சொந்த தயாரிப்பில் ஹீரோக்கள் சிக்கனம் கடைப்பிடிப்பதில் கவனமாக இருக்கின்றனர். சமீபத்தில் விஷால் தான் தயாரிக்கும் ‘ஆம்பள‘ படத்தின் பாடல் கம்போசிங் செலவை ரூ.2,500க்குள் முடித்ததாக குறிப்பிட்டார். இதையடுத்து பட தயாரிப்பில் குதித்திருக்கும் சூர்யாவும் பட குழுவினருக்கு சிக்கனத்தை போதித்திருப்பதுடன் மனைவி ஜோதிகாவுக்கும் அட்வைஸ் தந்திருக்கிறாராம். திருமணத்துக்கு பிறகு நடிக்காமல் ஒதுங்கி இருந்தார் ஜோதிகா. நிறைய வாய்ப்புகள் வந்தும் ஏற்கவில்லை. மலையாளத்தில் ஹிட்டான ‘ஹவ் ஓல்டு ஆர் யூ‘ கதை...
 விஜய் நடிக்கும் படத்துக்கு நான்கு தலைப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், சுதீப், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, கருணாஸ் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் இப்போது நடந்துவருகிறது. பி.டி.செல்வகுமார், சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் பேன்டஸி பார்முலா கதையை கொண்டது. சென்னையில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட செட்டில் முதல் ஷெட்யூல் நடந்தது. அடுத்து மைசூரில் நடந்தது. இப்போது சென்னையில் தொடர்கிறது.  பிப்ரவரி மாதம் ஆந்திராவில் நடக்கிறது. இந்தப் படத்துக்கு இன்னும்...
தென்ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை 393 விக்கெட்டுக்களை அவர் வீழ்த்தியுள்ளார். இதனால் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய தென்ஆப்பரிக்கா வீரர்கள் பட்டியலில் நிட்னியை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். ஸ்டெயின் 146 இன்னிங்சில் 393 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில்...
இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் சிட்னியில் மோதும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஜான்சன் விளையாட மாட்டார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மெல்போர்னில் நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் ஜான்சனுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அதிலிருந்து ஜான்சன் விடுபடுவார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எதிர்பார்த்தது. ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக ஜான்சன் இன்னும் தசைப்பிடிப்பிலிருந்து முழுமையாக விடுபடவில்லை. இதனால் சிட்னியில் நடைபெறும் கடைசி...
நியூசிலாந்து– இலங்கை அணிகள் மோதும் 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 221 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 78 ரன் என்ற பரிதாப நிலையில் இருந்தது. இன்று 2–வது நாள் ஆட்டம் நடந்தது. இலங்கை அணி தொடர்ந்து விளையாடியது. 37 வயதான...
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான உத்தேச இந்திய அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. 30 பேர் கொண்ட இப்பட்டியலில் முன்னணி வீரர்களான காம்பீர், யுவராஜ், சேவக், ஜாகிர்கான் மற்றும் ஹர்பஜன் ஆகியோர் இடம்பெறவில்லை. இப்பட்டியலில் யுவராஜ் சிங்குக்கு வாய்ப்பளிக்காதது முன்னாள் வீரர்கள் பலருக்கும், அவரது ரசிகர்களுக்கும் பலத்த அதிர்ச்சியை அளித்தது. இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத போதிலும் ரஞ்சி போட்டிக்கான அணியில் பங்கேற்ற யுவராஜ் மூன்று சதங்களையும், ஒரு அரை...
வங்காள தேசத்தில் கடந்த 1991–96, 2001–06 காலகட்டங்களில் பிரதமர் பதவி வகித்தவர், கலிதா ஜியா (வயது 69). கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி நடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலை கலிதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சி புறக்கணித்து. இதனால், அந்த தேர்தலில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கூட்டணி கட்சி பெரும்பான்மை பெற்றது. ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமரானார். தேர்தலில் தில்லுமுல்லு செய்து ஷேக் ஹசீனா...
அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தை மையமாகக் கொண்டு செயல்படும், நியூ இங்கிலாந்து ப்ரூவிங் என்ற மது உற்பத்தி நிறுவனம் மகாத்மா காந்தியின் படங்களை பீர் பாட்டில் மற்றும் பாட்டில்களில் உபயோகித்ததற்காக இன்று மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது. ’காந்தி-பாட்’ என்ற பெயரில் தனது பீரை விற்று வரும் இந்த நிறுவனம் காந்திக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், இளைய தலைமுறையினரிடம் அவரது புகழை கொண்டு சேர்க்கும் எண்ணத்திலேயே இதைச் செய்ததாகவும் தெரிவித்துள்ளது. மது புட்டிகள் மீது...
ஜாவா கடல் பகுதியில் விழுந்த ஏர்ஏசியா QZ8501 விமானத்தில் இருந்து இன்று மேலும் ஒரு உடல் மீட்கப்பட்டதாகவும், ஐந்தாவதாக ஒரு பெரிய பாகம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியாவின் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற மலேசியாவின் ‘ஏர் ஏசியா’ விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய்த 162 பேரும் பலியாகினர். இதற்கிடையே, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 90-க்கும் அதிகமான கப்பல்களும், விமானங்களும்...
பாகிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் பாகிஸ்தானில் வன்முறைத் தாக்குதல்களால் அமைதியிழந்து காணப்படும் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம், தீவிரவாதிகளை வேட்டையாடி வருகிறது. அதேசமயம் அமெரிக்காவும் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. வடக்கு வசிரிஸ்தானின் ஷவல் பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் இன்று நடந்த இந்த தாக்குதலில் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் எந்த தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. இந்த...