இலங்கையின் சுதந்திர தினத்தன்று கோட்டே ஜெயவர்த்தனபுரவில் மேற்கொள்ளப்பட்ட “சமாதான பிரகடனம்” இலங்கையின் நல்லிணக்கத்துக்கு உத்வேகம் அளித்துள்ளதாக ஜெனீவாவுக்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார். இந்தநிலையில் முன்னர் இடம்பெற்ற பிழைகள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதை இலங்கை உறுதிசெய்து கொள்வது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் சமதான பிரகனடத்தை புலம்பெயர்ந்தோர் உரிய வகையில் ஏற்று, இலங்கையின் நல்லிணக்கத்துக்காக பணியாற்ற வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சமாதானம் என்பது சமூகத்தின் கட்டமைப்பு மற்றும்...
சுகாதார அமைச்சின் அதிகாரிகளைப் போன்று ஊழல் மோசடிக் காரர்கள் வேறு நிறுவனங்களில் கிடையாது என நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். மஹரகம இளைஞர் சேவைகள் மத்திய நிலையத்தில் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது நேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் சுயாதீனமான சுகாதார சேவை ஒன்றை முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அதிகாரிகள் தடையாக அமைந்திருக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு...
வடகிழக்கு தமிழ் மக்களின் உரித்துக்களின் நிலை, அவர்களின் எதிர்பார்ப்புக்கள், அவர்களின் அபிலாஷைகள், அவர்களின் தேவைகள், அவர்களின் வருங்காலம் ஆகியன யாவும் இன்று ஒரு மயக்கமுற்ற நிலையை அடைந்துள்ளன. விளையாட்டுத்திடல் பந்து போன்று உலக அரங்கில் பலரின் உதைக்கும் எதிர் உதைக்கும் எறிவுக்கும் எதிர்எறிவுக்கும் ஆளாகி வருகின்றது எமது நிலை. என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணசபையின் விசேட அமர்வு இன்று நடைபெற்றிருந்த போது, தமிழர் தாயகத்தில் நடைபெற்றதும், நடைபெற்றுக் கொண்டிருப்பதும்...
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு நிதி உதவியை சவுதி அரசாங்கம் அளித்து வருவதாக பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு சவுதி அரேபியா சட்டவிரோதமாக நிதி உதவி அளித்து வருவதாக பாகிஸ்தானின் உள்துறை மாகாண ஒருங்கிணைப்பு அமைச்சர் ரியாஸ் ஹுசைன் பிர்சதா (riaz hussain pirzada)கடந்த மாதம் குற்றம் சாட்டி இருந்தார். இந்த குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பாகிஸ்தானில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த...
அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜேர்மனியின் சான்சலர் ஏஞ்செலா மெர்கெல், ஐரோப்பாவின் அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்காதீர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நேற்றிரவு ஒபாமாவை சந்தித்து பேசிய அவர், உக்ரைன் உள்நாட்டு பிரச்சனைகள் தொடர்பான விடயத்தில் தீர்வு காணும் வகையில் ஆலோசனை நடத்தியுள்ளார். பின்னர் நிருபர்களிடம் மெர்கெல் பேசுகையில், பிராந்திய ஒருமைப்பாடுகளை பின்பற்றாவிட்டால் ஐரோப்பிய நாடுகளில் அமைதியை காண முடியாது என்றும், ஆயுதங்களின் வலிமையை காட்டி ஐரோப்பாவின் அமைதியை சீர்குலைக்க...
எகிப்திய சிறையில் வைக்கப்பட்டுள்ள கனடிய பத்திரிகையாளர் வழக்கை, அந்நாட்டின் அரசாங்கம் கையாளும் முறையினால் தாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.கனடிய பத்திரிகையாளர் மொகமட் வாஹ்மி கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக எகிப்திய சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இவருக்கு பெப்ரவரி மாதம் 12ம் திகதி மறுவிசாரணைக்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது. இச்செய்தி கேட்ட அவரது குடும்பத்தினர் கனடிய அரசாங்கம் இந்த வழக்கை கையாளும் முறையினால் தாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த வழக்கை கையாள்வதில்...
ஜோர்டான் விமானியை கொல்வதற்கு முன்பு அவருக்கு மயக்க மருந்து அளித்ததாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த வாரம் சிறைபிடித்து வைத்திருந்த ஜோர்டான் விமானியை இரும்பு சிறையில் வைத்து உயிருடன் தீயிட்டு கொழுத்தி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் ஜோர்டன் மட்டுமின்றி உலக நாடுகளிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. எனவே தீவிரவாதிகளின் இக்கொடூர செயலுக்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் தங்கள் நாட்டின் விமானியை கொன்ற தீவிரவாதிகளை பழித்தீர்க்கும் வகையில் ஜோர்டான் அரசு...
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் பிணைக்கைதியாக இருந்த அமெரிக்க பெண் கொல்லப்பட்டதை ஒபாமா உறுதிப்படுத்தியுள்ளார்.அமெரிக்காவில் அரிசோனா (Arizona)மாகாணத்தைச் சேர்ந்த கய்லா ஜீன் மியல்லர் (Kayla Jean Mueller Age-26) என்ற தொண்டு நிறுவன ஊழிய பெண்ணை ,கடந்த 2013ம் ஆண்டு சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர். சுமார் 1½ ஆண்டாக பிணைக்கைதியாக வைக்கப்பட்ட இவர், ஜோர்டான் நடத்திய வான்வழி தாக்குதலில் இறந்ததாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் செய்தி ஒன்றை கடந்த வாரம் வெளியிட்டனர். ஆனால்...
  ஈழத்தமிழர்களுடைய தற்போதைய தலைமையை வழிநடத்தும் திரு. இரா. சம்பந்தன் மேற்குலகோ, இந்தியாவோ இலகுவாக அணுகுவதற்கான தலைமையாக பார்க்கப்படுகிறார். 82 வயதுடைய திரு. இரா.சம்பந்தன் இலங்கையின் சுதந்திரதின விழாவில் கலந்து கொள்ளவதால் அவருக்கு ஏதும் நன்மை ஏற்படப் போவதில்லை. மாறாக அவர் மேற்குலக இராஜதந்திரிகளின் விருப்பை நிறைவேற்றினார். இவ்வாறு கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளரான கனடாவில் இருக்கும் திரு. சுரேஸ் தர்மா அவர்கள் தெரிவித்தார். சுதந்திரதின நிகழ்வில் கலந்து...
    இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் லாரா டேவிஸ் இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டு பா.உறுப்பினர் சி.சிறீதரனை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தச்சந்திப்பின்போது கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின் வடக்கு கிழக்கு தமிழர் வாழும் பகுதிகளில் உள்ள நிலைமைகள் தொடர்பாக  பிரித்தானிய உயஸ்தானிகர் பா.உறுப்பினர் சி.சிறீதரனிடம் வினாவினார். இதற்கு பதிலளித்த பா.உறுப்பினர், ஜனாதிபதி தேர்தலின் பின்னாக தமிழ் மக்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்ததாக தெரியவில்லை. மெல்ல மெல்ல மக்கள் இந்த அரசாங்கத்தின் மீதும்...