பிரான்சில் பத்திரிகை அலுவலகத்திற்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 12 பேர் பலியாகியுள்ளனர்.பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ வாரப் பத்திரிகை அலுவலகத்துக்குள் ஆயுதங்களுடன் புகுந்த இரு மர்ம நபர்கள் பத்திரிகை ஊழியர்களை கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளினர், இதில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை நடத்திய நபர்கள் கருப்பு நிற தலைப்பாகையுடன் கூடிய முகமூடி அணிந்து வந்ததாகவும், துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் அவர்கள் தப்பியோடி விட்டதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள்...
ஓர் இடத்திலிருந்து பிறிதோர் இடத்திற்கு சிறிய அளவிலான பொருட்களைத் தூக்கிச் செல்லக்கூடிய Quadcopter இல் உலகின் வேகம் கூடிய Quadcopter உருவாக்கப்பட்டுள்ளது.X PlusOne என பெயரிடப்பட்டுள்ள இச்சாதனம் மணிக்கு 100 கிலோமீற்றர்கள் வேகத்தில் பயணம் செய்யக்கூடியது. மேலும் இந்த வருடத்திற்கான CES (Consumer Electronics Show) நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த Quadcopter இன் விலை 479 அமெரிக்க டொலர்கள் ஆகும்.  
Gogoro எனும் இலத்திரனியல் ஸ்கூட்டர் ஒன்று CES (Consumer Electronics Show) நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.முற்றிலும் மின்கலத்தின் உதவியுடன் இயங்கும் இந்த ஸ்கூட்டர் மணிக்கு 95 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கக்கூடியதாக இருப்பதுடன் 4.2 செக்கன்களில் 50km/h எனும் வேகத்தினை அடையக்கூடியதாகவும் இருக்கின்றது. எனினும் இதன் விலை வெளியிடப்படாத நிலையில் இந்த வருடம் விற்பனைக்கு வரவுள்ளதாக அந்நிறுவனத்தின் பேச்சாளர் Megan Zaroda தெரிவித்துள்ளார்.
குளிர்காலம் என்றாலே நமது உணவு பழக்க வழக்கங்களில் கண்டிப்பாக மாற்றம் கொண்டு வரவேண்டும்.குளிர்காலம் என்றாலே சளி, ஜலதோஷம் பிடிக்கும் என்பதற்காக பழங்களை சாப்பிடுவதையே நிறுத்திவிடுவார்கள். இவ்வாறெல்லாம் சரியாக சாப்பிடாமல் இருந்தால் உடலை எந்த ஒரு கிருமிகள் தாக்கினாலும், அவை எளிதில் உடலில் புகுந்து தங்கிக் கொள்ளும் நிலை ஏற்படும். எனவே நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்  கொள்ள வேண்டும். பசலைக் கீரை பசலைக் கீரையில் அதிகளவு சத்துக்கள் உள்ளது, இதனை...
Asus நிறுவனம் ZenFone 2 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை CES நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது.5.5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசியானது 2.3GHz வேகத்தில் செயல்படக்கூடிய 64 bit Processor, பிரதான நினைவகமாக 4GB RAM என்பனவற்றுடன் 16GB, 32GB, 64GB ஆகிய கொள்ளளவுகளை உடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5...
சோனி நிறுவனம் 4K Ultra HD தொழில்நுட்பத்தினைக் கொண்ட வீடியோ கமெராவினை CES நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது.Sony 4K FDR-X1000V எனப்படும் இக்கமெராவானது செக்கனுக்கு 30 பிரேம்கள் எனும் வேகத்தில் 3840 × 2160 Pixel Resolutionm உடைய வீடியோக்களை பதிவு செய்யக்கூடியதாக இருக்கின்றது. மேலும் 170 டிகிரியில் காட்சிகளை பதிவு செய்யக்கூடியதாகவும் காணப்படும் இக்கமெராவின் விலை வெளியிடப்படவில்லை.
ஐ போனில் இயங்கும் ஸ்மார்ட் பேனா என்ற புதிய தொழில்நுட்பம் விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ளது.இந்த ஸ்மார்ட் பேனா ஐபோன் மூலம் இணைக்கப்பட்டு பேப்பரிலோ அல்லது ஏதாவது ஒரு பொருளில் மீது எழுதினால் அது அப்படியே ஐ போன் திரையில் பிரதிபலிக்கும். இதற்கான அப்ளிகேசனை ஐபோனில் நிறுவும் போது பேனாவின் அசைவை உள்வாங்கி ஐபோன் அந்த எழுத்துக்களை அப்படியே காட்சிபடுத்தும். இந்த புதிய தொழிநுட்பம் சந்தைக்கு விரைவில் வரவிருக்கிறது. மேலும் விரைவில் ஆப்பிள்...
உலக அழகி போட்டியில் இனிமேல் நீச்சல் உடை பிரிவு சார்ந்த போட்டி நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 1951ம் ஆண்டு முதல் உலக அழகி போட்டியில் நீச்சல் உடையில் தோன்றுவது வழக்கமாக இருந்து வருகிறது. அப்போது முதல் உலக அழகியாக மகுடம் சூடப்பட்ட கிகி ஹகன்சன், நீச்சல் உடை அணிந்த நிலையில் பரிசினை வென்றார். இந்நிலையில் கடந்த 2001ம் ஆண்டு இந்த சுற்று போட்டியை மேடையில் நடத்த வேண்டாம் என போட்டி அமைப்பாளர்கள்...
பிரான்ஸ் பத்திரிகை அலுவலக தாக்குதலில் ஈடுபட்ட மூன்று தீவிரவாதிகளில் ஒருவர் சரணடைந்துள்ளார்.பிரான்சின் தலைநகர் பாரிசில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தில் நேற்று நுழைந்த 3 தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 கார்ட்டூனிஸ்டுகளையும், 5 நிருபர்கள் மற்றும் 2 பொலிசாரை கொலை செய்துள்ளனர். இக் கொடூர தாக்குதலில் ஈடுபட்ட மூன்று தீவிரவாதிகளில் ஒருவர் சரணடைந்துள்ளார், அவரது பெயர் ஹமித் மொராத்(வயது 18). மற்ற இருவரும் சகோதரர்கள் என்று தெரியவந்துள்ளது. அவர்களது பெயர்...
மலையகத்தில் மக்கள் மிக ஆா்வத்துடன் வாக்களிக்களித்து வருவதுடன், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானும் வாக்களித்துள்ளார். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இறம்பொடையில் உள்ள வெவண்டன் தமிழ் மகா வித்தியலாயத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று வாக்களித்துள்ளார். வாக்களிக்கும் நிலையத்தில் திகாம்பரம் தொழிலாளா் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் வட்டகொடை மடக்கும்புரையில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்துள்ளார்.   சாந்தினி சந்திரசேகரன் வாக்களிப்பு மலையக மக்கள் முன்னணியின் தலைவி சாந்தினி தேவி சந்திரசேகரன் அவா்கள் தலவாக்கலையில்...