* அடுத்த கட்டம் என்பது எது..? முஸ்லிம் தலைமையும் முஸ்லிம் சமூகமும் !!! மறைந்த மாமனிதர் அஸ்ரப் அவர்களால் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் குறைநிறைகள் தேவைகள் அவர்களின் வாழ்வாதார பிரச்சினைகள் கல்வி போன்ற அனைத்து தேவைகளையும் கருத்தில் கொண்டு ஒரு யுத்தக்காலத்தில் நிழல்தரும் மரத்தை சின்னமாக்கி ஆரம்பிக்கப்பட்டது முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி !!ஆம் அது கிளைவிட்டு நிழல் தரும் வேலை மாமனிதர் அஸ்ரப் மரணித்து விட்டார் !!!! அதன் பிறகு என்ன நடந்தது ?!! மரம் நிழல் தரவில்லை கிளை...
  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளர், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் ஐக்கிய தேசிய கட்சியில் சற்று முன் இணைந்து கொண்டார். மைத்திரிபால சிரிசேன கலந்து கொள்ளும் கூட்டமொன்று சரிகொத்தாவில் நடைபெறுகிறது. அதன் போதே ஹுனைஸ் பாரூக் பா.உ வும் இணைந்து கொண்டுள்ளார். அமைச்சர் ரிஷாட் மூலம் அரசியலுக்கு அறிமுகமாகிய ஹுனைஸ் பாரூக் க்கும் அமைச்சருக்குமிடையில் அண்மைக்காலமாக முரண்பாடுகள் வெடித்தமை குறிப்பிடத்தக்கது. TPN NEWS
பொதுபல சேனா அமைப்பின் பகிரங்க ஆதரவை மைத்திரிபால சிரிசேனவுக்கு வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்க் மாநாட்டிற்காக நேபாளம் புறப்பட்டுச் செல்ல முன்னர் இது தொடர்பில் ஞானசார தேரரிடம் நேரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இது தொடர்பான கலந்துரையாடலுக்கு ஞானசார தேரர், சுற்றிலும் கறுப்புக் கண்ணாடிகள் பொருத்தப்பட்ட ஆடம்பர வாகனத்தில் அதிரடிப்படை பாதுகாப்புடன் அலரிமாளிகைக்கு வரவழைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி, அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர் டளஸ் அலஹப்பெரும, பாதுகாப்புச்...
கிட்டுவின் உயிர்த் தியாகத்தையொட்டி, 1993 ஆம் ஆண்டு ஜனவரி 18 முதல் 20-ம் தேதி வரை, மூன்று தினங்கள் யாழ்ப்பாணத்தில் துக்கம் அனுசரிக்கப்பட்டன.கிட்டு கப்பலில் வருவது மாத்தையாவால்தான் இந்திய உளவுப் பிரிவுக்குத் தெரியவந்தது என்ற சந்தேகம் பலருக்கு இருந்தது. எனவே யாழ்ப்பாணத்தில் அனுசரிக்கப்பட்ட அஞ்சலிக் கூட்டத்தில் மாத்தையா கலந்துகொள்ளவில்லை. இதுகுறித்து அடேல் பாலசிங்கம் எழுதிய நூலில், 1993 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு நாள், கொக்குவில் பகுதியில் உள்ள...
  "தாயக மண்ணுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் போராடி வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களை நினைவுகூருவதற்கு தமிழர்களுக்கு உரிமை உண்டு. இதனை எவராலும் தடுக்க முடியாது. அவ்வாறு தடுத்தால் அது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. "தமிழர் பிரச்சினையை உலக அரங்கிற்கு கொண்டுசென்றவர்கள் மாவீரர்கள். எனவே, எத்தடைவரினும் அத்தடையைத் தகர்த்தெறிந்து இந்தத் தியாகிகளை நாம் நவம்பர் 27ஆம் திகதி அமைதியான வழியில் நினைவுகூர்ந்து - விளக்கேற்றி...
