இன்று காலை 6:30 மணிக்கு மகிந்த ராஜபக்ச தனது இருப்பிடமான அலரி மாளிகையிலிருந்து வெளியேறினார். மக்களின் முடிவுகளை ஏற்றுக்கொள்வதாகக் கூறி மகிந்த ராஜபக்ச அங்கிருந்து வெளியேறினார் அதே வேளை தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியானதும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மைத்திரிபால சிரிசேனவுடன் மகிந்த ராஜபக்ச தொலைபேசியில் உரையாடினார். நடைபெற்ற தேர்தல் வன்முறைகளின்றி வெளிப்படையானதாகவே நடத்தப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது என்று மைத்திரிபால குழுவினர் உறுதி...
பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதிவுயேற்றவுடன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பிரதமர் தி.மு.ஜயரத்ன உள்ளிட்ட அமைச்சரவை செயலிழந்துவிடும். இந்நிலையில், மைத்திரிபால சிறிசேன தனது தலைமையிலான அமைச்சரவையொன்றை இன்று அமைப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. புதிய ஜனாதிபதியின் சத்தியப்பிரமாண நிகழ்வு, கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில்...
ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தேர்தல் முடிவினை ஏற்றுக் கொண்டமை வரவேற்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார். புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட விரும்புகின்றோம். இலங்கை மக்கள் சிறந்த முறையில் வாக்களித்து ஜனநாயக உரிமைகளை உறுதி செய்து கொண்டுள்ளன. அமைதியான முறையில் தேர்தல் நடத்தப்பட்டமைக்காக இலங்கை தேர்தல் ஆணையாளர் மற்றும் பாதுகாப்பினை பாராட்டுகின்றோம்...
சிரேஸ்ட அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டுள்ளார். ஆளும் கட்சியிலிருந்து விலகி, எதிர்க்கட்சிக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக மில்ரோய் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு மில்ரோய் இவ்வாறு எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். மைத்திரி ஆட்சியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஆளும் கட்சியில் பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் மைத்திரி அணியில் இணைந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றும் நாளையும் இந்த கட்சித் தாவல்களை எதிர்பார்க்க முடியும்...
  எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் வட்டாரத்தகவல்கள் இதனை உறுதி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உத்தியோகப் பற்றற்ற ரீதியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில்ழ மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. பெரும்பாலும் எட்டு முதல் பத்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
  மக்களின் தீர்ப்பிற்கு ஏற்ப ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அலரி மாளிகையை விட்டு சற்று முன்னர் வெளியேறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, உரையாடியதன் பின்னர் ஜனாதிபதி வெளியேறியுள்ளார். மக்களின் தீர்ப்பிற்கு மதிப்பளிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.  புதிய ஜனாதிபதியின் கடமைகளுக்கு தடை ஏற்படுத்த விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அலரி மாளிகையில் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த ஜனாதிபதி, புதிய ஜனாதிபதி கடமைகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுப்பதாக தெரிவித்து மாளிகையை விட்டு வெளியேறியுள்ளார். ரணிலுடன்...
மகிந்த ராஜபக்ஷ தேர்தலில் தோல்வியடைந்துள்ளதை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கைக்கு செல்லும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தில் இருந்து விலகி பொது வேட்பாளராக போட்டியிட்டதை அடுத்து அனுர பிரியதர்ஷன யாப்பா அந்த கட்சியின் செயலாளராக நியமிக்கப்பட்டது கட்சியின் யாப்புக்கு முரணானது எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. ஜனாதிபதித்...
இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதும் அவர் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதியின்படி பதவியில் இருந்து நீக்கப்பட்ட இலங்கையின் 43 வது பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை மீண்டும் அந்த பதவியில் நியமிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் குடியுரிமை வழங்கப்பட்டு அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட இராணுவ பதவி...
  கொழும்பு மாவட்டம் - கொழும்பு வடக்கு தொகுதி உத்தியோக பூா்வ முடிவுகள்.    
  இலங்கையில் நடைபெற்ற 07வது ஜனாதிபதித் தேர்தலில் அரசியல் சாணக்கியத்துடன் மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கூறியது வெளிநாடுகளில் வாழுகின்ற அரசியல் தலைவர்கள் நன்றியினைத் தெரிவித்துள்ளனர். ஏற்ற தருணத்தில் பொருத்தமான அரசியல் முடிவுகளை மேற்கொள்ளும் தலைவர் இரா.சம்பந்தன். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அவருடைய தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை என்பவற்றினைக் கருத்திற்கொண்டு மக்கள் தமிழ்த்தேசியத்தினை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆதரித்தார்கள்....