ஜனாதிபதி தேர்தலின் போது தபால் மூல வாக்களிப்பிற்கு முதல் நாள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேராவினால் முன்வைத்த அறிக்கை அவரை சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. மோட்டார் சைக்கிள் பெற்றுக் கொள்ள விரும்பும் கடற்படை அதிகாரிகள் 50,000 ரூபாய் கொடுத்து தங்களுக்கான மோட்டார் சைக்கிள்களை ஒதுக்கிக் கொள்ளலாம் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கடற்படையினர் 50,000 பணம் செலுத்தியும் அவர்களுக்கான மோட்டார் சைக்கிள் வழங்கப்படவில்லை. இதேவேளை...
  இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கைத் தமிழ் மக்களது அரசியல் விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் வட்டாரத்திலும், தமிழக ஊடகங்களிலும் பாரியதொரு மாற்றத்தைக் காணக் கூடியதாக உள்ளது. இதுவரை காலமும் இலங்கைத் தமிழருக்காக எனக் குரல் கொடுத்து தமிழகத்தில் மட்டுமல்லாது இந்திய மத்திய அரசாங்கத்திற்கும் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்து வந்த தமிழக அரசியல் கள நிலவரத்தில் தற்போது அமைதியானதொரு மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. முன்னரைப் போன்று...
  தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் புதிய அரசின் செயற்பாடுகளை பொறுமையோடும் நிதானத்தோடும் பார்த்திருக்கின்றோம் - சிவசக்தி ஆனந்தன் எம்.பி தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, புதிய அரசுக்கு சந்தர்ப்பம் ஒன்று வழங்கியுள்ளோம். இந்த அரசு என்ன செய்கின்றது,  என்ன செய்யப் போகின்றது என்பதை நிதானமாகவும், பொறுமையோடும் நாங்கள் பார்த்திருக்கின்றோம். தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை வீணாக்காத வகையில் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்று வன்னி மாவட்ட...
  இடைக்கால வரவு செலவுத்திட்டம் நிறை வேற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதியஅரசாங்கத்தின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால்கடந்த ஜனவரி மாதம் 29ம் திகதி இடைக்கால வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. 163 மேலதிக வாக்குகளினால் இந்த வரவு செலவுத் திட்டயோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இடைக்கால வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 164பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். எதிராக ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித்குமார மட்டும் வாக்களித்திருந்தார். இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின்இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு சற்று முன்னர்பாராளுமன்றில் நடைபெற்றது. அரசாங்கத்தின் நூறு நாள் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாகஏற்கனவே எதிர்க்கட்சிகள் உறுதியளித்திருந்தமைகுறிப்பிடத்தக்கது. அதற்கு இணங்க இன்றைய தினம் வரவுசெலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு வாக்களிப்பில்எதிர்க்கட்சிகளும் ஆதரவாகவே வாக்களித்தன.
  தெற்கில் மஹிந்த கும்பலினது ஊழல் மோசடிகள் அம்பலத்திற்கு வந்துகொண்டிருக்கும் நிலையில் வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எடுபிடிகளது ஊழல்களும் அம்பலமாகத்தொடங்கியுள்ளது.அவ்வகையில் கூட்டமைப்பு சார்பு பருத்தித்துறை பிரதேச சபை தலைவர் பூ.சஞ்சீவனின் பல மில்லியன் ஊழல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளது.தனது பிரதேச சபையில் தற்காலிகமாகப் பணியாற்றி வந்திருந்த ஏழைத் தொழிலாளர்களிற்கு நிரந்தர வேலைகளை வழங்குவதாகக்கூறி சஞ்சீவனினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல்களே தற்போது அம்பலத்திற்கு வரத்தொடங்கியுள்ளது. நிரந்தர பணி நியமனம் வழங்குவதாக...
  அடக்குமுறைக்கும் அடிமைவாழ்வுக்கும் ஒருமுற்றுப்புள்ளி வைத்து சுதந்திரமாகவும் சுயமரியாதையாகவும் வாழவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்க்காக போராடிய ஈழத்தமிழினம் அதற்காக கொடுத்த விலைகள் மதிப்பிடமுடியாதவை .ஒரு இனம் இன்னொரு இனத்தினால் அடிமைப்படுத்தப்படுவைதையோ அடக்கியாளப்படுவதையோ உலகத்தின் எந்த ஒரு சட்டமும் ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால் இலங்கைத்தீவிலே சிங்களமேலாதிக்கத்தால் தமிழர்கள் அடக்கியாளப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டபோது அது உள்நாட்டு பிரச்சினை என்று உலகத்தில் யாரும் அதைக்கண்டுகொள்ளவில்லை. ஏன்என்றுகேட்க யாரும் இல்லை என்ற காரணத்தினால் சிங்கள இனவெறியர்கள் அப்பாவித்தமிழர்களை படுகொலைசெய்து அவர்களின் சொத்துக்களைக்கொள்ளையடித்து கொடும் தாண்டவம்...
  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சி.சந்திரகாந்தன்(துரோகி பிள்ளையான்)தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்  கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்குமான விசேட கலந்துரையாடல்  இன்று 06.02.2015  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொழும்பு விஜயராம வாசஸ்த்தலத்தில் இடம்பெற்றுள்ளது.  கிழக்கு மாகாணசபை ஆட்சி தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாகவும்  தற்கால எதிர் காலங்களில் அரசியல் முன்னெடுப்புக்கள் மற்றும்...
என்னை அறிந்தால் படம் தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களை தாண்டி உலகம் முழுவதும் கலக்கி வருகிறது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் பிரிமியர் ஷோவில் இப்படம் ரூ 75 லட்சம் வரை வசூல் செய்தது என நேற்று கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது வந்த தகவலின் படி இப்படத்திற்கு மலேசியாவில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறதாம். அஜித்தின் திரைப்பயணத்தில் இப்படம் தான் அங்கு அதிக தியேட்டர்களில் ரிலிஸாகிய படம் என கூறப்படுகிறது. அதேபோல் ரசிகர்களை...
உயிர்க்கொல்லி நோய்களை 15 நிமிடத்தில் கண்டறியும் வகையில் புதிய ஆப் ஒன்று அறிமுகமாகியுள்ளது. உலகம் முழுவதும் உயிர்க்கொல்லி நோயான எச்.ஐ.வி மற்றும் சிப்லிஸ் போன்ற நோய்களால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்த நோய்களை வெறும் 15 நிமிடங்களில் கண்டுபிடிக்கும் வகையில் புதிய ஆப் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைகழகத்தை சேர்ந்த உயிரி மருத்துவ விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தயாரித்துள்ள சிறிய வடிவிலான Dongle-யை, ஸ்மார்ட்போன் மற்றும் கம்ப்யூட்டரில் ஒரு டிவைசாக மாற்றிக் கொள்ளலாம். இந்த...
வீடியோ கோப்புக்களை பகிரும் வசதியை தரும் பிரபல தளமான யூடியூப் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்யும் முயற்சியில் களமிறங்கியுள்ளது.அதாவது தற்போது வீடியோ கோப்பு ஒன்றினை பார்வையிடும் போது காட்சிகளை ஒரே கோணத்தில் மட்டுமே பார்வையிட முடியும். ஆனால் புதிய வசதியின் படி ஒரு காட்சியினை பல கோணங்களில் பார்வையிடக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒன்றிற்கு மேற்பட்ட கமெராக்களைக் கொண்டு வீடியோ பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பல கமெராக்களைக் கொண்டு...