ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Thinappuyal News -0
ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்களின் பிரச்சார சுவரொட்டிகள், பதாதைகள் உள்ளிட்டவற்றை அகற்றுமாறு பொலிஸாருக்கு தேர்தல் ஆணையாளர் அலுவலகம் அறிவுரை வழங்கியுள்ளது.
அதே வேளை தேர்தல் பிரச்சார காரியாலயம் 6 ஆம் திகதியுடன் நீக்கப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுவீடாக விநியோகிக்கும் விசேட தினமாக இன்றை தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தற்போதும் 90 சதவீதமான...
இராணுவ கனரக வாகனங்கள் தயார் நிலையில்! வாகனத்தை செலுத்தும் சாரதிகளுக்கே தெரியாதிருப்பதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Thinappuyal News -
நாடெங்கும் உள்ள இராணுவ முகாம் பகுதியின் வெளிப்புறங்களில் இராணுவ கனரக வாகனங்கள் (BUFFELS) நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக ஊவா மாகாணத்தின், பண்டாரவளை வெலிமடை, ஊவா பரணகம ஆகிய பகுதியில் இராணுவ கனரக வாகனங்கள் தாயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான காரணங்களை இந்த வாகனத்தை செலுத்தும் சாரதிகளுக்கே தெரியாதிருப்பதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
//
Post by ரெட்பானா செய்திகள்.
அரசியல் தேவைகளுக்குத்தான் இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காண்பதற்கு முன்வராமல், அதை பிச்சைக்காரன் புண்போல வைத்துக் கொண்டிருக்கின்றனர். நாளைக்கே வேண்டுமென்றாலும் எம்மால் தீர்வு தர முடியும்.ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்- மஹிந்த ராஜபக்ஷ
Thinappuyal News -
"தேசிய இனப்பிரச்சினைக்கு நாளை வேண்டுமென்றாலும் எம்மால் அரசியல் தீர்வை வழங்கமுடியும். எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதை ஏற்காது. இனப்பிரச்சினையை 'பிச்சைக்காரன் புண்போல்' வைத்துக்கொண்டு அரசியல் நடத்தவே அது விரும்புகின்றது.'' - இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். ஞாயிறுவார இதழ்களின் ஊடகவியலாளர்களுக்கு அலரி மாளிகையில் வைத்து வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அரசியல் தீர்வு, பொதுவேட்பாளரை ஆதரிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவு ஆகிய...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 2000 குடும்பங்களுக்கு வெள்ள அனர்த்த நிவாரணப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது இதில் சிறீ ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் திரு ப.உதயராசா
Thinappuyal News -
03/01/2015அன்று சிறீ ரெலோ கட்சியினரால் வவுனியாவில் கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 2000 குடும்பங்களுக்கு வெள்ள அனர்த்த நிவாரணப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது இதில் சிறீ ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் திரு ப.உதயராசா அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்வையிட்டு பொருட்களை வழங்கிவைத்தார்
ஆட்சி மாற்றத்தை நாங்கள் ஏற்படுத்தவேண்டும். மக்களின் மிகவும் பலமான ஆயுதம் அவர்களுடைய ஜனநாயக உரிமையான வாக்குரிமை. இதனைப் பயன்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வருகின்றபோது அதை முழுமையாகப் பயன்படுத்தவேண்டும்- இரா.சம்பந்தன்.
Thinappuyal News -
"தமிழ் பேசும் மக்களுக்கு நீதி, நியாயம் கிடைக்கக்கூடிய வகையில் எதிர்காலம் அமைவதற்கு ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை நாம் ஆதரிக்கின்றோம். எனவே, ஜனவரி 8ஆம் திகதி மைத்திரிபாலவின் சின்னமான அன்னத்திற்கு தவறாமல் தமிழ் பேசும் மக்கள் வாக்களிக்கவேண்டும்." - இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "ஜனவரி...
இன அழிப்பு நடந்த முல்லைத்தீவிற்கு மகிந்த ராஜபக்ச விஐயம்! கிளிநொச்சியில் தேர்தல் பிரச்சாரம்!
Thinappuyal News -
ஐனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் தெற்கில் சூடுபிடித்திருக்கின்ற நிலையில் இத் தேர்தல் பிரச்சாரங்கள் வடக்கிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக மகிந்தராஐபக்ஸ இன்று காலை முல்லைத்தீவிற்கு விஐயம் மேற்கொண்டுள்ளார். அவரது விஐயத்தை முன்னிட்டு மாவட்டத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்த அதே வேளையில் அவரது கூட்டத்தில் கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு அரசஉத்தியோகத்தர்கள் முதல் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டுமென வற்புறுத்தி அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
தெற்கில் இத் தேர்தல் பிரச்சாரம் வடக்கில் ஆரம்பிக்கப்படாதிருந்த போதிலும்...
டக்ளஸ்தேவானந்தா ரோட்டில வேட்டிய அவிட்டுவிட்டு நடமாடுவதே நல்லது -அசாத்சாலி வீடியோஇணைப்பு
Thinappuyal News -
டக்ளஸ்தேவானந்தா ரோட்டில வேட்டிய அவிட்டுவிட்டு நடமாடுவதே நல்லது -அசாத்சாலி
வீடியோஇணைப்பு
மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க எடுத்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பகிரங்கமாக கருத்து வெளியிடும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தாம் உத்தரவிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவுக்கு, மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். அதேவேளை, மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கமும், தாமும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக ஆங்கில ஊடகம்...
பரிசுத்த பாப்பரசரின் வருகயை முன்னிட்டு மடு திருத்தலத்துக்கு செல்லக்கூடிய வீதிகள் அனைத்தும் புனரமைக்கப்படும் – வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர்….
Thinappuyal News -
பரிசுத்த பாப்பரசரின் வருகயை முன்னிட்டு மடு திருத்தலத்துக்கு செல்லக்கூடிய வீதிகள் அனைத்தும் புனரமைக்கப்படும் - வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர்....
பரிசுத்த பாப்பரசரின் வருகயை முன்னிட்டு 03-01-2015 சனிக்கிழமை காலை 11 மணியளவில் மடு திருத்தலத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் இடம்பெற்ற விசேட ஒன்றுகூடலில் கலந்துகொண்ட வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி, வர்த்தக வாணிபம், வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன்...
விளக்கைப்பிடித்துக்கொண்டு சென்று, கிணற்றில் விழச்சொல்லும் கூட்டமைப்பு! தமிழர்கள் என்ன செம்மறியாட்டுக்கூட்டமா? -கதிரவன்-
Thinappuyal News -
நாடு முழுவதுமே எதிர்வரும் தை 8 ஆம் திகதியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றது ஆழும் கட்சியும் எதிர்க்கட்சியும் தேர்தல் பிரச்சாரங்களை நீ முந்தி நான் முந்தி என்று போட்டிபோட்டு முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றன. சில மாதங்களுக்குமுன் தனது அதிகாரத்தின் கீழ் தன்னுடன் இருந்தவர்கள் பலர் தனக்கு எதிராக களமிறங்குவார்கள் என்பதை மகிந்தர் சிந்தித்துக்கூடப்பார்த்திருக்க சந்தர்ப்பம் இல்லை என்றுதான் கூறமுடியும்.
ஆட்சியும் அதிகாரமும் தன்னிடத்தே உள்ளதால் எதையும் செய்துவிடலாம் என்றும் எப்போதுமே எல்லோரையும் ஏமாற்றலாம் என்று பகல்கனவு கண்டுகொண்டிருந்த...