இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நாளை மறுதினம் நடைபெறவுள்ள நிலையில், நூற்றுக்கும் அதிகமான இணையத்தளங்கள் இலங்கையில் பார்வையிட முடியாதவாறு அரசாங்கத்தினால் முடக்கப்பட்டுள்ளன. தேர்தல் பிரச்சாரங்கள் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்ததையடுத்து, தேர்தல் பரபரப்புக்களும் பதற்றங்களும் அனைவரையும் ஆட்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. அந்த வகையில், இலங்கையில் அதிரடியாக நூற்றுக்கும் மேற்பட்ட செய்தி இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து இயக்கும் தமிழ் ஊடகங்களும் இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக இலங்கையில் இயங்கும் ஊடகங்களுமே இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளன. தேர்தலுக்கு முன்னரே ஜனாதிபதி...
  ஆட்சி மாற்றம் மிக முக்கியமாக அவசியம். அடுத்த ஆறு வருடங்களுக்கு அதே ஆட்சி இருந்தால் மக்களுக்கு பாதகமான விளைவே ஏற்படும் எனவே புதிய வேட்பாளருக்கு ஆதரவு அளித்துள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவை உடனடியாக அறிவிக்கவில்லை. ஒரு மாதத்திற்கு மேலதிகமாக முடிவை அறிவித்திருக்கிறோம். அந்த முடிவில் உறுதியாக உள்ளோம் என லங்காசிறி வானொலிக்கு வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்தார். தென்...
   இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து வன்முறைகள் வெடிக்கலாம் என்ற அச்சத்தில் மக்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தலில் ஏற்படும் கடுமையான போட்டிகள், பிரசார உத்திகள் மற்றும் கட்சி ஆதரவாளர்களின் நடவடிக்கைகள் என்பன மக்கள் மத்தியல் இந்த உணர்நிலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆளும் கட்சி தமது ஆதரவாளர்கள் மூலம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. தேர்தல் முடிவுகளின் பின்னர் பாரியளவில் வன்முறைகள் வெடிக்குமா? இராணுவத்தின் தலையீடுகள் அதிகரிக்குமா...
  ஜனாதிபதி மஹிந்த பேசிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது மட்டக்கிளப்பில் நடந்த கூட்டத்தில்நாங்கள் சிங்களம் நானும் சிங்களம் கேட்டுகொண்டு இரு தமிழனே கேட்டுக் கொண்டு இருக்க முடியாவிட்டால் போ.. இப்படி மஹிந்த பேசியதாக அந்த செய்தி கூறுகிறது.ஆனாலும் அந்த கூட்டம் 2010 இல் வவுனியாவில் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் மத்தியில் பேசியபேச்சு அது.ஆனால் உண்மையில் தமிழில் பேசியதற்காக கூச்சலிட்ட சிங்களவர்களை வெளியில் போகச் சொல்லி மகிந்த 2010 ஆம் ஆண்டில்...
  ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான கள நிலவரத்தை கருத்தில்கொண்டு பாப்பரசரின் இலங்கை வருகை குறித்து சந்தேகம் வெளியிடப்பட்டது. இந்நிலையில், திட்டமிட்டபடி எதிர்வரும் 13 ஆம் திகதி பாப்பரசர் பிரான்ஸிஸ் நிச்சயமாக இலங்கை வருவார் என இலங்கை கத்தோலிக்க பேரவை உத்தியோகபூர்மாக அறிவித்தது. மேலும், 14 ஆம் திகதியன்று கொழும்பு, காலி முகத்திடலில் பாப்பரசரினால் நடத்தப்படும் விசேட திருப்பலி பூஜையின்போது முத்திப்பேறு பெற்ற ஜோசப் வாஸ் அடிகளாருக்கு 'புனிதர்' பட்டம் சூட்டப்படும்...
  எதிர்வரும் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ஜனநாயக ஆயுதமான வாக்கை முழுமையாக பயன்படுத்த வேண்டும் வாக்கு என்பது மிக முக்கியமான ஜனநாயக கடமைக்குரிய ஆயுதம். எனவே தமிழ் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேர்தல் நாளன்று காலையிலேயே வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிப்பது அவசியம். அப்படி வாக்களிக்க தவறுகின்ற சந்தர்ப்பத்திலும் வாக்களிக்க போகாமல் கவலையீனமாக இருக்கின்ற நிலையிலும் அந்த வாக்குகளை மோசடியாளர்கள் பயன்படுத்தக்கூடிய அபாய நிலை உண்டு. இதன் மூலம் தமிழர்கள்...
  இனப்படுகொலை என்பது இரு பிரதான கட்சிகளுமே செய்து வந்தன இந்த நிலையில் மைதிரிபாலசிறிசேனவை தமிழ்பேசும் மக்கள் எப்படி ஆதரிக்கலாம் என்று முன்னால் வர்த்தக வணிக அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களிடம் தினப்புயல் இணையத்தளம் அதிரடி கேள்விகள்-வீடியோஇணைப்பு  
  வெற்றியின் பின்னர் பழிவாங்கல்களில் ஈடுபட வேண்டாம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமது ஆதரவாளர்களிடம் கோரியுள்ளார். கெஸ்பாவையில் நேற்று இரவு இடம்பெற்ற இறுதி பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் வெற்றி பெறும் நம்பிக்கையை வெளியிட்டார். தாம் வெற்றி பெற்றதும் எதிரணியின் தேர்தல் அறிக்கையை குப்பைக் கூடைக்குள் தூக்கியெறியப் போவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். தாம் நாட்டை துண்டாட விடப் போவதில்லை என்றும் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணியப்...
  எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன அவர்களின் இறுதிப் பிரச்சாரக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வழிந்து நிரம்பியதால், கொழும்பு திணறிப்போனது. திங்கட்கிழமை மாலை கொழும்பு மருதானை டவர் மண்டபம் அருகில் குறித்த கூட்டம் நடைபெற்றது. கடுமையான உயிர் அச்சுறுத்தல்களின் மத்தியிலும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இதன்போது பிரச்சாரக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்களைக் கண்டு அவருக்கு கண் கலங்கி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டத்தில் கலந்து...
  மகிந்த மைத்திரி ஏட்டிக்குப்போட்டியான இறுதி உரை   // Post by Newsfirst.lk. // Post by Mahinda Rajapaksa.