கனடாவின் பிரம்டனில் வீதியொன்றில் வன்முறையில் ஈடுபட்ட நான்கு பேரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
கடந்த புதன்கிழமை பிரம்டனில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஈகள்ரிட்ஜ் மற்றும் டோர்பிராம் வீதிகளுக்கு அருகாமையில் வாகமொன்றில் சென்ற நபரை மற்றுமொரு வாகனத்தில் சென்றவர்கள் தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் நான்கு இளைஞர்களுக்கு தொடர்பு உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.
மோதலில் ஈடுபட்ட 28 வயதான ஆகாஸ்டீப் சிங் மற்றும் 23 வயதான ராமன்பிரீட் மாசியா ஆகியோரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
ஏனைய இருவரும் இதுவரையில்...
பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் 6-வது மாதத்தை நெருங்கியுள்ளது.
இதில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை மீட்டு கொண்டு வரக்கோரி இஸ்ரேலில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக போராட்டம்
இந்நிலையில் இஸ்ரேலில் நேற்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக பெரும் போராட்டம் நடந்தது.இந்நிலையில் இஸ்ரேலில் நேற்று...
கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் பெயரை பயன்படுத்தி நிதி மோசடி இடம்பெற்றுள்ளது.
செயற்கை நுண்ணறிவின் டீப் பேக் தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் இந்த மோசடியில் சிக்சி 12000 டொலர்களை இழந்துள்ளார்.கிறிப்டோ கரன்ஸி முதலீட்டு திட்டமொன்றில் முதலீடு செய்யுமாறு பிரதமர் கோருவதாக போலி காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த காணொளியை பார்வையிட்ட குறித்த நபர், பிரதமரினால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் முதலீட்டுத் திட்டம் என கருதியுள்ளார்.
இதனால் தாம்...
பாகிஸ்தானில் செலவினங்களைக் குறைக்கும் நோக்கத்துடன் தேவையற்ற செலவுகளை நிறுத்துவது என அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
விலைவாசி உயர்வு, பொருளாதார மந்தநிலை ஆகியவற்றால் அண்டை நாடான பாகிஸ்தான் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 8-ம் திகதி நடந்த பொது தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி இல்லாத சூழலில் கூட்டணி ஆட்சி அமைந்தது. இதன்படி, பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்று கொண்டார்.
அவரது தலைமையிலான மத்திய...
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ராணுவ வெடிமருந்து கிடங்கில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
இதில் அங்கிருந்த வெடிமருந்துகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதனால் கரும்புகை பல அடி உயரத்துக்கு எழும்பியது. உடனே தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர்.
ஆனால் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் உடனே அணைக்க முடியவில்லை. இந்த விபத்தில் உயிர்ச்சேதமோ, காயங்களோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலாவதியான வெடிமருந்துகளை சேமித்து வைக்கப் பயன்படுத்தப்பட்ட பகுதியில் தீப்பிடித்தது என்றும் காலாவதியான...
கனடா - ரொறன்ரோ பெரும்பாக பகுதியானது பொருளாதார செயற்பாடுகள், கலாச்சார பல்வகைமை, புத்தாக்கம் போன்ற காரணங்களினால் அதிகளவில் கேள்வியுடைய தொழில்கள் பற்றிய விபரங்கள் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதிக கேள்வியுடைய தொழில்கள்
ரொறன்ரோவில் சராசரி சம்பளங்களும் தொழில் வாய்ப்புக்களும் அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டில் ரொறன்ரோ பகுதியில் அதிகளவு கேள்வி நிலவும் பத்து தொழிற்துறைகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சம்பளம்
2023 செப்டம்பரில், கனடாவின் வேலைச் சந்தை குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் சந்தித்தது,...
கனடாவின் ரொறொன்ரோவில் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண் ஒருவர் பல்வேறு கடவுச்சீட்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் விமானத்தில் இருந்து வந்த ஹினா சானி என்ற விமானப் பணிப்பெண்ணின் பயணப் பையில் பல்வேறு நபர்களின் கடவுச்சீட்டுகள் இருந்ததைக் கண்டு ரொறன்ரோவில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் ஏர்லைன்ஸின் செய்தித் தொடர்பாளர் அவர் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார்.
மேலும் அவர் பாகிஸ்தானில்...
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புப்புரஸ்ஸ பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த மூவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, கம்பளை விஷேட அதிரடிப்படை அதிகாரிகளால் நேற்று இரவு (30.03.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கண்டி - கலஹா பகுதியில் திடீரென மேற்கொள்ளப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பு கீழ் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதன்போது, அனுமதி பத்திரம் இல்லாமல் வைத்திருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகள் முச்சக்கரவண்டி ஆகியவற்றை...
பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு விசேட மாதாந்த ஊக்கத்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி பிரதேச செயலாளர் ஒருவருக்கு 15,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சு
மேலும் உதவி பிரதேச செயலாளர், உதவி இயக்குனர் மற்றும் கணக்காளர் பதவிகளுக்கு தலா ரூ.10,000 மாதாந்த உதவித்தொகை வழங்கப்படும்.
இந்த ஊக்கத்தொகை மார்ச் முதல் டிசம்பர்...
வாகன விபத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் தாய் உயிரிழந்துள்ளதுடன் தந்தை மற்றும் இரு பிள்ளைகள் காயமடைந்துள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பில் (Colombo) இருந்து ஹம்பாந்தோட்டையில் (Hambantota) உள்ள வீட்டிற்குச்சென்று கொண்டிருந்த போது காரின் முன் இருக்கையில் இருந்த மனைவி தூங்கியதால், கார் வீதியின் எதிர்புறமாக சென்று வீதிக்கு அருகில் இருந்த மரத்தில் மோதியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில வீதியில் வசிக்கும் மாத்தறையில்...