ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்களை எடுத்த ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடிப்பது கடினம் என முன்னாள் இந்திய அணித்தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். ரோஹித் சர்மா ஒருநாள் போட்டியில் 264 ஓட்டங்கள் குவித்தது மிகவும் அபாரமான ஒன்றாகும். கற்பனையில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உண்மையிலேயே இது நம்ப முடியாத ஒன்றாகும். ரோஹித் சர்மாவின் 264 ஓட்டங்கள் சாதனையை முறியடிப்பது கடினமானது. எந்த நேரத்திலும் இந்த சாதனையை முறியடிக்க இயலாது என்று கங்குலி...
இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மேத்யூஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சாதனையை படைத்துள்ளார். இந்தாண்டில் ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை மேத்யூஸ் பெற்றுள்ளார். 25 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 8 அரைச்சதத்துடன் 1,062 ஓட்டங்கள் குவித்துள்ளார். இந்த ஆட்டத்தில் 139 ஓட்டங்களை விளாசிய மேத்யூஸ், இந்திய மண்ணில் அதிக ஓட்டங்கள் எடுத்த வெளிநாட்டு அணித்தலைவர் வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளார். முதல் இரு இடங்களில் இங்கிலாந்தின் ஸ்டிராஸ்-158 ஓட்டங்கள்...
Florida Institute for Human and Machine Cognition(IHMC) எனும் நிறுவனம் மனிதர்களைப் போன்று செயற்படக்கூடிய Atlas ரோபோக்களை கடந்த வருடம் உருவாக்கியிருந்தது. எனினும் தற்போது முற்றிலும் மனிதர்களைப் போன்றே நடக்கும் வகையில் புதிய மென்பொருள் ஒன்றினை இந்த ரோபோக்களுக்கு அப்டேட் செய்துள்ளனர். இவை 6 அடி உயரமானவை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை புதிய அம்சங்களை உட்புகுதத்தி இவ்வகையான ரோபோக்களை எதிர்வரும் 2015ம் ஆண்டு ஜுன் 5ம் திகதி அல்லது 6ம் திகதி...
வீடியோக்களை தரவேற்றம் செய்து பகிரும் வசதியைத் தருவதில் முன்னணியில் திகழும் யூடியூப் ஆனது பயனர்களுக்காக YouTube Music Key எனும் சேவையினை அறிமுகம் செய்திருந்தமை தெரிந்ததே. இந்நிலையில் இதில் விளம்பரங்கள் இடம்பெறுவது வழமையாகும். எனினும் பயனர்களுக்கு இது இடையூறாக இருப்பதனால் விளம்பரங்களை தவிர்த்து இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளும் வசதியினையும் யூடியூப் அறிமுகம் செய்துள்ளது. இதற்காக மாதாந்தம் 8 டொலர்கள் கட்டணமாக செலுத்தி உலகின் எந்த மூலையிலிருந்தும் விளம்பரங்கள் அற்ற YouTube Music Key...
கூகுள் நிறுவனம் தனது Android இயங்குதளத்தின் புதிய பதிப்பான Android 5.0 Lollipop இனை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது. இவ் இயங்குதளத்தில் பல வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில் Silent Mode வசதி நீக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இயங்குதளத்தில் செயல்படும் கைப்பேசிகளை நேரடியாக Silent Mode இல் வைத்திருக்க முடியாது. இதற்கு மாற்றீடாக கைப்பேசியின் ஒலியின் குறைத்து 1 எனும் அளவிற்கு கொண்டு வந்த பின்னர் மேலும் ஒரு தடவை பொத்தானை அழுத்தும்போது கைப்பேசி...
Ginger என்பது ஆங்கில எழுத்துக்களை தட்டச்சு செய்யும் போது ஏற்படும் இலக்கண வழுக்களை சரிபார்க்க உதவும் பிரபலமான அப்பிளிக்கேஷன் ஆகும். இது இணைய உலாவிகளிலே தட்டச்சு செய்வதற்கு பயன்பட்டுவந்த நிலையில் தற்போது முதன் முறையாக அப்பிளின் iOS சாதனங்களுக்காக கீபோர்ட் அப்பிளிக்கேஷனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்தக்கூடிய இவ் அப்பிளிக்கேஷன் iOS 8 இயங்குதளத்தில் மட்டுமே செயற்படக்கூடியதாக காணப்படுகின்றது. இதன் மூலும் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் என்பபவற்றினை அனுப்பும்போது ஏற்படும் இலக்கண...
அமெரிக்க உதவிப் பணியாளர் அப்துல் ரஹ்மான் கசீக், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டமைக்கு ஜனாதிபதி பரக் ஒபாமா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். கசீக் கொலை செய்யப்பட்டமை முற்றாக பேய்யின் செயற்பாடு எனவும் ஒபாமா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். கசீக் உடையது என தெரிவிக்கப்படும் தூண்டிக்கப்பட்ட தலையொன்றுடன் ஆயுததாரி ஒருவர் தோன்றும் காட்சி நேற்று வெளியிடப்பட்டுள்ளது. துண்டிக்கப்பட்ட தலை கசீக் உடையது என்பதை அமெரிக்க வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. இதேவேளை சிரிய மக்களின் மீதுள்ள அன்பினால் தனது மகன்...
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான நகுலேஸ்வரன் தனது தனிப்பட்ட குடும்ப நலன்களை விடுத்து கிராம மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும், ஊர் வளர்ச்சிக்காகவும் பலதரப்பட்ட பணிகளை செய்திருக்கிறார். பொதுப்பணிகளில் கூடியளவு அக்கறை காட்டியிருக்கிறார். சமுக பிரச்சினைகளுக்கு எதிராக அரச அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களுடன் தர்க்கத்திலும் ஈடுபட்டிருக்கிறார். குறிப்பாக காணி அபகரிப்புகள், வளப்பங்கீடுகளில் பாரபட்சம், குளறுபடி போன்ற விடையங்களுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார். மாவட்ட - பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களில் கூட,...
வழங்கப்படும் வாய்ப்புகளை பயனுறுதியாக்கி மெல்ல மெல்ல நீங்கள் மீண்டு வர வேண்டும். உங்கள் முயற்சிகள் வெற்றி பெறவேண்டும். அவ்வெற்றியே இனிவரும் எமது வாழ்வாதார உதவிகளுக்கான உந்துசக்தி! என முல்லை மாவட்ட வடமாகாணசபை உறுப்பினர்கள் பயனாளிகளை கேட்டுக்கொண்டுள்ளனர். 26 குடும்பங்களுக்கு தலா 25 ஆயிரம் வீதமான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்விலேயே மேற்படி கருத்துக்களை வடமாகாணசபை உறுப்பினர்கள் ரவிகரன் மற்றும் மேரிகமலா குணசீலன் ஆகியோர் தெரிவித்திருந்தனர். இது தொடர்பில் மேலும் அறியவருகையில், 2014ம்...
முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த மூன்று குளங்களுக்கு நன்னீர் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வு நேற்றயதினம் இடம்பெற்றது.16.11.2014ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் வவுனிக்குளம் சென்ற வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிபம் மற்றும் கிராமியஅபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடக்கு மாகாண சபையின்முல்லைத்திவு மாவட்ட உறுப்பினர் திரு ரவிகரன் அவர்களின் பிரதிநிதி, மற்றும் பிரதேச சபை உறுப்பினர், நீரியல் வள மாவட்ட அலுவலர் சலீபன் ஆகியோர் கலந்து கொண்டு அங்குள்ள நன்னீர் மீன்பிடியாளர் சங்கத்தினரையும் அங்குள்ள கிராம அபிவிருத்தி சங்கத்தினரையும் சந்தித்து உரையாடியதுடன் அக்குளத்தில் மீன்குஞ்சுகளையும் விட்டனர் தொடர்ந்து மதியம் சுமார் 2:00 மணியளவில் முத்தையன்கட்டு குளத்துக்கு விஜயம் செய்தவேலை அங்குமுல்லைத்திவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் மேரி கமலா குணசீலன்  அவர்களும் இணைந்து அங்குள்ள மக்களையும் சந்தித்து பின்னர்அக்குலத்திலும் மீன்குஞ்சுகள் விடப்பட்டது, அதனை தொடர்ந்து மாலை 4:00 மணியளவில் மடவாளசிங்கம் குளத்து மீன்பிடியாலர்களை சந்தித்துஅவர்களுடன் உரையாடியதுடன் அக்குளத்துக்கும் மீன்குஞ்சுகள்  விடப்பட்டது, இந்நிகழ்வில் சுமார் 75000 மீன்குஞ்சுகள் மூன்று குளங்களிலும் முதற்கட்டமாக வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் மக்களுக்கு இரண்டு மாதகாலத்துக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிக்கமைவாக விடப்பட்டது, இதன் மூலம் சுமார் 250 நன்னீர் மீன்பிடிக் குடும்பங்கள் அவர்களது வாழ்வாதாரத்தைபெருக்கிக்கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.