வங்காளதேச கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருபவர் ருபேல் ஹொசைன். இவர் விரைவில் நடைபெற இருக்கும் உலக்கோப்பை போட்டியில் விளையாட இருக்கும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளளார். இந்நிலையில் நடிகை ஒருவர் அளித்த புகார் அடிப்படையில் அவருக்கு டாக்கா நீதிமன்றம் ஜெயில் தண்டனை வழங்கியுள்ளது. திருமணம் செய்வதாக பொய்யான வாக்குறுதி கொடுத்து ருபேல் ஹொசைன் தன்னை ஏமாற்றி விட்டதாக நடிகை ஒருவர் மிர்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதில் தன்னை கைது செய்யாமல்...
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமாகி சுமுகமான முறையில் தற்போது நிறைவடைந்துள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்களிப்பு 4 மணிவரை இடம்பெற்றது. சிறு சிறு அசம்பாவிதங்களோடு இம்முறை வாக்களிப்பு நிறைவடைந்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார். மேலும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க ஒருகோடியே 50 லட்சத்து 44,490 பேர் தகுதி பெற்றிருந்தனர். நாடுபூராகவுமுள்ள 12,314 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. யாழ் மாவட்டத்தில் 59 வீதமான வாக்குப்...
   ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புக்களில்யாழ்ப்பாணத்தில் இதுவரை 50வீத வாக்குகள் பதிவு- கிளிநொச்சியில் 70வீத வாக்குகள் பதிவு  இன்று பிற்பகல் 2 மணி வரை யாழ்ப்பாணத்தில் 50.4வீத வாக்குகள் பதிவாகின மட்டக்களப்பிலும் 48 வீத வாக்குகள் பதிவாகின. இந்த இரண்டு இடங்களிலும் மாலை 4 மணிவரை 60 வீதமான வாக்குகள் பதிவாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. முன்னதாக 12 மணிவரை ஏனைய மாவட்டங்களில் 55 வீத வாக்குகள் பதிவானநிலையில் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் 25வீத வாக்குகளே பதிவாகியிருந்தன. யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பை தடுக்கும்...
  வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் கைக்குண்டு வீசப்பட்டுள்ளது. எனினும் வீசப்பட்ட குண்டு வெடிக்கவில்லை. இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இனந்தெரியாதோர் கைக்குண்டை வீசிவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர். இதனால் 3.30 மணிக்குப் பின்னரான வாக்களிப்பு பாதிக்கப்பட்டதுடன், வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. குறித்த இடத்தை விட்டு குண்டை அகற்றமுடியால் அந்த இடத்திலே செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கென விசேட அதிரடிப் படையினர் அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டு வவுனியா தமிழ்...
2015இற்கான ஜனாதிபதித் தேர்தல் சுமுகமான முறையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. ஆங்காங்கே ஒருசில அசம்பாவிதங்கள் இடம்பெற்றாலும் மக்கள் ஆட்சிமாற்றம் தேவை என்பதற்காக உற்சாகமாக வாக்களிப்பதனைக் காணக்கூடியதாகவிருந்தது. அரியாலையில் ஒரு கைக்குண்டுத்தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றது. இதில் மூவர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது எனினும் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. நிச்சயமாக இத்தேர்தலில் மைத்திரிபால சிறிசேன அவர்கள் வெற்றி பெறுவார் என்றும் தமிழ் பேசும் மக்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது இத்தேர்தலின் மூலம் தெரிகின்றது. போலியான துண்டுப்பிரசுரங்களின்...
நாட்டில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜனாதிபதித் தேர்தல்களில் பாரிய அசம்பாவிதங்கள் எதுவும் பதிவாகவில்லை என கபே அமைப்பு தெரிவித்துள்ளது. வாக்களிப்பு வீதம் அதிகமாகவுள்ள அதேவேளை சுமுகமான தேர்தல் நடைபெற்று வருவதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார். கபே அமைப்புக்கு கிடைக்கப்பெற்றுள்ள சில முறைப்பாடுகள்: அக்கறைப்பற்று பகுதியில் ஆளும் கட்சியினருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன் வாகனம் ஒன்று சேதமாக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வாகரையில் ஆளும்...
வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய மைதானத்தில் இன்று பிற்பகல் 2.40 மணியளவில் கைக் குண்டு ஒன்று வெடிக்கவைக்கப்பட்டுள்ளது. வாக்களிப்பு நிலையமாக இயங்கிவரும் இந்த பாடசாலைக்கு அருகில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தையடுத்து பொலிஸாரும் இராணுவத்தினரும் அந்தப் பகுதிகு விரைந்துள்ளனர் என்று தெவிக்கப்பட்டுள்ளது.   பிற்பகல் 2 மணிவரையான நேரத்தில் பதிவான வாக்கு வீதவிவரம் வருமாறு:- யாழ்ப்பாணம் 51.5% கிளிநொச்சி 55.4% முல்லைத்தீவு 68% மன்னார் 62% வவுனியா 51%   ஜனாதிபதி தேர்தல் 3 மணிவரை வாக்களிப்பு வீதங்கள்  ஜனாதிபதி தேர்தல்...
  People all around the country pays much more interested selected their new president and they visits polling booths early in the morning. Tamil and Muslim nationals reside in the Northern and Eastern parts of the island much more interested to cast their votes.Tamil National Alliance parliamentarians Sridharan and Sumandhiran casted...
தண்ணீர் வரத்தின்றி பல ஏக்கர் பயிர்கள் அழியும் நிலையில் உள்ளதாக தண்ணிமுறிப்பு விவசாயிகள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனிடம் முறையிட்டுள்ளனர். வாய்க்கால் வழியாக செல்லும் நீரை நம்பியிருக்கும் விவசாயிகள் அந்த நீர் குறித்த இடங்களை அடையாமல் இருப்பதாகவும் இதனால் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரின்றி காணப்படுவதாகவும் தண்ணிமுறிப்பு விவசாயிகளும் மக்கள் பிரதிநிதிகளும் முறையிட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது, இன்று மாலை 5 மணியளவில் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்களுக்கு அழைப்பை ஏற்படுத்திய...
  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். நாவலர் கலாசார மண்டபத்துக்கு வாக்களிப்பதற்காக சென்ற வாகனத்தில் மகிந்த ராஜபக்சவின் படம் பொறிக்கப்பெற்ற தேர்தல் துண்டுப்பிரசுரங்கள் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலுக்கான பரப்புரை நடவடிக்கைகள் கடந்த 5ம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்திருந்தது. எனினும் இன்றைய தினம் வாக்களிக்க சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வாகனத்திற்குள் சட்டவிரோதமாக மகிந்தவை ஆதரிக்கும் துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு தெரியும் படியாக வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.