கடந்த 10 வருடங்களில் புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்காத சாதனையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். இதன் காரணமாகவே இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்கின்றனர். இவ்வாறான நிலைமை முன்னெப்போதும் இடம்பெறவில்லை என்று ரணில் குறிப்பிட்டார். களுத்துறையில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதியாக பதவியில் இருந்து காலத்தில் புதிய தொழில்வாய்ப்புக்கள் எதுவுமே தொடங்கப்படவில்லை. புதிய தொழிற்சாலைகள்...
நோர்வே அரசு மீதும் தன் மீதும் தேவையற்ற குற்றச்சாட்டுக்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ முன்வைத்துள்ளதாக நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். நேற்று கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி, நோர்வேயின் முன்னாள் அரசு மீதும், சொல்ஹெய்ம் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். ஜனாதிபதியின் குற்றச்சாட்டுக்கள் குறித்த மறுப்பு அறிக்கையை நாளை திங்கட்கிழமை வெளியிடவுள்ளதாகவும் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை ஜனாதிபதி தன்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் ஏற்க முடியாதவை. அவர் பொய்...
சேகுவாரா கொலை செய்யப்பட்ட புகைப்படம் 47 வருடங்களின் பின் வெளியீடு உலகம் முழுவதும் புரட்சிகர சக்திகளுக்கு உந்துதலாகத் திகழும் சேகுவாரா கியூப இராணுவத்தால் கொலை செய்யப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கியூபாவில் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து புரட்சியில் ஈடுபட்ட சேகுவாரா ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டார். இந்நிலையில் கடந்த 1967ஆம் ஆண்டு கியூப இராணுவத்தால் சேகுவாரா சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்பிறகு, அவரது உடல் இரகசிய இடத்தில் புதைக்கப்பட்டது. அப்போது புகைப்பட கலைஞர் ஒருவரால்...
மேற்கத்திய நாடுகளின் அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு இளம் வயதில் ஏற்பட்ட விரும்பத்தகாத சம்பவங்களை வெளிப்படையாக கூறுவதற்கு தயங்காதவர்கள். அந்த வரிசையில் சேர்ந்து இருக்கிறார், கனடா நாட்டின் முன்னாள் பெண் துணை பிரதமர் ஷெய்லா காப்ஸ். தற்போது இவருக்கு 61 வயதாகிறது. அண்மையில் அவர் ஒரு பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையில், நான் அரசியலுக்குள் புதுமுகமாக நுழைந்தபோது என்னை கட்சியின் 2 தலைவர்கள் பலவந்தப்படுத்தி கற்பழித்து விட்டனர். இதில்...
  ஊர் வாசம். வசந்தனாடி மகிழும் கட்டுவன் ஊரின் நினைவுகளில் நனைந்த எமக்கு அவ்வூர் பற்றிய தகவல்களை அறிய சில அன்பர்களை சந்திக்க முனைந்தபோது வியத்தகு தகவல்கள் பல கிடைத்தன. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு கோயிலெடுத்து மகிழ்ந்த போது இங்கும் கோயில்கட்டினான் என்றும், 'குட்டுவர்' வந்திருந்ததால் 'குட்டுவனூர்' என பெயர் பெற்றதாகவும் பின்னர் 'கட்டுவனாய்' மருவியதாகவும் செவிவழிக்கதைகள் கூறுகின்றன. அதனை நம்பச்செய்யும் வகையில் இங்கு மிகப்பழைய கண்ணகை அம்மன் ஆலயமும் காணப்படுகின்றது. ஆனால் துறை சார் ஆய்வுகள் எதுவும்...
நூறுவருடங்களுக்கும் மேலாக தமிழரின் காணிகளாக இருந்துவந்த பல ஏக்கர் நிலப்பரப்பானது வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்களின் தலையீட்டில் மீள மக்களுக்கு கிடைக்கப்பெற்ற சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது. ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்குட்பட்ட மணவாளன்பட்ட முறிப்பு, கரிப்பட்ட முறிப்பு போன்ற கிராமங்களிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. வறுமைநிலையில், ஒட்டுசுட்டான் வாழ் தமிழ் மக்கள் தமது சொந்த காணிகளை துப்பரவு செய்யாத நிலையில், அவற்றை வன இலாகவினர் எல்லையிட்டு தம் எல்லைக்குள் கொண்டுவர முயன்ற நிலையே...
மன்னார் மாவட்ட வர்த்தகர் சங்கத்தினரை 15-11-2014 சனிக்கிழமை மாலை 2 மணியளவில் வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் தனது மன்னாரில் உள்ள உப அமைச்சு அலுவலகத்தில் இன்று சந்தித்தார். இவ் விசேட சந்திப்பின் போது பண்டிகைக் காலத்தில் தென்னிலங்கையில் இருந்து வருகின்ற வியாபாரிகளால் தொடர்ந்து மன்னார் மாவட்ட வர்த்தகர்கள் பெருமளவில் பண்டிகைக்கால வியாபார வேளைகளையும் இழந்து மிகவும் பாதிக்கப்படுகின்றமையை...
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான நகுலேஸ்வரன் தனது தனிப்பட்ட குடும்ப நலன்களை விடுத்து கிராம மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும், ஊர் வளர்ச்சிக்காகவும் பலதரப்பட்ட பணிகளை செய்திருக்கிறார். பொதுப்பணிகளில் கூடியளவு அக்கறை காட்டியிருக்கிறார். சமுக பிரச்சினைகளுக்கு எதிராக அரச அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களுடன் தர்க்கத்திலும் ஈடுபட்டிருக்கிறார். குறிப்பாக காணி அபகரிப்புகள், வளப்பங்கீடுகளில் பாரபட்சம், குளறுபடி போன்ற விடையங்களுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார். மாவட்ட - பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களில் கூட,...
  பிரபாகரனின் 27-11-2014 மாவீரர் தின உரை தொடர்பாக தினப்புயலின் களம் மாவீரர் தின நிகழ்வுகளை தடுக்க அமெரிக்காவில் பயிற்சி பெற்ற இராணுவ அதிகாரி நியமனம் மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் இராணுவத்தினரின் கண்காணிப்பு நடவடிக்கைகளில் அமெரிக்காவில் பயிற்றப்பட்ட மேஜர் ஜெனரல் உதய பெரேரா ஈடுபடுத்தப்பட்டுள்ளார். உதய பெரேரா, 2012ம் ஆண்டு அமெரிக்க இராணுவ போர் கல்லூரியில் பயிற்சி பெற்று விருதும் பெற்றார். 2009ம் ஆண்டு இடம்பெற்ற இனப்படுகொலையின் பின்னர், வெளிநாடுகளில் பயங்கரவாத தடுப்பில்...
சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட வறிய மக்கள் அரசாங்க வைத்தியசாலைக்கு செல்லும் புறக்கணிக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் வினோதலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார். சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள், தனியார் வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை செய்து கொண்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அரசாங்க வைத்தியசாலைக்கு செல்லும் போது அந்த நோயாளிகளை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலை மாற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து...