இலங்கையின் வரலாற்றைப் பார்க்கும்போது தமிழ் இனம் தோற்றுப்போன இனமாகவே தெரிகிறது. இந்த நாட்டின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க விடம் சேர்.பொன் இராமநாதன் தோற்றுப்போனார். இராமநாதன் நினைத்திருந்தால் தமிழர் தாயகம் என் பதை உருவாக்கி இருக்க முடியும். ஆனால் இலங்கைத் திருநாடு என்பது அவரின் பார்வையாக இருக்க, சிங்களத் தலைவர்கள் இலங்கை தமக்குரிய நாடு என்பதில் கவனம் செலுத்தினர். இதன் காரணமாக தமிழ் இனம் இழக்கக் கூடாதவற்றை எல்லாம் இழந்து போனது. இராமநாதனின்...
  காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் நிலைப்பாட்டை புதிய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. இந்த போராட்டம் எதிர்வரும் 10-ம் திகதி காலை 10.30 மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடைபெறும் என்று காணாமல் போனோரை தேடியறியும் குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அரசியல் கைதிகளின் உறவினர்கள் காணாமல் போனோரின் உறவினர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும்...
  இன்று தமிழ், முஸ்லிம் மக்களிடையே சிலர் பிரிவினையை ஏற்படுத்த பார்கிறார்கள். அண்ணன் சம்பந்தனும் சகோதரர் ஹக்கீமும் மலையகத் தலைவர்களும் இனங்களுக்கிடையில் பிரிவினை ஏற்படாது பார்க்கவேண்டும். - இவ்வாறு தெரிவித்துள்ளார் வர்த்தக கைத்தொழில் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்தலைவருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற அமைச்சருக்கான வரவேற்று விழாவின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.   அவர் தொடர்ந்து...
  முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்குப் பின்னர் இருந்த நிலையை விட நெருக்கடியான காலகட்டத்தை தமிழரின் உரிமைப் போராட்டம் எதிர்கொள்ளப் போகிறது. ஏனெனில், முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான நிலையென்பது தமிழர் தாயகம் தொடக்கம் உலகெங்கும் பரந்து வாழும் பெரும்பான்மையான தமிழர்களிடம் பாதிக்கப்பட்டோர் என்ற கூட்டு உளவியலை (Psychology of collective victimization) உருவாக்கியிருந்தது. அந்த உளவியல், அதிர்ச்சிக்குள்ளும் தமது பொது எதிராளி யார் என்ற விழிப்பு நிலையுடன், எமது அடுத்த கட்டம் என்ன என்ற...
  மின்னல் ரங்கா விடம் ஒரு சில கேள்விகளும், சக்தி தொலைகாட்சியிடம் ஒரு வேண்டுகோளும்........................................(முஹம்மது றினாஸ்)சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாரளமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா நெறிப்படுத்துகின்ற மின்னல் நிகழ்ச்சியானது இலங்கையின் தமிழ் பேசுகின்ற மக்களுக்கான ஒரே ஒரு அரசியல் விவாத நிகழ்ச்சியாகும். இன் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் பேசுகின்ற மக்கள் அரசியல் தொடர்பான விளக்கங்களை பெற்று வருவது உண்மையே. இதில் மறுப்பேதும் இல்லை. இந்நிகழ்ச்சி ஜே. ஸ்ரீ ரங்கா அவர்களால் அவர் அரசியலுக்கு பிரவேசிக்க முன்னர் நடாத்தப்பட்டு...
  அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும், காணாமல் போகச்செய்யப்பட்டவர்களுக்கு பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தி, முல்லைத்தீவு மாவட்டப் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் முல்லைத்தீவில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. காணாமல் போனோரை கண்டுபிடிக்க கோரியும், கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரியுமே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டச்செயலகம் முன்பாக இன்று முற்பகல்10 மணியளவில் இந்த...
  ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குசலம் விசாரிக்க தினமும் மக்கள் தங்காலை கால்டன் வீட்டிற்கும் மெதமுல்லை வீட்டிற்கும் வருகை தந்த வண்ணம் உள்ளனர். தூர பிரதேசங்களில் உள்ள மக்கள் பஸ், வான்களில் வருகை தரும் மக்களை கட்டுபடுத்த பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்து இன்றுடன் ஒரு மாத காலம் என்பது குறிப்பிடத்தக்கது.
  கிழக்கு மாகாண சபையில் புதிதாக ஆட்சியமைத்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து செயற்பட வருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் பகிரங்க அழைப்பு விடுத்தார். தற்பொழுது அக்கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கிழக்கு மாகாண அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்று இணைந்து செயற்பட வருமாறும் அமைச்சர்...
  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸவின் தொலைபேசி அழைப்புக்களை வேண்டுமென்றே எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா நிராகரித்து வந்ததாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நிமால் சிறிபால டி சில்வா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மஹிந்த மூன்றாம் தவணைக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தால் நிமால் சிறிபால டி சில்வாவிற்கு பிரதமர் பதவி வழங்குவதாக இணங்ககப்பட்டிருந்தது. எனினும் தற்போது மஹிந்த ராஜபக்ஸ பல தடவைகள் நிமால்...