செயலாளர் ஜியாஉல் ஹசன் ரவூப் என்பவருக்கு கடிதமூலம் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 22 ஆம் திகதி சேஞ்ச் நிறுவனம் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்களான சுகாதார அமைச்சர்...
மஹிந்த விட்டுச்சென்ற குறைப்பணியை தொடரும் மைத்திரி! நெடுங்கேணி தமிழ் பிரதேசத்துக்கு தனிச்சிங்கள அரச அதிகாரிகள் நியமனம்!
Thinappuyal News -
முல்லைத்தீவு மாவட்டத்தின் ‘மணலாறு’ தமிழ் பிரதேசத்தை ‘வெலிஓயா’ எனப்பெயர் மாற்றி, அங்கீகரிக்கப்படாத தனிச்சிங்கள பிரதேச செயலகப்பிரிவாக அதனை உருவாக்கியிருந்த சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ,
வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலக பிரிவுக்குள்பட்ட தனித்தமிழ் கிராமங்கள் சிலவற்றையும் வெலிஓயாவுடன் இணைப்பதற்கு கடும் பிரயத்தனங்களையும், சில முன்னாயத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தார்.
அதன் ஓர் அங்கமே, வவுனியா மாவட்டத்துக்கு அரச அதிபராக தனிச்சிங்கள பௌத்தர் பந்துல ஹரிச்சந்திர அவர்களும், வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகப்பிரிவின் உதவித்திட்டமிடல் பணிப்பாளராக...
தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஒரு முழுமையான அரசியல் கட்சியாக- வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன்
Thinappuyal News -
தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஒரு முழுமையான அரசியல் கட்சியாக மிளிரச்செய்வதற்கான அழுத்தத்தை வழங்குவதற்கான சந்தர்ப்பமாக எமது மக்கள் கரைதுரைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு தேர்தல்களைப்பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
கடந்த காலங்களில் மக்கள் தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்காகத்தொடர்ந்தும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கே வாக்களித்து வந்துள்ளனர். இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலிலும் சர்வாதிகார ஆட்சியை மாற்றி முழுநாட்டிற்குமே உண்மையான ஜனநாயக...
ஆற்றல் மிகுந்த அன்னாரது இழப்பினால் துயருறுகின்ற மனைவி இ பிள்ளைகள் இஉற்றார்இ உறவினர்கள் அனைவருக்கும் -இ.இந்திரராசா வடமாகாண சபை உறுப்பினர் வவுனியா மாவட்டம்
Thinappuyal News -
சமூக சேவையாளரின் இழப்பு எமக்குப் பேரிழப்பாகும்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர் கௌரவ வீரவாகு
கனகசுந்தரசுவாமியின் மறைவையிட்டு ஆழ்ந்த கவலை அடைகிறேன். முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பை
பிறப்பிடமாக கொண்ட இவர் புதுக்குடியிருப்பு சிறிசுப்பிரமணிய வித்தியாசாலைஇ முள்ளியவளை வித்தியானந்த
கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.
கிராமசேவையாளராக முல்லை மாவட்டத்தின் பல்வேறு கிரமங்களில் அளப்பரிய சேவையாற்றிய இவர் தமிழ்
மக்களுக்கெதிராக இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட இறுதி யுத்தத்தின் போதும் மக்களோடு மக்களாக இருந்து
ஆற்றிய பணிகள்...
வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் முன்வைக்கப்பட்ட மாவீரர்களின் குடும்பங்கள்,புனர்வாழ்வு பெற்ற போராளிகள், அரசியல் கைதிகளின் குடும்பங்கள் ஆகியோருக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டம்
Thinappuyal News -
வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் முன்வைக்கப்பட்ட மாவீரர்களின் குடும்பங்கள்,புனர்வாழ்வு பெற்ற போராளிகள், அரசியல் கைதிகளின் குடும்பங்கள் ஆகியோருக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டமானது வடக்குமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினூடாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது, எனவே நாளை முதல் சகல கிராம / மாதர் கிராம அபிவிருத்திசங்கங்களிடமும் படிவங்களை பெற்று சரியான தரவுகளை பூர்த்தி செய்து எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு சகலதரப்பினரையும் அமைச்சர் பணிக்கின்றார். இத்துடன் படிவங்களும் இணைக்கப்பட்டுள்ளது.
கிராம அபிவிருத்தி திணைக்களம்
வடமாகாணம்
புனர்வாழ்வு
அளிக்கப்பட்டு குடும்பங்களுடன் வசிக்கும ; போராளிகளின் தரவுப்படிவம்
01.முழுப ;பெயர் :-.........................................................................................................
02.பால் ஆண்ஃபெண் .............................................................................................
03.வயது :-.......... ஆண்டு.........................மாதம்................................திகதி.....................
04.நிரந்தர முகவரி:.........................................................................................................
05.தற்காலிக முகவரி:..................................................................... ................................
06.தேசிய அடையாள அட்டை இல:-....................................................................................
07.கிராம சேவகர் பிரிவு :.................................... ..... .............. இலக்கம்:...............................
08.பிரதேச செயலாளர் பிரிவு:-.............................................................................................
09.மாவட்டம ;:-...............................................................................................................
10.கல்வித ; தகமை:-........................................................................................................
11.தற்போது செய்யும் தொழில் :-........................................................................................
12.மாத வருமானம்:-........................................................................................................
13.கைது செய்யப்பட்ட ஆண்டு :...............................மாதம்.......................திகதி.......................
14. புனர்வாழ்வு பெற்ற நிலையம்: ....................................................................................
15.புனர்வாழ்வு பெற்று வெளியேறிய ஆண்டு:..................மாதம் ...................திகதி.....................
16.உடல் அவயங்கள ; இழந்திருப்பின்...
மூன்று நாள்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் மார்ச் மாதம் 13ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இலங்கை வரவுள்ளார்.
Thinappuyal News -
மூன்று நாள்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் மார்ச் மாதம் 13ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இலங்கை வரவுள்ளார். இந்தத் தகவலை அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையின் மனித உரிமைகள் மீறல் தொடர்பான அறிக்கை காலம் தாழ்த்தாமல் எதிர்வரும் மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளிவரவேண்டும் என்பதே எமது விருப்பமாகும் என்று தெரிவித்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.
Thinappuyal News -
இலங்கையின் மனித உரிமைகள் மீறல் தொடர்பான அறிக்கை காலம் தாழ்த்தாமல் எதிர்வரும் மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளிவரவேண்டும் என்பதே எமது விருப்பமாகும் என்று தெரிவித்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.
எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருந்தது. எனினும் விசாரணை அறிக்கை தாக்கல் செய்வதை பிற்போடுமாறு இலங்கை தரப்பில் கோரிக்கை...