இன்று நாங்கள் சிந்தும் கண்ணீர்நாளை உந்தன் கன்னத்தில் அரையும்!எங்கள் கைகள் சம்மட்டிகளாகிஉச்சந்தலையில் இறங்கும்!  
  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த மஹிந்த, கே.பி ஒரு பாதுகாக்கப்பட வேண்டிய நபர் என கூறியிருக்கின்றார். இதன் பின்னணியில் பல மர்மங்கள் உள்ளதாகவே மக்களும் நாங்களும் கருதுகிறோம் என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மேலும் கே.பியிடம் இருந்த சொத்துக்கள், பணம், கப்பல்கள் போன்றவற்றுக்கு என்ன நடந்தது? போன்ற பல கேள்விகள் இந்த நாட்டு மக்களுக்கும் விசேடமாக தமிழ் மக்களுக்கும் உள்ளது. அதற்காகவே கே.பி கைது செய்யப்பட வேண்டும்....
  முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவினரும், அவரது குடும்பத்தாரும் தியானத்தில் ஈடுபடுவதற்காக 300 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தியான மண்டபம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடவத்தை – இம்புல்கொட பகுதியில் இந்த மண்டபம் அமைந்துள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். நிலத்துக்கு கீழ் இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஹம்பாந்தொட்டை துறைமுகத்தில் இருந்து 10 ஆயிரத்துக்கும் அதிகமான நேர்த்தியாக வெட்டப்பட்ட பாரிய கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.   முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவினரும், அவரது குடும்பத்தாரும்...
  இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது. சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில் இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. சீனா ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியான அந்த நாட்டு உதவி வெளிவிவகார அமைச்சர் லியூ ஜியாங் சோவு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து பேசினார்.  சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகாலமாக இருந்து வரும் ராஜதந்திர உறவுகளை...
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் மட்டக்குழு ஒன்று விரைவில் ஜெனிவா செல்வவுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்தார்.   ஜெனிவா செல்லும் இந்தக் குழு வரும் மார்ச் மாதம் அங்கு நடக்கும் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை மீதான சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் என்றும் அவர் மேலும் கூறினார்.   நல்லூர் பிரதேச சபையின் கட்டடத் திறப்பு விழாவில் அவரிடம்...
  நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் வகையிலான சர்வதேச விசாரணைச் செயற்பாடுகளுக்கு தற்போது அவசியமில்லை என அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலிடம் தெரிவித்துள்ளார். அரசின் மாற்றத்தின் பின்னர் இலங்கையில் ஜனநாயகம் வலுப்பெற்றுள்ளது. உள்ளக செயற்பாடுகள் நம்பிக்கையளிக்கும் வகையில் உள்ளது. இவ்வாறானதொரு நிலையில் சர்வதேச விசாரணைப் பொறி முறையினை விடவும் சுயாதீன உள்ளக விசாரணைகளுக்கு முக்கியத்துவமளிப்பது நாட்டின் இறையாண்மைக்கும் வென்றெடுத்துள்ள ஜனநாயகத்துக்கும் பலமானதாக அமையும். அத்தோடு வென்றெடுத்துள்ள சமாதானத்தையும்...
  இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விசாரிப்புக்களை மேற்கொண்டு உரிய தீர்வுகளை தருவதற்காக ஜனாதிபதி செயலணிப்படை ஒன்று உருவாக்கப்படவுள்ளது. இந்த படையணி, இனங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள அவசரப் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்க்கும் முயற்சிகளை மேற்கொள்ளும். நீண்டகாலமாக விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையும் இதில் அடங்கும் என்று அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபரின் தகவல்படி 275 தமிழ் அரசியல் கைதிகள் விசாரணைகள்...
  hursday, February 5, 201 முன்னாள் ஜனாதிபதி சந்திாிக்கா அம்மையரின் கணவரும் ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் தலைவருமான விஜயகுமாரதுங்க விடுதலைப் புலிகளுடன் பேச்சுவாா்த்தை நடாத்த 1986ம் ஆண்டு யாழ்ப்பாணம் சென்றாா்.  அன்று ஒளிப்பதிவான இந்த காணொளி உலகின் பல நாட்டு தொலைக் காட்சிகளிலும் ஒளிபரப்பாகின. ஆனால் இலங்கையருக்கு தொலைக் காட்சிகளில் பாா்ப்பதற்கு அப்படியான சந்தா்ப்பம் கிடைக்கவில்லை. விஜயகுமாரதுங்கவின் யாழ் பயணம்  மற்றும் பலிகளுடனாக நேருக்கு நோ் சந்திப்பு தொடா்பான ஒளி ஒலி...
    பிரித்தானியாவில் சம்மந்தன் மற்றும் சுமத்திரன் ஆகியோரின் படங்கள் எரிப்பு! சிறீலங்காவின் சுதந்திரதின நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரின் உருவப்படங்களும் போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்களால் கொழுத்தி எரிக்கப்பட்டது. 1972ஆம் ஆண்டிற்குப் பின்னர் தமிழர்கள் கறுப்புப்பட்டி அணிந்து துக்கநாளாகக் கடைப்பிடிக்கும் சிறீலங்கா சிங்கள அரசின் சுதந்திரநாள் நிகழ்ச்சியிலே தமிழ் அரசியல் தலைவர்கள் சம்பந்தனும் சுமந்திரனும் கலந்து கொண்டமையானது ஏற்படுத்திய கோபாவேசத்தைப் போராட்டத்தில் கலந்து கொண்ட...
  முல்லைத்தீவில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் கடற்படையினர் இன்று வியாழக்கிழமை பிற்பகல் சோதனை நடத்தியுள்ளனர். முல்லைத்தீவு ரெட்பானா பாரதி வித்தியாலய மாணவர்களில் தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கான உபகரணப் பொருள்களை வழங்கி விட்டு ரவிகரன் வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்தச் இடம்பெற்றுள்ளது. ராணுவத் தளபாடங்கள் வைத்திருந்தார் எனக் கூறியே கடற்படையினரால் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சோதனை மேற்கொண்ட போது ரவிகரன் தன்னை யார் என அடையாளப்படுத்தியபோது,"அது எமக்கு நன்றாகத் தெரியும்"...