வடக்கு மாகாண சபையுடன் இணைந்து செயற்பட தயாராக இருக்கின்றோம் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். வடமாகாண அபிவிருத்தி விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், நாட்டு மக்கள் சுதந்திரத்துடனும் அமைதியுடனும் வாழ்வதற்கான சூழல் உருவாகியுள்ளது. வட மாகாணத்தின் கடன்களை வடமாகாணத்திற்கு கொடுப்பதற்கு, ஜனவரி 08 ஆம் திகதி மக்கள் ஒரு ஆணையை வழங்கியிருக்கின்றார்கள். சமாதானமான...
  இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான சிவில் பயன்பாட்டு அணுசக்தி ஒத்துழைப்பு, விவசாயம், கல்வி, கலாசாரம் ஆகிய நான்கு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்தியாவிற்கு நான்குநாள் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் புதுடில்லியில் இன்று திங்கட்கிழமை மதியம் சந்தித்து பேச்சு நடத்தினர். இந்தச் சந்திப்பின் இறுதியில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 01. இந்தியா - இலங்கைக்கு இடையில் சிவில்பயன்பாட்டுக்கான அணுசக்தி ஒத்துழைப்பு...
  வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானம் மற்றும் சம்பந்தர், சுமந்திரன் ஆகியோரை கைவிட்டு கூட்டமைப்பினை பதிவு செய்யும் முயற்சிகள் மத்தியில் அவற்றிற்கு எதிரான காய்நகர்த்தல்களை இந்தியா ஆரம்பித்துள்ளது.பதிவு இணைய செய்தி இது தொடர்பில் கண்டியில் உள்ள துணைதூதுரகத்தில் இரகசிய மாநாடொன்று நடத்தப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. ஈபிடிபி தலைமை மற்றும் கூட்டணியின் ஆனந்தசங்கரி, ஈபிஆர்எல்எவ் வரதர் அணியினருடன் புளொட் சித்தார்த்தன் ஆகியோர் இம்மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்ததாக தெரியவருகின்றது. மாநாட்டில் யாழ்.துணைத் தூதுவராலயத்தைச் சேர்ந்த இரண்டு றோ அதிகாரிகளும்...
  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதவிகளில் இருந்து மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்களை களையெடுத்து விட்டு கட்சியில் தனது கரத்தை பலப்படுத்தியுள்ளார். பத்தரமுல்லையில் இன்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம ஜயந்த, சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச இந்த பதவியை முன்னர் வகித்து...
  டாக்டர் ஆபியா சித்தீகி அமெரிக்காவின் பெருமைமிக்க மாஸ்சூசெட்ஸ் நிருவனத்தின் உயிரியல் பட்டதாரி..   ஆபியா 2003 மார்ச் 30ல் பாகிஸ்தானில் மர்மமான முறையில் கடத்தப்பட்டு காணாமல் போனார்.டாக்டர் ஆபியாவுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் ஒட்டு மொத்த மக்களும் திணறிக் கொண்டிருந்த வேளையில், ஆப்கானிஸ்தானின் பக்ரம்(Bagram) சிறையில் Prisoner 650 என்ற பட்டப் பெயர் கொண்ட ஒரு பெண் சித்திரவதைப்படுத்தப்படுவதாக செய்திகள் கசியத்துவங்கின.   கொடுமைகளின் உக்கிரம் தாங்க இயலாமல் கைதி எண் 650...
  விடுதலைப்புலிகளின் வரலாறு தெரிந்தே தற்போதைய தமிழ் அரசியல் வாதிகள் செயல்படவேண்டும் மைத்திரியோ இந்தியாவோ+ 13 என்று மீண்டும் தழிழ் அரசியல்வாதிகள் ஏமாற்றம்அடைய கூடாது கதைக்கும் ஒவ்வொரு சொல்லும் இன்னொரு முனையில் யாராலோ (ஒட்டு) கேட்கப்பட்டுகொண்டே இருக்கும் என்ற எச்சரிக்கை உணர்வுடனேயே ஒவ்வொரு சொல்லையும் அளந்து கதைக்கும் தாயக உறவு நெஞ்சுக்குள் அடைகாத்து வைத்திருந்த கேள்வியை, ஆதங்கத்தை இறுதியில் அடக்க முடியாமல் கேட்கும் ‘ அண்ணை இருக்கிறார்தானே..அவர் இருக்க வேணும்’ என்று.., வீடிழந்த, ஊரிழந்த,...
  தங்களுடைய  பாதுகாப்பை ஐக்கிய நாடுகள் உறுதி செய்தால் தாங்கள் தயாகம் திரும்ப தயாராக இருப்பதாகவும் போர் காலத்தில் காணாமல் போன ஒரு லட்சம் பேரை இலங்கை அரசு திரும்ப கொண்டுவர வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் தெரிவித்துள்ளனர் என்று கடலோர பாதுகாப்பு குழும தலைவர் சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார். அறந்தாங்கியை அடுத்த அழியாநிலை இலங்கை அகதிகள் முகாமில் அகதிகளின் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கடலோர பாதுகாப்பு குழும தலைவர்...
  காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவின் அடுத்த அமர்வுகள் திருகோணமலையில் நடைபெறவுள்ளது. ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாச இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 28ம் திகதியும் மார்ச் மாதம் 1,2 மற்றும் 3ம் திகதிகளில் திருகோணமலையில் அமர்வுகள் நடைபெறவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்தக் ஆணைக்குழுவின் பதவிக் காலத்தை பெப்பரவரி மாதம் 15ம் திகதி வரையில் நீடித்திருந்தார். புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்த ஆணைக்குழுவின் தவணைக் காலத்தை மேலும் ஆறு மாத காலத்திற்கு...
    தமிழக சஞ்சிகையில் வெளியான கட்டுரை மாற்றம் இன்றி மீள் பிரசுரம் செய்யபட்டுள்ளது. இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்று இருக்கிற மைத்திரி பால சிறிசேனவின் கடந்தகால வரலாறு என்ன? என்பதை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அம்பலப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரலாற்றின் தொடக்க காலத்தில் இருந்து இலங்கைத் தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் தனி இறையாண்மையுடன் சுதந்திரமான அரசு நடத்தி வந்த ஈழத் தமிழ் இனம், ஐரோப்பியரின்...
  வ/கோவில்புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி வித்தியாலய அதிபர் திரு.இளங்கோவன் தலைமையில் 13.02.2015 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்கள் ஜி.ரி.லிங்கநாதன். எம்.தியாகராசா, திரு.தர்மபால, உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ரவிச்சந்திரன், உடற்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் மங்களகுமார், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.