கொட்டும் மலையிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வடமாகாணசபை உறுப்பினர் டாக்டர் சிவமோகன் THINAPPUYAL NEWS
  வவுனியாவில் இராணுவகெடுபிடி மத்தியிலும் மாவீரர்களுக்கு வட மாகாணசபை உறுப்பினர்  மயில்வாகனம் தியாகராசா அஞ்சலி
சார்க் மாநாட்டில் நரேந்திரமேடியை கண்ட மகிந்த பதட்டப்பட்டதாகவும் அங்கும் இங்கும் ஓடித் திரிந்ததாக நேபாள நாட்டின் செய்தித் தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது வழமையை விட பதட்டத்துடன் கானப்பட்டதாகவும் வழமையான மதிப்பு மரியாதை இம்முறை வழங்கப்படவி;ல்லை இலங்கை ஜனாதிபதிக்கு என அப் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது அத்துடன் அங்கு நடை பெற்ற நிகழ்வு தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது. நேபாள நாட்டின் தலைநகரான காட்மாண்டுவில் ‘சார்க்’ என்னும் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பு...
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 60 ஆவது பிறந்தநாள் விழா கனடாவில் வெகு விமரிசையாக இடம்பெற்றது. திரு. தொல் திருமாவளவன் அவர்கள் இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாட்டில் இருந்து வருகை தந்து பங்கேற்று இருந்தார். இந்நிகழ்வில் ஏராளமான அரசியல், வர்த்தகப் பிரமுகர்கள், கல்வியலாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இளையோர்களின் எழுச்சிப் பாடல்கள், நடனங்கள் என்பனவற்றுடன் சிறப்பாக நடந்தேறியது பிரபாகரனின் 60 ஆவது பிறந்தநாள் விழா.
இராணுவ அழுத்தங்களுக்கு மத்தியிலும், வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், இன்று முல்லைத்தீவில் குறித்த ஓரிடத்தில் மாலை 6 .04 மணியளவில் சுடரேற்றி மாவீரர்களை நினைவு கூர்ந்தார். ரவிகரனுடன் மாவீரர் குடும்ப அங்கத்தவர் ஒருவர் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இது பற்றி கருத்துத் தெரிவித்த ரவிகரன், மறவர்கள் சிந்திய ரத்தம் எங்கள் கடல் நீரில் கலந்தே இருக்கிறது. அந்த நீரைப் பருகுகிற மீன்களைத் தான் எம் மக்கள்...
தனது புல­னாய்வு பிரி­வினர் சிறந்­த­வர்கள் என மார்தட்டும் மஹிந்தவிற்கு பொது வேட்­பாளர் யார் என்­பதை கண்­டு­பி­டிக்க முடி­யாமல் போய்­விட்­டது. தனது போட்­டி­யா­ளரை தன்­னு­ட­னேயே வைத்­திருந்துள்ளார் என குறிப்­பிட்ட ராஜித சேனா­ரத்ன, அர­சாங்­கத்தின் மொத்த பற்­க­ளையும் ஒன்­றொன்­றாக கழற்றி எடுப்போம். மஹிந்­தவின் தூக்­கத்தை கெடுப்போம் எனவும் தெரிவித்தார். பொது எதி­ர­ணி­யினர் நேற்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் மாகாண மாவட்ட உறுப்­பி­னர்­களை சந்­தித்த போது அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், நாங்கள்...
  யுத்தத்தில் இதுவரை கொல்லப்பட்ட போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் தினப்புயல் ஊடகம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றது. 1996 ஆம் ஆண்டு கார்த்திகை 27 அன்று தமிழீழத் தலைவர் வே.பிரபாகரனால் முதன்முதலில் மாவீரர் தின உரை நிகழ்த்தப்பட்டது. யுத்த வெற்றியினைக் கொண்டாடுகின்ற இராணுவத்தினர் யாரோடு போரிட்டனர்? இராணுவத்தினர் யுத்த வெற்றியினைக் கொண்டாடுவது சரி என்றால், தமிழினம் மாவீரர்களின் தினத்தினை அனுஷ்டிப்பது சரி எனக் கருதப்படுகின்றது. இன்று சர்வதேச ரீதியாக தமிழீழ...
  நேற்றைய தினத்தில் இருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் அலுவலகத்தினை இராணுவத்தினர், புலனாய்வினர் முற்றுகையிட்டதாகவும், தேசியத் தலைவரினுடைய பிறந்ததினம் மற்றும் மாவீரர் தினத்தினை கொண்டாடும் நோக்கில் இவ்வலுவலகம் செயற்படவிருப்பதாக அறிந்த தகவலின் அடிப்படையில் இவ்வாறு இராணுவத்தினர் நடந்துகொண்டனர். அதுமட்டுமல்லாது யாழ்ப்பாணம் நேற்றையதினம் பதற்றமான நிலையில் காணப்பட்டதாகவும், வீதியால் செல்பவர்கள் பலர் வழிமறிக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டதாகவும், இது ஒரு மனிதாபிமானமற்ற நடவடிக்கை எனவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் கஜன் அவர்கள்...
தமிழீழத்துக்காக தம்முயிரை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து கனடிய பாராளுமன்றில் ராதிகா சிற்சபேசன் உரையாற்றியுள்ளார்.  
பொலிஸ் திணைக்களத்தில் பாரிய குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  சட்டம் ஒழுங்கு அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் பொலிஸ் திணைக்களத்தை கட்டுப்படுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனால் முழு பொலிஸ் திணைக்களமும் குழப்ப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அரசியல் தேவைகளைக் கருத்திற் கொண்டு பொலிஸ் திணைக்களத்தின் நிர்வாக நடவடிக்கைகளை முழுவதுமாக மாற்றியமைக்க இந்த உயர் அதிகாரி முயற்சிக்கின்றார். பொலிஸ் மா அதிபரினால் மேற்கொள்ளப்படும் இடமாற்றங்கள், விலை மனுக்கோரல்கள், பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய...