எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொது வேட்பாளர் தொடர்பான தீர்மானனங்களை எடுக்கும் அதிகாரம் ரணில் விக்ரமசிங்க வழங்கும் தீர்மானம் ஒன்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் முன் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து இதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. பொது வேட்பாளர் வேறு கட்சியில் இருந்து நிறுத்தப்பட்டால் அவருக்கு முழுமையான ஆதரவு வழங்கப்பட வேண்டும்...
 மகிந்த குடும்பத்திற்கு எதிராகமுக்கிய அமைச்சர்களின் பாதுகாப்பு வாபஸ்- மைத்திரிபால விசேட அறிவிப்பு: ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு மகிந்த குடும்பத்திற்கு எதிராக அரச அமைச்சர்களின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் வாபஸ் பெற இருப்பதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மைதிரிபால சிறிசேன, ராஜித சேனாரட்ன, மேர்வின் சில்வா ஆகியோரின் பாதுகாப்பு உஸ்தியோகஸ்தர்களே இவ்வாறு வாபஸ் பெற உள்ளதாக அந்த இனையத்தளம் குறிப்பிட்டுள்ளது. அதேவேளை ஜனாதிபதி மகிந்தவிற்கும் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிற்குமிடையில் தற்பொழுது அலரி மாளிகையில் கலந்துரையாடல்...
காட்டிக் கொடுப்புக்கள் எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். காட்டிக் கொடுப்பு என்பது இந்த நாட்டில் எல்லாக் காலங்களிலும் இடம்பெற்றதொன்றாகும். அது வரலாற்று ரீதியாக மறைந்து போகும் காரணியல்ல. ராஜசிங்க மன்னரின் ஆட்சிக் காலத்தில் எஹலபொல நிலமே துரோகம் இழைத்திருந்தார். பின்னர் அந்த எஹலபொல சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிட்டது. எதிர்க்கட்சித் தலைவர் தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பாதுகாத்துக்கொள்ள பலிக் கடா ஒன்றை தேடுகின்றார். கடந்த 2010ம்...
எதிரணி பொது வேட்பாளராக போட்டியிடப் போவதாக சர்ச்சைக்குரிய வகையில் கூறப்பட்டு வருகின்ற சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நேற்று மாலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் பொது வேட்பாளர் விவகாரம் குறித்தும் சந்திரிகா பண்டாரநாயக்கவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவும் கலந்துரையாடியுள்ளதாக எதிரணி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளை இன்றைய தினம் ஆளும் கட்சியின் சில உறுப்பினர்களுடன்...
வடக்கில் யாழ்தேவி புகையிரதத்தினை மகிந்த கொண்டு வந்தார் என்பதற்காக வட,கிழக்கு மக்கள் மகிந்த அரசாங்கம் தான் வேண்டும் என்று விரும்பவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் போக்குவரத்து தொடர்பாக நேற்று நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், யாழ்தேவி புகையிரதம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அங்குள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக அரசியல் செல்வாக்கு பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் அறியக்கிடைக்கின்றது. இதனை நிறுத்தி தகுதியானவர்களுக்கு உரிய தகைமைகளின்...
ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் இன்று நாடாளுமன்ற அமர்வின் போது கட்சி தாவி, அரசாங்கத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் வசந்த சேனநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டதையடுத்து, இன்று முக்கியமான கட்சி தாவல் நடவடிக்கைக்கு ஆளுங்கட்சியினர் தயாராகி வருகின்றனர். இதனை அறிந்து கொண்ட அரசாங்கத் தரப்பு உயர்மட்டத்தினர் , கட்சி தாவும் முடிவில் உள்ள ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களுடன் நேற்றிரவு பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்....
ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவுக்கு குடியுரிமை வழங்கும் அதிரடி முடிவொன்றை ஜனாதிபதி இன்று அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நேற்றிரவு இது தொடர்பான நீண்டதொரு கலந்துரையாடல் அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது. இதன்போது சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்கும் உரிமையுடன் குடியுரிமை மீண்டும் வழங்கப்படும் பட்சத்தில் எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்த ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். பதவி மோகம் கொண்ட சரத் பொன்சேகா மீண்டும் வாக்குரிமை பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் , ஜனாதிபதித்...
அரசாங்க, எதிர்க்கட்சி தரப்புக்களின் தகவல்களின்படி அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவே எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி பொதுவேட்பாளராக தெரிவுசெய்யப்படவுள்ளார் என்று இலங்கையின் செய்தித்தாள் ஒன்று கூறுகிறது. இதற்கான முடிவு இன்று வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு இன்று மாலை கூடி இந்த விடயத்தில் முக்கிய முடிவை அறிவிக்கவுள்ளது. இந்தநிலையில் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சிக்கு மாறுவார் என்ற தகவல் பெரும்பாலும் உறுதியாகியுள்ளதாக எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகின்றனர். அவருக்கு ஆதரவாக ஆளும் கட்சியில் உள்ள சுமார் 15 நாடாளுமன்ற...
“பணம் என்ன மரத்திலா காய்க்குது?” – இந்த கேள்வி உங்கள் காதில் விழாத நாளே இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. யாராவது இனி இப்படி உங்களை கேட்டால், தயங்காமல் பதில் சொல்லுங்கள். “பணம் மரத்தில்தான் காய்க்கிறது!” என்னென்னவோ தொழில் நடத்தி நஷ்டமடைந்தவர்கள் ஆயிரம் பேரை உங்களுக்கு தெரியலாம். நிச்சய லாபம் கொடுக்கக்கூடிய ஒரு தொழில் இருக்கிறது. கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மரம் வளர்ப்பு! மரம் வளர்ப்பு ஒரு தொழிலா? மரம் வளர்த்தால் மாங்காய் கிடைக்கும், தேங்காய் கிடைக்கும்....
வாழ்வாதார முயற்சிகள் செய்ய வலுவின்றி வாடும் ஒவ்வொரு கார்த்திகை மலரும் இங்கு மலரும். ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து என்று தம் பிள்ளைகளை தியாகித்து மாவீரர்களாக்கிய எம் மூத்த தலைமுறையினரையும் அரவணைப்போம் என்று வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார். நாளாந்த வாழ்வை சவாலோடு எதிர்நோக்கும் தாயக மக்களுக்கான வாழ்வாதார உதவித்திட்ட நிகழ்வொன்றிலேயே ரவிகரன் மேற்படி தெரிவித்துள்ளார். “வாழ்வோம்-வளம் பெறுவோம்” எனும் செயற்திட்ட அடையாளத்துடன் முல்லைத்தீவில் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்களின்...