மஹிந்த ராஜபக்ஸ ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டுச் சென்றாலும் நான் கட்சியை விட்டுப் போகப் போவதில்லை என நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பங்கேற்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு கட்சியின் தலைமையகத்தில் இடம்பெறுகிறது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர்களாக பதவி வகித்த பலர் கடந்த காலங்களிலும்...
  எமது நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உயிரோடு இருக்கின்ற வரை அவருக்கு வாக்களிக்கவும் அவருக்கு விசுவாசமாக இருக்கவும் எமது சமூகம் கடமைப்பட்டுள்ளது என்று தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கட்சி தாவும் படலமும் ஆரம்பமாகியுள்ளது. அரசியல் தலைமைகள் என்ன செய்வதெனத் தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தேசிய காங்கிரஸின் தலைமை தீர்க்க...
பாரிய யுத்தத்தின் பின் வன்னிப் பிரதேசத்தில் ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட மக்கள், பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். மாற்றானிடன் கையேந்தாமல் வந்தோரை விருந்தோம்பல் செய்த தமிழினம் வன்னிப் பிரதேசத்தில் வாழ்ந்த வரலாறு மறக்கப்பட முடியாதது. இளம் பெண் பிள்ளைகள் கூட நடுநிசியில் பயமின்றி  றோட்டில் உலாவிய மண் எமது வன்னி மண். இன்று மாற்றான் இனம் பொலீஸ் படை, ராணுவப்படை, கடல்படை, அடையாளமே இல்லாத புலனாய்வுப் படை, அவர்களுடன் இயங்கும் தமிழர் ஒற்றர் படை என அனைத்தையும் இறக்கி...
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் கலந்துரையாடி குடாநாட்டு மீனவர்களது விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் யாழ். செயலகமான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயலகத்திற்கு இன்றைய தினம் வருகை தந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள யாழ். கடற்தொழிலாளர்களது உறவினர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அமைச்சர்...
இந்தியா அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் செல்ல தயாராகும் நிலையில், கோஹ்லியை அவுஸ்திரேலிய ஊடகங்களும், ரசிகர்களும் குறி வைக்க ஆரம்பித்து விட்டனர்.இந்திய அணி அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி டிசம்பர் 4ம் திகதி காப்பாவில் நடக்கிறது. காயம் காரணமாக அணித்தலைவர் டோனி முதல் போட்டியில் பங்கேற்கவில்லை. இதனால் முதல் போட்டியில் கோஹ்லி அணித்தலைவராக விளையாடவுள்ளார். அதே சமயம் கோஹ்லியை அவுஸ்திரேலிய ரசிகர்களும், ஊடங்களும் குறி வைக்க தயாராக...
  இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இங்கிலாந்து அணி டக்வேர்த் லூயிஸ் முறைப்படி 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 7 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரில் பங்கேற்கவுள்ளது. இதற்கு முன்னதாக இலங்கை ‘ஏ’ மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 2 பயிற்சிப் போட்டிகள் நடைபெறுகிறது. இதன் முதல் பயிற்சி போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற...

படுகொலை செய்யப்பட்ட தர்மரத்தினம் சிவராமின் நினைவுதினம் இன்று ஆகும். தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005ஆம் ஆண்டு இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். ‘தராக்கி’ மற்றும் ‘எஸ்.ஆர்’ ஆகிய புனைபெயர்களில் சிவராம் பல ஆக்கங்களை எழுதிவந்திருந்தார். ஆங்கில ஊடகத்துறை மூலமே சிவராம் தன்னை ஊடகவியலாளராக அறிமுகப்படுத்தினார். எனினும், பிற்காலத்தில் ஆங்கிலப் பத்திரிகைகளில் ஆக்கங்கள் எழுதுவதை சிவராம் நிறுத்திக்கொண்டார். இந்த நிலையில், 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி “நான் சரியென்று உறுதியாகக் கண்டதை எழுதுகின்றேன். அதற்காக...
  ஒருநாள் போட்டி கிரிக்கெட் வரிசையில் இந்திய அணி முதலிடம் வகிக்கிறது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை 5–0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா 117 புள்ளிகள் பெற்று உள்ளது. 2–வது இடத்தில் 116 புள்ளிகளுடன் அவுஸ்திரேலியா இருக்கிறது. அவுஸ்திரேலிய அணி நாளை நடக்கும் 5–வது ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. இந்த போட்டியில் அவுஸ்திரேலியா வென்றால் முதலிடத்தை பிடிக்கும். இந்தியா 2–வது இடத்துக்கு செல்லும். இல்லையேல் அவுஸ்திரேலியா தோற்றால் இந்தியா...
  அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா சம்பியனாவது கடினம் என நியூசிலாந்து அணி முன்னாள் தலைவர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டுக்கான உலக கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடர் அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது. தற்போது உலக கிண்ணத்தை வெல்ல போவது யார் என்று முன்னாள் வீரர்கள் பலர் ஆரூடம் சொல்லி வருகிறார்கள். உலக கிண்ண தொடருக்கு முன்பாக இந்திய அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. இந்த போட்டி...
  அவுஸ்திரேலிய அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்த முடியும் என்று இந்திய அணியின் பதில் தலைவர் விராட் கோஹ்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகளும் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் நான்காம் திகதி பிரிஸ்பேனில் ஆரம்பமாகவுள்ளது. விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதலாவது டெஸ்டில் மட்டும் இந்திய அணித்தலைவர் டோனி ஆடமாட்டார். அதற்கு பதிலாக விராட் கோஹ்லி அந்த டெஸ்டில்...