இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் செய்யக்கூடாத குற்றம் எல்லாம் செய்து விட்டு இராஜதந்திர ரீதி யில் செயற்படாமல், உலகநாடுக ளுடன் ஒத்துழைக்காமல் எதேட்சதிகாரப் போக்கில் செயற்பட்டுவருகின்றது. இலங்கைக்கு எதிரான போர்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நாடுகள் எச்சரிக்கை விடுத்தும் அது தொடர்பாக கண்டு கொள்ளாது எந்த நடவடிக்கையும் எடுக்காது சர்வதேச நாடுகளின் மேல் பழிகளை சுமத்திக்கொண்டு பொறுப்பற்ற விதத்தில் செயற்படுகின்றது. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமை பதவியை பெற்றுக்கொண்ட...
ஊவா மாகாண முதலமைச்சர் சசிந்திர ராஜபக்சவின் பாதுகாப்பு வாகனம் விபத்துக்கு உள்ளானதில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்பு வழங்கும் நோக்கில் பயணித்த டிபென்டர் ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானது. புத்தளம் மஹாகொடயாய பிரதேசத்தில் அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. முதலமைச்சரின் வாகனத்திற்கு முன்னால் சென்ற வாகனமே விபத்துக்குள்ளானது. இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மூன்று பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். மேலும் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  
உக்ரைன் நாட்டில் கடுங்குளிர் நிலவுவதால் அந்நாட்டு மக்கள் நிலத்தடியில் வீடு அமைத்து குடித்தனம் நடத்த தொடங்கியுள்ளனர். உக்ரைனை கைப்பற்ற ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, அந்நாட்டில் நிலவும் கடுமையான குளிரைத்தான் அங்குள்ள மக்களால் தாக்குப் பிடிக்க முடியாமல் உள்ளனர். இதனால் இங்கு வாழும் பலரது உடலின் வெப்பநிலை கணிசமாக குறைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவிற்கு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கடுங்குளிரில் சிக்கி கடந்த ஆண்டுகளில்...
செக் குடியரசில் வெல்வட் புரட்சியின் 25 வருடப் பூர்த்தியை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்வில் அந்நாட்டின் ஜனாதிபதி மீது முட்டை வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு ஆதரவாக செக்குடியரசின் ஜனாதிபதி மிலோஸ் ஸேமன் செயற்படுவதன் காரணமாக அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. செக் குடியரசில் கம்பியூனிஸ்ட் ஆட்சி நிறைவுக்கு வந்தததை நினைவு கூறும் விதமாகவே இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜேர்மன் ஜனாதிபதி மீதும் முட்டை வீச்சு இடம்பெற்றுள்ளதாக தெரவிக்கப்படுகிறது.
இந்திய இராணுவத்தினர் இலங்கையில் ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டு வெளியேறிய பின்னர், 1988ம் ஆண்டு அமைதிப்படை இலங்கைக்கு வருகைதந்தமையை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ அவர்கள் எதிர்த்திருந்தார். அதனோடு மக்கள் செல்வாக்கினைப் பெற்று ஜனாதிபதியானார். இதன்பின்னர் விடுதலைப்புலிகளுடன் சமரசப்பேச்சுக்களில் ஈடுபட்டுக் கொண்டார். அதுமட்டுமல்லாது அமைதிப் படையை திருப்பிப்பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். புலிகளுடன் மீண்டும் பேச்சுக்கள் ஆரம்பமாகின. அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேறிக்கொண்டது. புலிகள் முக்கியமாக இரண்டு விடயங்களில் தீவிரமாக இருந்தனர். ஒன்று முறையாக தேர்ந்தெடுக்கப்படாத அரசை அகற்றிவிட்டு,...
அமெரிக்காவின் அன்பு முகம் நோர்வே. அமெரிக்காவின் கோர முகம் இஸ்ரேல்’ இது தமிழீழத் தேசியத் தலைவரின் கூற்று. இந்த வசனத்தின் தீர்க்க தரிசனத்தையும் யதார்த்தத்தையும் தமிழ் மக்கள் தற்போது உணர்ந்துகொண்டிருக்கின்றனர். தமிழீழத் தேசியத் தலைவர் எது செய்தாலும், எதைச் சொன்னாலும் அதன் பின்னால் மிகப் பெரும் அர்த்தம் இருக்கும். அந்த அர்த்தத்தை எல்லோராலும் இலகுவில் புரிந்துகொள்ள முடியாது. காலம் சென்ற பின்னரே சிலவற்றைப் புரிந்துகொள்ள முடியும். தலைவர் கூறியது போல...
இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையில் இந்தியாவில் நடந்துமுடிந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி ஒரு வெற்றி கூட பெறாமல் ஐந்துக்கு பூஜ்ஜியம் என்ற எண்ணிக்கையில் தோல்வியைத் தழுவியதையடுத்து, இந்த முடிவுக்கான பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாக இலங்கை கிரிக்கெட் அணிக்கான தேர்வுக் குழுவின் தலைவரும் விளையாட்டுத்துறை துணை அமைச்சருமான ஜெயசூர்ய தெரிவித்துள்ளார். சனத் ஜெயசூர்ய "அமைச்சர் எங்களை நியமித்திருப்பது சுயாதீனமாக முடிவுகளை எடுப்பதற்காகத்தான். இந்த மாதிரியான போட்டிகளில் கலந்துகொள்ளும்போது வெற்றியும் வரலாம் தோல்வியும் வரலாம்....
முன்னாள் போராளி கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷவிடம் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் முன்னாள் போராளியும் இரு பிள்ளைகளின் தந்தையுமான கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக பாதுகாப்பு செயலாளருடன் அமைச்சர் ரிஷாத் நேற்று தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு கலந்துரையாடியுள்ளார். இதனையடுத்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், மன்னார் -...
எதிர்க்கட்சிகளின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய ஆகிய இரண்டு போரையும் தேர்தலில் நிறுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது. எதிர்வரும் 19 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் இது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவுள்ளது. சந்திரிக்கா குமாரதுங்கவின் வேட்புமனுவை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் ஆணையாளர் நிராகரித்தால் அதற்கு மாற்று ஏற்பாடாகவே இந்த...
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அவுஸ்திரேலியா சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது. இரு அணிகள் மோதிய இரண்டாவது போட்டி பெர்த்தில் நேற்று நடந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணிக்கு ஆரம்ப வீரர்கள் திறமையை வெளிப்படுத்த தவறியமையால், அவ்வணி 41.4 ஓவரில் 154 ஓட்டங்களுக்கு...