‘மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க‘ படத்தில் ஹீரோ, ஹீரோயின் தவிர இந்த படத்தில் 13 காமெடியன்கள் இணைந்து நடிக்கின்றனர். இதுபற்றி இயக்குனர் தஞ்சை கே.சரவணன் கூறியது:இதுவரை யாரிடமும் உதவி இயக்குனராக நான் பணியாற்றியதில்லை. சினிமா மீதான ஆர்வத்தால் இப்படத்தை எழுதி இயக்குவதுடன் தயாரிப்பு, இசை ஆகிய பொறுப்பையும் நானே ஏற்றிருக்கிறேன். சுரேஷ்குமார் ஹீரோ. அஷதா ஹீரோயின். இவர்கள் தவிர பாண்டியராஜன், லிவிங்ஸ்டன், கிரேன் மனோகர், கொட்டாச்சி, பிளாக் பாண்டி,...
கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டுக்கு சென்ற அசின், காஜல் அகர்வால், திரிஷா, தமன்னா, ஸ்ரேயா போன்றவர்கள் போன வேகத்திலேயே சுருண்டுவிட்டனர். மறுபடியும் தென்னிந்திய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இவர்களில் அசின் மட்டும் தென்னிந்திய படங்களுக்கு திரும்பினால் எங்கே விமர்சனம் எழுமோ என்ற பயத்தில் பாலிவுட்டிலேயே வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இவர்களின் வரிசையில் பாலிவுட்டுக்கு சென்றவர் டாப்ஸி. மற்ற யாரையும் விட தென்னிந்தியாவிலிருந்து இந்திக்கு வந்து அதிர்ஷ்டசாலி என்று பெயர் வாங்கி இருப்பதாக...
நடிகை திரிஷா-வருண் மணியன் திருமணம் மார்ச் மாதம் நடத்த குடும்பத்தினர் ரகசியமாக ஏற்பாடு செய்து வந்தனர். இந்த தகவல் லீக் ஆனதையடுத்து திரிஷா ஹீரோயினாக நடிக்கும் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அஜீத் ஜோடியாக ‘என்னை அறிந்தால்', ஜெயம் ரவி ஜோடியாக ‘பூலோகம்' என திரிஷா நடிக்கும் 2 படங்கள் ரிலீஸுக்கு தயாராகிவிட்ட நிலையில் அவர் திருமண செய்தியால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் நடிப்பில் மேலும் 2...
  சித்தார்த் - சமந்தா தங்களது 2 வருட காதலை திடீரென்று முறித்துக்கொண்டனர். சித்தார்த்துடன் சமந்தாவுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள்தான் இந்த முறிவுக்கு காரணம் என கூறப்படுகிறது. இருவரும் பிரிந்தது ஏன்? என்று சமந்தாவிடம் கேட்டபோது அவர் கோபம் அடைந்தார். ‘நான் பெரும்பாதிப்புக்கு ஆளானதுபோல் இதையே எல்லோரும் கேட்கிறார்கள். நான் பாதிக்கப்படவில்லை. சித்தார்த் நல்லவர். மீடியாக்கள் இதுபோல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். என்னுடைய சொந்த விஷயம். அதனால் போதும் நிறுத்துங்கள்'...
விமான சேவையில் கடுமையான உள் பாதுகாப்பு திட்டங்களை உருவாக்குவது மற்றும் ஆபத்து காலங்களில் பகுப்பாய்வு போன்ற புதிய பாதுகாப்பு கட்டுப்பாடுகளுக்காக அடுத்த பத்து ஆண்டுகளில் அமெரிக்கா 135 மில்லியன் டாலர் செலவு செய்ய திட்டமிட்டிருக்கிறது. அமெரிக்க விமான நிறுவனங்களில் விபத்து என்பது மிகவும் அரிதாகவே நடக்கும் ஒன்று. 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி பினாக்கிள் ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானதில் 49 பயணிகள் உயிரிழந்தனர். இந்த விபத்திற்குப்...
நான்கு கால்பந்தாட்ட மைதானத்தின் அளவுக்கு பரப்பளவு கொண்ட உலகின் பிரம்மாண்டமான கப்பல் இன்று பிரிட்டனுக்கு வருகை தந்தது. சி.எஸ்.சி.எல். குளோப் என்று அழைக்கப்படும் அக்கப்பல் சீனாவின் ஷாங்காய் துறைமுகத்திலிருந்து கடந்த டிசம்பர் 8 அம் தேதி 19100 கண்டெய்னர்களுடன் தனது முதல் பயணத்தைத் தொடங்கியது. 20 அடி உயரம் கொண்ட இந்த கண்டெய்னர்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைத்தால் அது எவரெஸ்ட் சிகரத்தை விட ஐந்து மடங்கு உயரமாக...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பாகிஸ்தான் தெக்ரிக் – இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரை இன்று திருமணம் செய்தார்.பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான்கான் (62). தற்போது இவர் பாகிஸ்தான் தெக்ரிக் – இன்சாப் என்ற கட்சியை நடத்தி வருகிறார். அதன் தலைவராகவும் இருக்கிறார். இவருக்கும் இங்கிலாந்து கோடீசுவரர் மகள் ஜெமீமா கோல்டுஸ்மித்துக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு சுலைமான்...
பிரான்ஸ் தலைநகரான பாரீசில் இன்று நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒரு பெண் போலீஸ் அதிகாரி உயிரிழந்தார்.பாரீஸ் நகருக்கு வெளியே தெற்குப்புற நகரமான மொண்ட்ரோகில் இன்று அதிகாலை நடந்த ஒரு விபத்து தொடர்பாக ஒரு பெண் போலீஸ் அதிகாரி விசாரணை நடத்திக்கொண்டிருந்தார். அப்போது, கறுப்பு நிற உடை அணிந்து வந்த நபர் அந்த போலீஸ் அதிகாரியை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். இதைப் பார்த்த துப்புரவு ஊழியர் ஒருவர், விறுவிறுவென...
முன்னாள் பிரபல குத்துச்சண்டை வீரர் முகமதுஅலி. 3 முறை உலக ஹெவி வெயிட் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இவருக்கு 72 வயதாகிறது. சிறுநீரக தொற்றுநோய் பாதிப்பு காரணமாக முகமது அலி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை முடிந்து அவர் மருத்துவமனையில் இருந்து நேற்று வீடு திரும்பினார். இதை அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடை பெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 572 ரன் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. கேப்டன் சுமித் (117 ரன்), வார்னர் (101 ரன்) சதம் அடித்தனர். முகமது ஷமி 5 விக்கெட் கைப்பற்றினார். பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய 2–வது நாள் ஆட்டத்தின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு...