இலங்கையின் வரலாற்றில் நாட்டின் முதல் பெண்மணியாக தமிழ் பெண் ஒருவர் விளங்கின்றார் என்பது இது வரை ஊடகங்களில் வெளிவந்து இராத செய்தி ஆகும். புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாரியார் யாழ்ப்பாண தமிழர் ஆவார். இவரின் பெயர் ஜெயந்தி. மைத்திரிபால சிறிசேன சிறிய வயது முதல் மார்க்ஸியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். இவர் ஐ. சண்முகதாஸன் தலைமையிலான இலங்கை கமியூனிஸ்ட் கட்சியிலேயே முதன்முதல் அரசியலில் ஈடுபட்டார். தலைவர் சண்முகதாஸனுக்கு...
  ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை இந்தியா வருகிறார். கடந்த காலங்களில் இலங்கை ஜனாதிபதி ராஜபக்சே இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் போராட்டங்கள் நடப்பது வழக்கமாக இருந்தது.    இப்போது மைத்திரி பாலவின் வருகையை தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் பிரதிநிதியாகக் கருதி எதிர்ப்பதா, அல்லது ராஜபக்சேதான் இனப்படுகொலைக்குக் காரணம் என்பதால் அவர் வருகையை மட்டுமே எதிர்க்கவேண்டும் என்று பொருள் கொள்ளலாமா என்று கேட்டால் தெளிவான பதில்களை...
  குடிநீரில் கலந்துள்ள கழிவு ஓயில் தொடர்பிலான பிரச்சினை நாள் தோறும் பூதாகர நிலையினை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற நிலையில் தூயநீருக்கான விசேட செயலணி  வினைத்திறனற்று செயற்பட்டுக்கொண்டிருப்பதாக பாதிக்கப்பட்ட மக்களது நலன்களிற்காக போராடும் அமைப்புக்கள் அறிவித்துள்ளன. யாழ்.ஊடக அமையத்தில் அவ்வமைப்பு இன்று வியாழக்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தது.சந்திப்பில் இது பற்றி கருத்து வெளியிட்ட மக்கள் பிரதிநிதிகள் தற்போதைய பிரச்சினைகள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களிற்கான தற்காலிக குடிநீர் விநியோக ஏற்பாடுகள் உள்ளிட்ட 15...
  போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பாக விரிவான தேசிய வேலைத்திட்டம் ஒன்றை அமுல்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதன்பொருட்டு விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி தலைமையில் இன்று முற்பகல் இடம்பெற்றது.இந்த கலந்துரையாடலில், நியாயமான சமூகத்திற்கான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளர் மாதுலுவாவே சோபித்த தேரர், ஜாதிக்க ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித்த தேரர், நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலீயே ரத்தன தேரர் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால...
  வடக்கு மாகாணச பையில் நிறைவேற்றப் பட்ட தீர்­மானம் என்பது இந்தியாவுக்கு எதிரான தீர்மானம் அல்ல. இலங்கைத் தமிழ் மக்களைப்பாதுகாப்பதற்கான தீர்மானம். இலங்கைத் தமிழ் மக்­களின் பாது காப்புக்கான தீர்மானத்துக்கு இந்தியாவின் உத­வியை நாடிநிற்கிறோம் என்று கூட்டமைப்பின் பேச்சா ளரும்யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடை பெற்ற ஊடகவியலாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரி­வித் துள்ளார். அங்கு அவர்...
தனுஷ் அனேகன் படத்திற்காக நேற்று ரசிகர்களிடம் டுவிட்டரில் பேசினார். அப்படி பேசுகையில் ஒரு அஜித் ரசிகர் என்னை அறிந்தால் படம் பார்த்தீர்களா? என்று கேட்டார். அதற்கு அவர் ‘ஷமிதாப், அனேகன் பட ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்தேன், அதனால் பார்க்க முடியவில்லை. ஆனால், எல்லோரும் கூறுவதை கேட்டேன், தல படத்தில் கலக்கியிருக்கிறார் என்று’ என டுவிட் செய்திருந்தார்.
சிம்பு தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். இவர் சமீபத்தில் காதலர் தின ஸ்பெஷலாக தமிழகத்தின் முன்னணி பத்திரிக்கை ஒன்றில் பேட்டியளித்துள்ளார். இதில் இந்த வருடம் திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்டதற்கு ”எதுக்கு நான் கல்யாணம் பண்ணிக்கணும்? நான் கல்யாணத்திற்கு எதிரானவன் இல்லை. கல்யாணம்கிறது நல்ல புரிதல் கொண்ட ஆணும், பெண்ணும் பண்ணிக்கொள்வது. கல்யாணம் நடக்கிற அளவுக்கு இப்போ விவாகரத்தும் நடக்கத் தொடங்கிடுச்சு. கல்யாணம் பண்ணி விவாகரத்தாகி, அப்புறம்...
நயன்தாரா தற்போது மாஸ் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், அருந்ததி படத்தை போல் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாயா என்ற படத்திலும் நடிக்கிறார். இப்படம் பேய் மற்றும் திகில் கதையம்சம் கொண்டது என கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது மாயாவை தேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கியுள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம் பிசாசு படத்தை வெளியிட்டது, மேலும், அருள் நிதி நடிக்கும் பேய் படமான டிமான்டி காலனி படத்தை வாங்கியுள்ளது.
சூர்யா-சமந்தா நடிப்பில் சென்ற வருடம் வெளிவந்த படம் அஞ்சான். இப்படம் பெரிய தோல்வியை சந்தித்ததால் இந்த ஜோடி ராசியில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் சூர்யா அடுத்து நடிக்கும் படத்தை விக்ரம் குமார் இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு 24 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் இவருக்கு ஜோடியாக மீண்டும் சமந்தா தான் நடிக்கவுள்ளாராம். இப்படம் மாஸ் படம் முடிந்த கையோடு ஆரம்பிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
News in English தனுஷ் தற்போது அனேகன் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இப்படத்தின் தெலுங்கு பதிப்பான ’அனேகடு’வின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சமீபத்தில் கலந்து கொண்டார். இதில் தனுஷிடம் பத்திரிக்கையாளர்கள் ‘கொலைவெறி’ பாடலை பாடச்சொல்லி கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், அவர் ‘என்னை இந்தா பாடல் மிகவும் டார்ச்சர் செய்கிறது. எனக்கு பாடுவது பிடிக்கும், அதற்காக செல்லும் இடமெல்லாம் பாடச்சொன்னால் எப்படி’ என்று கூறியுள்ளார்.