ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெளியானதை அடுத்து தற்போது தேர்தல் வன்முறைகள் நாடெங்கும் பரவத் தொடங்கியுள்ளன.
Thinappuyal News -0
ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெளியானதை அடுத்து தற்போது தேர்தல் வன்முறைகள் நாடெங்கும் பரவத் தொடங்கியுள்ளன.
இதன் முதலாவது வன்முறை களுத்துறை மக்கோன சந்தியில் பதிவாகியுள்ளது. இங்கு இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பேருவளை பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி முன்னாள் உறுப்பினர் படுகாயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் சமில ரணசிங்க என்பவரே காயமடைந்தவராவார். இது தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை.
இதேவேளை, நேற்று மாலை குருணாகல் மாவத்தகம...
எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.
Thinappuyal News -
எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.
ஸ்ரீகோத்தாவில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
தாம் பொதுவேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்த பின்னர் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்காக ஸ்ரீகோத்தா சென்றார்.
இதன் பின்னர் இரண்டு தலைவர்களும் மூடிய அறைக்குள் பல்வேறு விடயங்கள் தொடர்பில கலந்துரையாடிதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க, சந்தோசமான வெளிப்பாட்டை காட்டியதாக கட்சி தரப்புக்கள் தெரிவித்தன.
LTTE உடனான யுத்தத்தை கோதபாயவும் மகிந்தாவும் ;குளிர்சாதன அறைகளில் இருந்து கட்டளை பிறப்பித்தவர்கள் நான் வன்னியில் மழையிலும் வெய்யிலும் நின்று போராடினேன். -சரத்பொன்சேகா,
Thinappuyal News -
கடந்த முப்பது வருடமாக நடந்து முடிந்த தமிழீழ நாடகத்தின்
திரைமறைவு இயக்குனர்கள் யார் என்பது கே.பி யின் சுய வெளிப்படுத்துகையால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சுய வெளிப்படுத்துகையானது டீ.பி.எஸ். ஜெயராயா என்ற ஏகாதிபத்திய ஏஜண்டும் படு பிற்போக்குவாதியுமான ஊடாகவிலாளர் கே.பியைச் செவ்விகண்டபாணியில் மிக நுணுக்கமாகத் தயாரிக்கப்பட்டு பத்திரிகைளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த டி.பி.எஸ்.ஜெயராஜா யுத்த காலங்களில் இலங்கையின் உயர் இராணுவ அதிகாரிகளோடு உறவு வைக்கவும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்புரட்சித் தயாரிப்பு ஊடகமான...
தமிழ்த் திரையுலகத்தில் பரபரப்பாக பேசப்பட்டுவரும் இரண்டு விஷயங்கள் ரஜினியின் அரசியல் பேச்சும், த்ரிஷாவின் திருமண பேச்சும் தான். வருடத்திற்கு ஒருமுறை பூதாகாரமாக கிளம்பி புஸ்பானமாக மாறிவிடும் இந்த விஷயங்கள் இரண்டுமே பரபரப்புக்கு குறைவில்லாதவை.
ஏதாவது பார்ட்டி ஏற்பாடு செய்து த்ரிஷா ஃபோட்டோ எடுத்து போட்டு ட்விட்டரில் இயங்கும் மற்ற நட்சத்திரங்களை எரிச்சலடையச் செய்வது வழக்கம் தான். ஆனால் இம்முறை த்ரிஷாவின் டீமில் இதுவரையிலும் கண்டிராத தயாரிப்பாளர் வருண் மணியன் த்ரிஷாவை...
சென்னை: ரமேஷ் ரங்கசாமி இயக்கும் படம் ‘பொங்கி எழு மனோகரா'. இர்பான், அர்ச்சனா, அருந்ததி நாயர் நடிக்கின்றனர். எஸ்.ஏ.பரந்தாமன் தயாரிக்கிறார். இப்படம்பற்றி இயக்குனர் கூறியது: பொங்கி எழு மனோகரா என்பது பிரபலமான வசனம். அந்த வசனம் என் வாழ்க்கையில் ஒரு பாடமாக அமைந்தது. நான் கஷ்டப்பட்டபோது உடன்பிறந்தவரிடம் உதவி கேட்டேன். செய்ய மறுத்தனர். அப்போது என் மனதில் பொங்கி எழு மனோகரா என்ற வசனம்தான் தோன்றியது. அப்போதுதான் இந்த...
சென்னை: தனக்கு ரகசிய காதலன் இருப்பதாக கூறினார் பிரியாமணி.தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தாத பிரியாமணி பிறமொழியில் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார். அவர் கூறியதாவது:படங்களில் நடிப்பதுடன், ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்கிறேன். மேலும் இணைய தள பக்கங்களிலும் என் சம்பந்தப்பட்ட பணிகள் குறித்து இடைவிடாமல் மெசேஜ் போடுகிறேன். அப்போது உடன் பணியாற்றும் நடிகர்கள் போன்றவர்களுடன் ஜோடியாக இருப்பதுபோன்ற படங்களும் வெளியிடுகிறேன்.அதைப் பார்த்ததும் குறிப்பிட்ட நடிகருடனோ அல்லது நபருடனோ நான்...
சென்னை: கார் ரேஸ் வீரர் நரேன் கார்த்திகேயனுக்கு சிபாரிசு செய்தார் அஜீத்.கார் ரேஸில் நண்பர்கள் ஆனவர்கள் அஜீத், கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன். ‘கோலிசோடா' படத்தை இயக்கிய விஜய் மில்டன் அடுத்து ‘10 எண்ணறதுக்குள்ள' படத்தை இயக்கி வருகிறார். விக்ரம்-சமந்தா ஜோடி. இப்படத்தில் கார் ரேஸ் காட்சி இடம்பெறுகிறது. வேகமாக வரும் கார் திடீரென்று குட்டி கரணம் அடிப்பதுபோல் திரில்லான காட்சி படமாக்க திட்டமிடப்பட்டது. இதை பாதுகாப்பாக...
பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெரும் சவாலாக அமைவார் என்று சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் சிறந்த ஒரு போட்டியாளரைத் தெரிவு செய்திருப்பதாக அவர் கூறுகிறார்.
நேற்றிரவு பி.பி.சி. சந்தேசயவுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒரே குரலில் ஜனாதிபதியைத் தோற்கடிப்பதற்காக களமிறங்கியிருப்பதாகச் சொல்லும் அவர், முழுப் போராட்டத்துக்குச் செல்வதற்கு முன்னரேயே அது முடிந்துவிட்டது.
“பாரியதொரு வீழ்ச்சி,...
சென்னை: துபாயில் ஐஸ்வர்யா ராயோடு சேர்ந்து நடனமாடினார் பூர்ணா.இதுபற்றி அவர் கூறியது:சமீபத்தில் துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று நடனம் ஆட சென்றேன். அங்குபோன பிறகுதான் நான் பங்கேற்கும் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ஐஸ்வர்யா ராய் கலந்துகொள்ளப்போகிறார் என்பது தெரிந்தது. அவர் வந்ததும் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். இப்படி ஒரு சந்திப்பு நடக்கும் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை. அவர் நடித்த படங்களின் பாடல்களை தொகுத்து ஆடினேன். என்னை பாராட்டிய அவர்...
மஹிந்தவின் ஆட்சி கவிழ்க்கப்படுவது உறுதி – இராணுவ ஆட்சியை நிறுவுவதற்கு கோத்தபாய தயாராகிறார்.
Thinappuyal -
இராணுவ ஆட்சியைத் தவிர மஹிந்தவால் ஒரு துரும்பும் நகர்த்தமுடியாது என்று இன்று பரவலாக பேசப்பட்டுவருகின்றது. சிறீலங்கா சுதந்திரக் கட்சி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களை வைத்து இராணுவப் புரட்சியை ஏற்படுத்த திட்டமிட்டிருப்பதாக புலனாய்வு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. செய் அல்லது செத்துமடி என்று தலைவர் பிரபாகரன் கூறியதைப் போன்று இன்று மஹிந்த ராஜபக்ஷவின் நிலைமையும் அவ்வாறே மாறிவிட்டது. குடும்ப அரசியல் செய்ததன் மூலமும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை...