இலங்கையில் 2007-ம் ஆண்டு முதல் கடந்த 2013 ஆண்டு நவம்பர் மாதம் வரையில் 11,531 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவங்கள் தொடர்பாக 12,229 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் ஆயிரம் பெண்களில் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. 2007-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையில் வடக்கில் 119 பாலியல் வன்முறைச் சம்பவங்களும், 2009-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரையில்...
அமைச்சர் றிசாத் பதியுதீனின் பெயரைப் பயன்படுத்தி வவுனியாவில் காணிகள் பறிக்கப்படுகின்றன என சிவசக்தி ஆனந்தன் எம்.பி தெரிவித்தார். வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவில் அமைச்சர் றிசாத் பதியூதீனின் பெயரை பயன்படுத்தி மன்சூர் என்பவர், குணரத்தினம் தங்கராசா என்பவருக்கு சொந்தமான பாவற்குளம் முதலாம் யூனிட்டில் உள்ள ஒரு ஏக்கர் காணிக்குள் அத்துமீறிப்புகுந்து அந்த காணிக்குள் கடந்த 11 ஆம் திகதி கிணறு வெட்டினார் என்றும் அத்துடன் காணியை எல்லைப்படுத்தும்...
  அரசியல்வாதிகள் மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை என்று பறையடிப்பதோ, முஸ்லீம் மக்களுக்காக எதனையும் பெற்றுக்கொடுக்கவில்லை என்று பிரஸ்தாபிப்பதோ அன்றேல் ஆவர்களை வெறுமனே குற்றஞ்சாட்டுவதோ இக்கட்டுரையின் நோக்கமல்ல. ஆனால் நடப்பு நிலவரங்கள் குறித்த அரசியல் செயற்பாட்டுத் தளங்கள் வலுவிழந்து போயுள்ளதையும், தமது கையாலாகாத்தனம் தீவிரமடைந்து செல்வதையும், சில அரசியல்வாதிகளே தமக்கு நெருக்கமானவர்களிடம் கூறி கவலை கொள்கின்ற ஒரு சூழலில், சிறுபான்மை முஸ்லீம்களின் அரசியல் மீண்டும் பூச்சியத்தை நோக்கி நகர்ந்து செல்கின்றதா என்பதை...
தமிழ்த்தேசியம், தமிழர் உரிமை என்பவற்றை எதிர்க்கண்ணோட்டத்துடன் பார்த்துவரும் தமிழ் மக்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் மீதான கசப்புணர்வு நீண்டகால வரலாற்றைக் கொண்டது. இலங்கையில் குடிமக்கள் அரசாட்சி ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரையான நாட்கள் வரையில் தமிழ்மக்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறைகளும், குரல்வளை நசுக்கல்களும் தொடர்ந்து வந்திருப்பதை வரலாறு உணர்த்தும். அந்நியர்களின் ஆட்சியின்போது இலங்கைக் குடிமக்கள் உள்நாட்டு அரசியல் தலைமைத்துவத்தையே விரும்பினர். இதனால் சுதந்திரத்தை வழங்கிவிட்டுச் சென்ற அந்நியர், நாட்டை...
மன்னார் தாராபுரம் கிராமத்தில் 13-11-2014 வியாழக்கிழமை காலை 9:30 மணியளவில் ஆரம்ப தாய் சேய் சுகாதார நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் அல்ஹாஜ் ரிப்கான் பதியுதீன் அவர்களின் அழைப்பின் பேரில்  கலந்து கொண்ட வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து கிராமிய அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் தனது உரையில் மேற்குறித்தவாறு தெரிவித்தார். நிகழ்விற்கு வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் அல்ஹாஜ்...
உக்ரைனின் கிளர்ச்சியாளர் பகுதிக்கு ரஷ்யா புதிதாக துருப்புகள், பீரங்கிகள் மற்றும் இராணுவ தளபாடங்களை அனுப்பியிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை நேட்டோ முன் வைத்துள்ள நிலையில் ஐ.நா. பாதுகாப்புச் சபை அவசரமாக கூடியுள்ளது. உக்ரைனில் கடந்த இரு மாதங்களாக ஒரு பல வீனமான யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் ரஷ்யாவின் நடவடிக்கை மோதலை மேலும் தீவிரப்படுத்தும் என்று நேட்டோ குற்றம்சாட்டியுள்ளது. உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கை பிரச்சினைக்கே வழிவகுக்கும் என்று ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர்...
கிளிநொச்சி பன்னங்கண்டிக் கிராமத்தின் எல்லையிலுள்ள கனகராயன் ஆற்றுப் படுக்கையில் சட்டவிரோத மண் அகழ்வு தற்போதும் தொடர்வதாகவும் இதனைத் தடுத்து நிறுத்த பொறுப்பு வாய்ந்த எவருமே முன்வரவில்லை என அந்தக் கிராம மக்களும் கிராம அபிவிருத்திச் சங்கமும் விசனம் வெளியிட்டுள்ளனர். சட்டவிரோத மண் அகழ்வைத் தடுத்து நிறுத்த வடக்கு மாகாண சபையின் உரிய பொறுப்பு வாய்ந்த அமைச்சர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது. கிளிநொச்சி பன்னங்கண்டிக்...
இலங்கையின் மிகப் பெரும் அபிவிருத்தி செயற்திட்டமான யாழ். அதிவேகப் பாதைக்கு இன்று அடிக்கல் நாட்டும் வைபவம் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ரம்புக்கனை மற்றும் கலேவெல பிரதேசங்களில் இன்றும், பொத்துஹரயில் நாளையும் மூன்று தடவைகளில் அடிக்கல் நாட்டி வைத்து, நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளார். யாழ்ப்பாணத்துக்கான அதிவேகப் பாதை கம்பஹா , வத்தளை , எண்டேரமுல்லயில் இருந்து ஆரம்பிக்கின்றது. இங்கிருந்து கம்பஹா நகரைத் தாண்டும்...
அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவிக்கு ஆயுட்கால தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.தென் கொரியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் அரையிறுதியில் தோல்வி கண்டு வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதாதேவி, நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதக்கத்தை கழுத்தில் அணிவிக்க மறுப்பு தெரிவித்தார்.அத்துடன் தன்னை வீழ்த்திய தென் கொரிய வீராங்கனையின் கழுத்தில் பதக்கத்தை அணிவித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய...
குரோஷியாவுக்கு எதிரான சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அர்ஜென்டினா, குரோஷியா அணிகளுக்கு இடையிலான சர்வதேச நட்பு கால்பந்து போட்டி லண்டனில் நேற்று நடந்தது. ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் குரோஷியாவின் ஷார்பினி முதல் கோல் அடித்தார். இதற்கு அர்ஜென்டினா அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் குரோஷியா 1–0 என முன்னிலை வகித்தது. பின், இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட அர்ஜென்டினாவுக்கு...