தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டே மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். குருணாகல் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில் அவர்இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கு மக்களை வாக்களிப்பில் பங்கேற்கச் செய்யாமல் தடுத்தே ஜனாதிபதி தேர்தல் வெற்றி கொள்ளப்பட்டது. தேர்தல் வெற்றியின் பின்னர் போரை முடிவுக்குக் கொண்டு வர அதிகாரம் தேவையெனக் கூறி படிப்படியாக...
  "இலங்கையில் ஜனநாயகத்தை ஏற்படுத்தாமல் கொடூர ஆட்சி நடத்தும் மஹிந்த ராஜபக்‌ஷவை ஜனவரி 8இல் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிப்போம்." - இவ்வாறு இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் சூளுரைத்தார் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் சார்பில் போட்டியிடும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன. "நான் ஜனாதிபதியானதும் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்து நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவேன்" என்றும் அவர் கூறினார். 'நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்போம்' என்ற கோஷத்துடன்...
கொழும்பில் இன்று நடைபெற்ற முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் முடிவுகளின்றிக் கலைந்து போயுள்ளது. கொழும்பு பம்பலப்பிட்டியில் நடைபெற்ற இந்த உயர்பீடக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரசின் மாகாண சபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். சுமார் இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த உயர்பீடக் கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்று இறுதி முடிவை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்னொரு தடவை மாகாண சபை...
பொலன்னறுவை மாவட்டம் பூராகவும் வைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கட்-அவுட்கள் முற்றாக சேதப்படுத்தி கழற்றியெறியப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று நண்பகல் பொலன்னறுவை சோமாவதிய விகாரைக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்த நிலையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரும், வேறு மாவட்டங்களிலிருந்து தருவிக்கப்பட்ட பொலிசாரும் பொலன்னறுவையில் இதுவரை நிலைகொண்டுள்ளனர். எனினும் இவர்களைக் கண்டு அஞ்சாமல் சுதந்திரக் கட்சியின் முன்னாள் ஆதரவாளர்கள் பகிரங்கமாக களமிறங்கி ஜனாதிபதியின் கட்-அவுட்களை அகற்றியுள்ளனர். இதுகுறித்து கேள்விப்பட்டவுடன்...
   எம் மண்ணின் விடுதலைக்காக பல ஆசா பாசங்களை மறந்து எம் மண் மீதான அளவு கடந்த பற்றால் போராடி விதையான புனிதர்களை நினைக்கக் கூட அனுமதி மறுக்கப் படுவதை யாரும் அனுமதிக்க முடியாது என பாரளுமன்றத்தை ஒரு கலக்கு கலக்கிய தழிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்டபாரளுமன்ற உறுப்பினர்  சிறிதரன்  இவரின் நெறிஆளுமை தேசியத் தலைவர் பிரபாகரனுக்குஒப்பானது என்று சிங்கள தேசம் கருதுகிறது மாவீரர் வாரம் என்பதால் மாவீரர்களின் தியாகம் பற்றி விளாசி...
முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவையும் சிறையில் அடைக்கக் கூடும் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அரசாங்கம் மாற்றுக் கொள்கையாளர்களை பழிவாங்க முயற்சிக்கின்றது. மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு முற்று முழுதாக அகற்றிக்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது மைத்திரிபாலவுடன் குரோத உணர்வுடன் செயற்படுகின்றனர்.எவ்வாறு மைத்திரிபாலவிற்கு எதிராக வழக்குத் தொடர்வது என யோசிக்கின்றார்கள். எவ்வாறு வெலிக்கடை  சிறைச்சாலைக்கு அனுப்பி வைப்பது என்பது பற்றி திட்டமிடுகின்றார்கள். சில வேளைகளில் நான் சிறையில் தூங்கிய அதே மேசையில் மைத்திரிபாலவும்...
நாளை திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி தரப்பில் பாரிய கட்சி மாறல்கள் இடம்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 2015ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தன் மூன்றாம் வாசிப்பின் வாக்கெடுப்புடன் இந்த கட்சி மாறல் இடம்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன்போது முக்கிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளும் கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்கு செல்வர் என்று செய்தித்தாள் ஒன்று கூறுகிறது. இந்த செய்தியை ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளர் கயந்த கருணாதிலக்கவை கோடிட்டு செய்தித்தாள் வெளியிட்டுள்ளது. இதேவேளை...
எதிர்வரும் பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, மகிந்த அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேன அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவராக இருப்பார் என்று நாமும் நாட்டின் ஜனாதிபதியும் நினைத்திருந்த போது, ஜனாதிபதி மகிந்தவின் அரசில் சுகாதார அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக எதிர்க்கட்சிகள் அறிவித்திருப்பது இந்த ஆண்டு நம் நாட்டு அரசியலில் நடந்த மிக உன்னதமான அதிர்ச்சிச் செய்தி எனலாம். எவருமே எதிர்பார்க்காத...
ரணில்விக்கிரமசிங்க  இந்த நாட்டை எப்படி விக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்பது நல்ல து அணைத்து வழங்கல்களையும் கொடுத்து தழிழ்தேசியகூட்டமைப்பை ரணில் உடைப்பார் அனைத்துலக நாடுகளினதும் பிரச்சினைகளில் ஒன்றுதான் அமெரிக்க நாட்டின் தலையீடாகும். முழு அரபு இராச்சியத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவேண்டும் என்பதே அமெரிக்காவின் தற்போதைய இலக்காகும். அதனொரு கட்டமாகவே அமெரிக்காவின் அண்மைக்கால செயற்பாடுகள் அமைகிறது எனலாம். தற்போது அதனது தேவை கருதி பிரச்சினையை இலங்கை பக்கம் திருப்பிவிட்டுள்ளது. அது எவ்வாறெனில் 10...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எதிர்வரும் ஓரிரு நாட்களுக்குள் மூன்றாக உடைந்து சிதறும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. தற்போதைய நிலையில் அமைச்சர் பஷீர் சேகுதாவூது தலைமையில் கட்சியின் ஒரு குழுவினர் அரசுடன் நேரடியாக ஐக்கியமாகும் முடிவில் உள்ளனர். இதன் மூலம் தங்களுக்கு சுயலாபங்களை அடைந்து கொள்ள முடியும் என்று இவர்கள் எதிர்பார்த்துள்ளனர். இன்னொரு குழுவினர் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கத் தலைப்பட்டுள்ளனர். பைசல் காசிம், அஸ்லம் மற்றும் ஹரீஸ் ஆகிய...