தழிழ்த்தேசியம் சுயநிர்ணய உரிமை இரண்டையும் திரும்பவும் நிலை நாட்டிய தழிழ் மக்கள்மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைத்த மொத்த வாக்குகள்  -  62,17,162 மகிந்த ராஜபக்சவுக்கு கிடைத்த மொத்த வாக்குகள் -  57, 68, 090 பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 51.28 வீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டு இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் செயலகத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் இதனை...
ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு மக்களால் தண்டிக்கப்பட்ட ராஜபக்ச சட்டத்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடியே அமைந்திருக்கின்றன. ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்த சிங்களப் பேரினவாதி ராஜபக்சே மக்கள் சக்தியால் வீழ்த்தப்பட்டிருக்கிறான். பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன சுமார் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று...
ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதை தொடர்ந்து கொழும்பில் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரம சிங்க, சந்திரிகா குமாரதுங்க மற்றும் ஹிரூணிகா ஆகியோர் விருந்து உண்டு தங்களது மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டனர்.  
வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். சற்று நேரத்தில் நடைபெறவுள்ள செய்தியாளர் சந்திப்பில் அவர் இது குறித்து அறிவிக்க உள்ளார். ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சி அடைந்த தோல்வியைத் தொடர்ந்து பதவியை ராஜினாமா செய்யும் முதல் அமைச்சர் டிலான் பெரேரா என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் டிலான் உத்தியோகபூர்வமாக தனது பதவியை இன்று ராஜினாமா செய்ய உள்ளார்.  
பார்க்கும் போது அழகிய கடல் போன்றே காட்சியளிக்கும், ஆனால் கடல் இல்லை, பெரிய ஏரி.இந்த ஏரியில் மனிதர்கள் மிதப்பார்கள், நீச்சல் தெரியாதவர்கள் கூட அழகாக படுத்துக் கொண்டே புத்தகங்கள் படிக்கலாம்.எப்படி இது சாத்தியமாகும் என நினைக்குறீர்களா? உலகத்திலேயே அடர்த்தி மிகுந்த உப்பு நீர் இருப்பதே இதற்கு காரணம்.இஸ்ரேல்- ஜோர்டான் எல்லையில் மத்திய தரைக்கடலுடன் சேர்ந்திருக்கும் நீர்ப்பரப்பு தான் சாக்கடல்.உலகிலேயே பள்ளமான பகுதி இதுவாகும், கடல் மட்டத்தில் இருந்து 378...
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 51.28 வீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டு இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் செயலகத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் இதனை வெளியிட்டுள்ளார். மைத்திரிபால சிறிசேன 6, 217, 162 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்.   // Post by Newsfirst.lk.
// Post by Newsfirst.lk. பதவியில் இருந்து விடைபெறும் மகிந்த ராஜபக்ஷ சிந்தித்த சில வினாடிகள் // Post by ரெட்பானா செய்திகள். // Post by Newsfirst.lk.
நாடு பழைய பாதையிலிருந்து விலகி வேறு வழியில் - நியாயமான தடத்தில் - பயணிக்கவேண்டியதன் அவசியத்தை தமது விருப்பமாக நாட்டு மக்கள் தெரியப்படுத்தியிருக்கின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தாம் வெற்றிபெற்றால் தேசிய அரசு அமைக்கப்படுமென ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் மைத்திரிகால சிறிசேன ஏற்கனவே அறிவித்துள்ளபோதிலும் அது குறித்து எத்தகைய கருத்தும் எமக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. ஆனால் அது...
இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவாகியுள்ளமையை அடுத்த மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் பல பகுதிகளில் பட்டாசு வெடி கொழுத்தி வெற்றிக் கொண்டாட்டங்கள் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை, இன்று மாலை இலங்கை ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.  
பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ இன்று பதவி விலகுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய ஜனாதிபதியாக இன்று மாலை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார். ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவிப் பிரமாணம் செய்து கொள்வதுடன், பாதுகாப்புச் செயலாளர் பதவியில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. இதன்படி, கோதபாய ராஜபக்ஸ பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் அடிப்படையில்...