அறுபதாவது அகவையில் பிரபாகரன்! பிறந்தநாள் கொண்டாடும் உலகத் தமிழர்கள். தமிழீழ விடுதலைப் புலிகளில் தேசியத் தலைவர் வே.பிரபாகரனுக்கு இன்று அறுபதாவது பிறந்ததினம். தலைவரின் பிறந்ததினத்தை புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழ் மக்கள் கேக் வெட்டி அமோகமாக கொண்டாடுகின்றனர். மேலும் தலைவரின் அறுபதாவது பிறந்தநாளுக்கான புதிய கவிதைகளையும், புதிய பாடல்களையும் உருவாக்கி வெளியிட்டுள்ளனர். TPN NEWS
மாவீரர் தினமா, அப்படியொரு நிகழ்வு இலங்கையில் நடத்தப்படுகின்றதா, மாவீரர் தினம் என ஒரு நிகழ்வு இலங்கையில் நடத்தப்படுவதில்லை. நடத்தப்படுவதற்கும் இடமில்லை. மீறி நடத்தினால் எவர் என பார்க்காமல் கைது செய்வோம். அதற்காக விசேட புலனாய்வு பிரிவினை களமிறக்கியிருக்கிறோம் என யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன கூறியுள்ளார்.   தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்களுடைய நினைவு தினம் நவம்பர் மாதம் 27ம் திகதி அ னுஸ்டிக்கப்படவுள்ள நிலையில், யாழ்.குடாநாட்டில் படையினரினதும், புலனாய்வாளர்களினதும் அதீ...
  தமிழினத்தின் விடுதலைக்காகப் போராடி வீர காவியமான போராளிகள் போற்றப்பட வேண்டியவர்கள். எல்லோருடைய மனதிலும் நீங்கா இடம்பிடித்திருக்கும் மாவீரர்களுக்கு நாம் மரியாதை செலுத்துவோம், இராணுவம் தடுத்தாலும் நாம் பூசிப்போம்.என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ள அவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் மரணித்த போராளிகளை நினைவுகூரும் தினமான மாவீரர் தினம் வரும் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது.இந்தத் தினத்தை தமிழர்கள் எவரும் அனுஷ்டிக்கக் கூடாது...
அரைநூற்றாண்டுமேலாக தமிழர்கள் மேல்  சிங்கள இனவாத அரசாங்கங்களும் அதன் கூலிப்படைகளும் எமது நிம்மதிகளை எப்பொழுதும் கெடுத்துக்கொண்டே இருக்கிறார்கள் கிளிநொச்சி, ஆனந்தபுரம் கிழக்கில் மரக்கன்றுகள் வழங்கச் சென்ற தமிழத் தேசியக் கூட்டமைப்பின் பா.உறுப்பினர் சி.சிறீதரனுக்கு இராணுவத்தினர் இடையூறு விளைவித்துள்ளனர். வடமாகாண சபையால் பயன்தரு மரக்கன்றுகளை இன்று வழங்குவதற்கு வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளையின் ஒழுங்குபடுத்தலின் கீழ் பா.உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் மாவட்ட கட்சி நிர்வாகிகள் சகிதம் அப்பகுதிக்குச் சென்றுள்ளனர். இதன்போது அங்கு வந்த இராணுவச் சிப்பாய்கள்...
கல்முனை மாநகர சபையில் ஆளும் கட்சியின் உறுப்பினருக்கும் எதிரணியின் உறுப்பினருக்கும் இடையில் இன்று கைகலப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்வத்தில் காயமடைந்தவர் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரான எம்.ஐ.எம் பிரதௌஸ் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினரான ஏ.எம்.ரியாஸ்க்கும் இடையிலேயே இந்த கைகலப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரான எம்.ஐ.எம் பிரதௌஸே காயமடைந்துள்ளார். ஸ்ரீ லங்கா முஸ்லிஸ் காங்கிரஸை கண்டித்து உரையாற்றியதையடுத்தே இவ்விருவருக்கும் இடையில் வாக்குவாதம்...