யுத்தத்தினாலும் இயற்கை அனர்த்தத்தினாலும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள எமது தாயக மக்களின் இயல்பு வாழ்வைக்கட்டியெழுப்ப வழிகோலுவதாக புதிய ஆண்டின் வரவு அமையட்டும். நாடு முழுவதும் தொடரும் சீரற்ற காலநிலையால் இடம்பெயர்ந்தும் சொந்த வீடுகளிலும் அல்லல்படும் மக்கள் தமது இயல்பு வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு வழிசமைப்பதாகவும், வாழ்வாதாரத்தை இழந்து அவதிப்படும் மக்கள் தமது வாழ்வாதாரத்தைச் சீரமைத்துக்கொள்வதற்கும் மலரும் 2015ஆம் ஆண்டின் புத்தாண்டு வழிசமைக்கட்டும். தொடர்ந்தும் நீடித்துவரும் எமது இனப்பிரச்சினைக்கான தீர்வைக் கொண்டுவருவதற்கான திறவுகோலாக 2015ஆம் ஆண்டு...
நிழல் தரப்போகும் ஈழ விருட்சங்களுக்கு, நீர் பாய்ச்சுக்கொண்டிருக்கும் புலம்பெயர் மேகங்களுக்கு பேருவகையுடன் வடமாகாண பிரஜைகள் குழுக்கள் விடுக்கும் அழைப்பு! தமது பூர்வீக நிலபுலங்களிலிருந்து 2009ம் வருடம் முழுதாக பெயர்த்தெறியப்பட்ட எமது மக்கள், எத்தகைய உள்கட்டுமான வசதிகளும் முழுமைப்படுத்தப்படாதநிலையில் மீளக்குடியேற்றப்பட்டு தங்களின் பொருளாதார, வாழ்வாதார உதவிகளினால் மெல்ல மெல்ல மேலெழுந்து வந்துகொண்டிருக்கும் நிலையில், சிறீலங்கா அரசின் வஞ்சிப்பு போதாதென்று இயற்கையும் எமது மக்களை மோசமாக வஞ்சித்துள்ளது. வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பிரதேசங்களில் கடந்த...
  தேர்தல் பிரசாரத்துக்காக மன்னார் மாவட்டத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மடுதேவாலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஜனாதிபதியை வரவேற்றார். அங்கு இடம்பெற்ற பிரார்த்தனையில் கலந்துகொண்டு ஜனாதிபதி மடு அன்னையை வழிபட்டார். அதனைத் தொடர்ந்து அங்கு அருட்தந்தையர்களுடன் கலந்துரையாடினார்.
கடந்த சில வாரங்களில் தொடர்ந்த கடும் மழையின் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குடியிருப்புகள் நீருள் முழ்கியதால் இலட்சக்கணக்கான மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. அந்தவகையில் மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தின் காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்களில் சுமார் 677 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று வழங்கி வைத்தார். மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேசத்திற்குட்பட்ட நான்கு இடைத்தங்கல் முகாம்களில் இருந்த 677 குடும்பங்களுக்குமே மேற்படி நிவாரண...
ஜனவரி-08 அன்று சிறீலங்காவின் 08வது ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தல் நடைபெறவுள்ளது. அத்தேர்தலில் ஆளும்கட்சியின் சார்பில் சிறீலங்காவின் தற்போதைய அதிபர் மஹிந்த ராஜபக்ஸ, எதிர்க்கட்சிகளின் சார்பில் மைத்திரிபால சிறிசேன உள்பட 19 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். புல்டோசர் போல எதிரில் வரும் எல்லாவற்றையும் ஏறி மிதித்து நசுக்கிக்கொண்டு செல்லும் மஹிந்த ராஜபக்ஸ அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பது பலருடைய வாதமாக இருக்கிறது. எனவே ஆட்சி மாற்றம் பற்றி பேசப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில், சாதாரண பொதுஜனங்கள் ‘சரத் மனமேந்திர’வின்...
இரத்தினபுரி, பெல்மடுல்லையில் இடம்பெற்ற எமது பிரசாரக் கூட்டத்தில் அரச தரப்பு குண்டர் குழுவினரே எம்மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பாவி மக்கள் காயமடைந்தனர். - இவ்வாறு பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்றிரவு பெல்மடுல்லையில் இடம்பெற்ற பொது எதிரணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "பெல்மடுல்லையில் இடம்பெற்ற...
  ஜனாதிபதி மஹிந்தாவின் யாழ்.மாவட்ட பிரச்சாரக் கூட்டத்தில் அங்கஜன் அணியினரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சகோதரர் அடிவாங்கிய பரபரப்பு சம்பவம் நேற்று யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றிருக்கின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்.துரையப்பா விளையாட்டரங்களில் ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது ஈ.பி.டி.பி அணியினரும், அங்கஜன் அணியினரும் ஜனாதிபதிக்கு அதிகம் விசுவாசம் உள்ளவர்கள் யார் என்பதை காண்பிப்பதற்காக தேர்தல் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தனர். இதன்போது அங்கஜன் அணியினரில் சில இளைஞர்களை,...
  ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தனிஈழம் தான் தீர்வு என்று இதுவரை எந்தவொரு நாடும் ஒத்துக் கொள்ளவில்லை  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழத் தமிழரின் மேம்பட்ட மனித வாழ்வுக்காக ஏற்படுத்தப் பட்ட அரசியல் அமைப்பாகும். அவர்கள் எடுத்துக் கொண்ட பணி ஈழத் தமிழ் மக்களுக்கு இன, மத, பொருளாதார, அரசியல் ஒடுக்குமுறைகள் இல்லாத ஒரு கௌரவமான சுதந்திரமான நவீன முன்னேற்றங்களுடனான வாழ்வைப் பெற்றுக் கொடுப்பதுதான். அதைச் சாதிப்பதற்கு அவர்கள் என்ன செய்யலாம் என்ன செய்ய...
  ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்காக நாளைய தினம் யாழ்.குடாநாட்டுக்கு ஜனாதிபதி வருகைதரவுள்ள நிலையில் ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்வுக்கு மக்களை அழைத்து வருவதற்காக இலங்கை போக்குவரத்துச் சபையின் 450 பேருந்துகள் யாழ்.குடாநாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றன. நாளைய தினம் யாழ்.குடாநாட்டுக்கு வருகை தரும் ஜனாதிபதி யாழ்.துரையப்பா விளையாட்டரங்களில் நடைபெறவுள்ள பிரச்சாரக் கூட்டத்திலும் கலந்து கொள்ளவுள்ளார். இந்நிலையில் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மக்களை குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் அழைத்து வருவதற்காக, குறித்த பேருந்துகள் யாழ்.குடாநாட்டுக்கு...
  மஹிந்தவின் பரப்புரைக்கு கருப்பொருள்- சந்திரிக்காவின் “மிஸ்டர் பிரபாகரன்” முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா யாழ்ப்பாணத்தில் வைத்து விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை விளிக்கும் போது “மிஸ்டர் பிரபாகரன்” என்று கூறியமை தற்போது மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரையில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. கண்டியில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச,முன்னொருபோதும் சந்திரிக்கா, மிஸ்டர் பிரபாகரன் என்ற சொல்லை உச்சரித்ததில்லை. தம்மைக்கூட அவர் மஹிந்த என்றே கூறுவார் என்றும்...