சிறிலங்கா, லிபியா ஆகிய இரண்டு நாடுகளிலும் நடந்த இறுதிப் போர்களின் முடிவு ஒரே மாதிரி அமைந்துள்ளது. போர்க்குற்றங்களும் ஒரே தன்மை கொண்டவையாக உள்ளன. ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகள், போர்க்குற்றங்களுக்கு சிங்களப் இராணுவம் குற்றவாளிகள் என்றால், லிபியாவில் நடந்த இனப்படுகொலை போர்க்குற்றங்களுக்கு, ஸ்ரீலங்கா அரசின் எஜமானர்களான நேட்டோ படைகள் குற்றவாளிகளாக இருந்துள்ளனர். கடாபிக்கு எதிராக போரிட்ட "கிளர்ச்சிக் குழு", உண்மையில் நேட்டோப் படைகளின் கூலிப் படையாக செயற்பட்டது. இலங்கையில், முள்ளிவாய்க்கால் சுற்றி...
  மூளாய் இந்து இளைஞர் சங்கத்தின் அபிவிருத்திகாக தனது பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியில் இருந்து 100000 ரூபாவுக்கான காசோலையை சங்க அங்கத்தவரிடம் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் வழங்கினார்.  
    இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் இலங்கைத் தூதுக்குழுவையும் வரவேற்கும் நிகழ்வு இந்திய ஜனாதிபதி மாளிகையான ராஸ்ட்ரபதி பவனில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது. ராஸ்ட்ரபதி பவனுக்குச் சென்ற சனாதிபதியையும் இலங்கை தூதுக்குழுவையும் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி யும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் வரவேற்றார்கள். இதன்போது இராணுவ மரியாதை அணிவகுப்பும் இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து இந்திய ஜனாதிபதி யும் இலங்கை...
திருக்கேதீஸ்வர ஆலயத்திற்குச்சென்று திரும்பிய பேரூந்து ஒன்று நெடுங்கேணி நைனாமடுப்பகுதியில் விபத்திற்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.        
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி ஒருவர் தனது வீட்டில் வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் 23 வயதான எஸ். எஸ். அமாலி என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹோமாகமவை சேர்ந்த குறித்த மாணவி நேற்று தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பகிடிவதை காரணமாகவே அவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த மாணவி தற்கொலை செய்வதற்கு முன்னர் கடிதமொன்றை எழுதி...
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸவின் மனைவியை பொலிஸார் கைது செய்யாவிட்டால் ஐயாயிரம் மக்களுடன் வீதிக்கு இறங்குவேன் என கடுவெல நகர முதல்வர் ஜீ.எச்.புத்ததாஸ தெரிவித்துள்ளார். கடுவெல முதல்வர் அலுவலகத்தில் நேற்று இடம் பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விமல் வீரவன்சவின் மனைவி சட்டரீதியாக தண்டிக்கப்படவில்லை என்றால் நான் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான மக்களை அழைத்துக்கொண்டு வீதிக்கு இறங்குவேன் எனவும் நாட்டின் சகல மக்களுக்கும் ஒரே...
ஒரு தொகுதி சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் ஓய்வு பெற்றுக்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 22ம் திகதி சில முக்கிய இராணுவ அதிகாரிகள் ஓய்வு பெற்றுக்கொள்ள உள்ளனர். இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்க எதிர்வரும் 22ம் திகதி ஓய்வு பெற்றுக்கொள்ள உள்ளார். கூட்டுப்படைகளின் பிரதானி ஜகத் ஜயசூரியவும் எதிர்வரும் 22ம் திகதி ஓய்வு பெற்றுக்கொள்ள உள்ளார். ஜகத் ஜயசூரியவிற்கு பதிலாக விமானப்படைத் தளபதி கோலித குணதிலக்க நியமிக்கப்பட உள்ளார். வன்னிப் போருடன் தொடர்புடைய மேஜர்...
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இளைஞர் ஒருவரின் சடலமொன்று நேற்று இரவு 8.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. புதிய காத்தான்குடி பதுறியா பாடசாலை  வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாறூக் முஹம்மது றிகாஸ் எனும் இளைஞனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். இந்த இளைஞன் வீட்டினுள் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். இந்த சமயம் வீட்டினுள் எவரும் இருக்க வில்லை என தெரிவிக்கப்படுகின்றது. சடலத்தை மீட்ட பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சடலம் தற்போது மட்டக்களப்பு...
    இதுவரை காலமும் முரண்பாட்டு அரசியலில் ஈடுபட்டு வந்த நாங்கள் இனியேனும் இணக்க அரசியலில் ஈடுபட இறைவன் எமக்கு வழி அமைக்க வேண்டும் என வடக்கு முதல்வர் க.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று யாழ். பொதுநூலகத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சரின் இன்றைய வடமாகாண விஜயம் எமக்கெல்லாம் ஒரு புதிய உத்தியோகபூர்வ...
  போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை மீதான ஐ.நா. விசாரணையின் அறிக்கை மார்ச் மாதம் ஜெனிவா அமர்வில் சமர்ப்பிக்கப்படுவதை 6 மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு ஐ.நா. ஆணையாளர் சையத் அல் - ஹுசைன் பரிந்துரைத்துள்ளமையை நாம் உதாசீனம் செய்து விமர்சிக்கக்கூடாது. ஏனெனில், இந்த 6 மாத காலத்தில் ஐ.நா. விசாரணை அறிக்கை மேலும் பலமடைந்து வலுவானதாக இருக்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. - இவ்வாறு தமிழ்த் தேசியக்...