முல்லைத்தீவில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் கடற்படையினர் இன்று வியாழக்கிழமை பிற்பகல் சோதனை நடத்தியுள்ளனர். முல்லைத்தீவு ரெட்பானா பாரதி வித்தியாலய மாணவர்களில் தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கான உபகரணப் பொருள்களை வழங்கி விட்டு ரவிகரன் வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்தச் இடம்பெற்றுள்ளது. ராணுவத் தளபாடங்கள் வைத்திருந்தார் எனக் கூறியே கடற்படையினரால் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சோதனை மேற்கொண்ட போது ரவிகரன் தன்னை யார் என அடையாளப்படுத்தியபோது,"அது எமக்கு நன்றாகத் தெரியும்"...
  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தம்மை 19 நிமிடங்கள் துர்வார்த்தைகளினால் திட்டியதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மஹிந்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் தாம், அவரை வாழ்த்துவதற்காக தொலைபேசி அழைப்பு ஒன்றை எடுத்தாகவும் அதன் போது கடுமையான துர்வார்த்தைகளினால் 19 நிமிடங்கள் தம்மை திட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஏற்கனவே சில ஊடங்களில் தகவல் வெளியிட்ட போதிலும்...
தமிழ்தேசிய கூட்டமைப்பும் தழிழ் அரசுகட்சியும் சிந்தித்துப்பார்த்து செயல்படவேண்டிய காலம் இது ஒருமுறை இந்த வீடியோவை பாருங்கள் (function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s); if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = "//connect.facebook.net/en_US/all.js#xfbml=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, 'script', 'facebook-jssdk'));Post by தமிழ் நேசன்.
  தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைகள் கோட்பாடுகளை உடனடியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைவிட வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கோரியுள்ளார். இலங்கையின் 67ம் சுதந்திர தின நிகழ்வுகளின் போது அரசாங்கம் மூன்று மொழிகளிலும் நல்லிணக்கம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டமை வரவேற்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தினை முன்மாதிரியாகக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். யுத்தம் இடம்பெற்ற...
  எப்போதும் சம்பந்தம் இல்லாமல் இலங்கைத் தேசியக் கொடியை தூக்கிப் பிடிக்கும் அரச பந்தம்.. இன்று இலங்கையின் சுதந்திர விழாவில் பங்கேற்று உள்ளார்..! இலங்கையின் சுதந்திர விழாவில் தமிழன் என்று சொல்லப்படும் ஒருவன் பங்கு பற்றுகிறான் என்றால்..ஒன்றில் அவன் கருணா.. டக்ளஸ்.. பிள்ளையான் போன்ற.. தமிழ் இனத் துரோகிகள் ஆகவே கடந்த காலத்தில் இருந்து வந்துள்ளார்கள் .. என்பதை தமிழர்கள் நன்கு அறிவார்கள் ..! இலங்கையின் சுதந்திர தினம் என்பது 1948 ஆம்...
  இலங்கையின் 67ஆவது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று அதன் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார். அந்த நிகழ்வில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் மற்றும் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றது அவர்களின் தனிப்பட்ட முடிவு என்று அவர் தெரிவித்தார். அவ்விருவரும் சார்ந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி கூட இது தொடர்பில் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும், சுதந்திர தின நிகழ்வில் கூட்டமைப்பின் தலைவர்...
  தமிழ்த் தேசியக் கொள்கைகளை அரசியல் ரீதியாக முன்னெடுப்பதில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக முன்னாள் ‘உதயன்’ மற்றும் ‘சுடரொளி’ பத்திரிகைகளின் பிரதம ஆசிரியரும், தமிழ் ஊடகத்துறையின் ஜாம்பவான்களில் ஒருவருமான நடேசபிள்ளை வித்தியாதரன் வழிகாட்டலில் புதிய அரசியல் கட்சியொன்று வடக்கில் உதயமாக இருப்பதாக நம்பகரமாகத் தெரியவருகிறது. முன்னாள் போராளிகளாக இருந்து தமிழ்த் தேசிய உரிமைகளுக்காகப் போராடிப் பின்னர் அரசின் புனர்வாழ்விற்கு உட்படுத்தப்பட்ட முக்கிய உறுப்பினர்கள், புலிகளின் ஆதரவாளர்கள், புத்திஜீவிகள், அரசியல் மற்றும் மனித...
கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் என்பவர் நாட்டில் இருந்து வெளியேறமுடியாமல்  மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வவுனியா பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிசூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாவக்குளம் அருகில்  இரவு குறித்த துப்பாக்கிசூடு இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர் 36 வயதுடைய பிரியந்த பிரேமரத்தின எனப்படுவராகும்.   இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குறித்த பொலிஸ் அதிகாரி இவ்வாறு துப்பாக்கிசூட்டில் காயமடைந்துள்ளார். எப்படியிருப்பினும் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையின் உள்நாட்டு விசாரணைகளில் உண்மைகளை கண்டறியும் போது இலங்கைக்கு எதிரான ஜெனீவா, யோசனையை திசைதிருப்ப முடியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தெற்காசிய பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஸா பிஸ்வாலுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் யோசனை எதிர்வரும் மார்ச்சில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளது. இதற்கான...