முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தை விற்றதுடன் பல மக்கள் கொத்துக்களை திருடி பல ஏழைகள் வயிற்றில் தீயை அள்ளி வீசியதை யாவரும் நன்கறிவர். சந்திரகாந்தனுடன் எடுபிடிகள் அளவுக்கதிகம் அந்தப் பட்டியலில் இணைப்பாளர் பிரசாந்தன் ஊடக இணைப்பாளர் யூலியன் என பல அளவுக்கதிகமான கல்வி அறிவுடைய இணைப்பாளர்கள் இவர்கள் எல்லோரும் மக்களின் சொத்துக்களை ஏப்பமிடும் விசமிகள் கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் முதலமைச்சராக இருந்த வேளை ஊடக இணைப்பாளராக...
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மலையகத்துக்கு தீண்டத்தகாதவர்கள் அல்ல. எமக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு சிறு இடைவெளி ஏற்பட்டுவிட்டது. அது மீண்டும் கட்டியெழுப்பப் படுகின்றதென்றால் அதனை நாம் வரவேற்க வேண்டும் என பிரதியமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கொஸ்லாந்த, மீரியபெத்த பகுதிக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் விஜயம் மேற்கொண்டமை தொடர்பில் ஊடகங்களில் வெளியான கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், எமது நாட்டில் சுனாமி ஏற்பட்ட பொழுது...
ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராக இருந்தும் பயனில்லை. தொண்டமானின் குடும்பத்தை இந்தியாவுக்கே அனுப்புங்கள், இவர்கள் மரத்துக்கடியில் இருந்து கட்ட பஞ்சாயத்து செய்பவர்கள் என மண்சரிவில் பாதிக்கப்பட்ட ஒருவர் கோபத்தில் திட்டித்தீர்த்துள்ளார். கொஸ்லாந்த மண் சரிவில் தனது குடும்பத்தை பறிகொடுத்த நபர் ஒருவர் இவ்வாறு கோபத்தில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை பேசியுள்ளார். “நானும் மண்ணுக்குள் மண்ணாகியிருந்தால் இப்பொழுது  உங்கள் முன் முகம் கொடுத்து பேசியிருக்கமாட்டேன். எமது அரசியல்வாதிகள் எல்லோரும் தகுதியற்றவர்கள். தமிழ் மக்களுக்காக வந்து குரல்...
இந்திய அமைதிப் படையினர் இலங்கையில் பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் கொலைகளில் ஈடுபட்டதாக பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் இந்திய அமைதிப் படையினர் புலனாய்வு பிரிவு தலைவர் கேணல் ரமணி ஹரிஹரன் கண்டனம் வெளியிட்டுள்ளார். இந்தக்குற்றச்சாட்டு தொடர்பில் எந்தவொரு விசாரணைக்கும் தாம் தயார். எனினும் ஏன் இந்தப்பிரச்சினை தற்போது எழுந்துள்ளது என்று ஹரிஹரன் கேள்வி எழுப்பியுள்ளார். கருணா அம்மான் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு தளபதியாக இருந்தபோதே 300 முல்லிம்கள் காத்தான்குடியிலும்,...
உணர்ச்சிபூர்வமான எமது பேச்சுக்களை வைத்து, எமக்குப் பயங்கரவாத பூச்சைப் பூசி வடமாகாண சபையைக் கலைக்கவும் தயங்காது அரசாங்கம் தயங்காது என வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு சென்றுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று முற்பகல் 11 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள வித்யோதயா பாடசாலையில் கே.ஜி.கண்ணபிரான் நினைவு நிகழ்வில் உரையாற்றினார். அவர் தனது உரையில், 1987ம் ஆண்டின் இலங்கை - இந்திய உடன்படிக்கையில் பாரதம் கையெழுத்திட்டது. 13வது திருத்தச் சட்டம் என்பது...
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தில்லியில் ஓடும் பேருந்தில் கும்பலான பாலியல் வல்லுறவுக்குள்ளான மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயாவின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகளான இளைஞர்களுக்கு நீதிமன்றம் தண்டனைகளை அறிவிக்கவுள்ளது. மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வு அமைச்சகம் நிர்பயா நிதி என்ற பெயரில் ரூ 1000 கோடியை ஒதுக்கி பெண்கள் மீதான தாக்குதலை குறைக்க திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக ரூ.487 கோடியை ஒதுக்கி ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் சமநிலையை...
கல்வியில் பண்பு, தரம் இவற்றை வலியுறுத்தும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதிபர் ஆசிரியர்கள் இடமாற்ற சுற்றுநிரூபங்கள் நேர்மையுடனும், நீதியுடனும் பின்பற்றப்படுவதாக தெரியவில்லை. அவற்றில் பாரபட்சமும் பழிவாங்கல் குணமும் காணப்படுகின்றன. தேசிய பரீட்சைகள் மட்டுமே ஒரேமாதிரியானவையாக நடைபெறுகின்றன. ஆனால் வளப்பங்கீடுகளில் வடக்கு கிழக்கு மாகாண பாடசாலைகள் அதிலும் குறிப்பாக தமிழ் மொழி மூலப்பாடசாலைகள் பாரபட்சம் காட்டப்படுகின்றன. இலங்கையில் அனைத்து மாகாணங்களிலுமுள்ள கல்விக்கொள்கையா வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் பின்பற்றப்படுகின்றது? என்று கூட்டமைப்பின் வன்னி மாவட்ட...
நான்கு குடும்பங்களுக்கான ஒரு இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் 2014-10-30ம் திகதியன்று முள்ளிவளையில் வழங்கப்பட்டுள்ளது. கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் ஊடாக மேற்படி உதவிகள் வழங்கப்பட்டிருந்தன. இது தொடர்பில் மேலும் அறியவருகையில், வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு மூலமாக வாழ்வாதார உதவிகளை வழங்கும் நிகழ்வின் முதற்கட்டம் கடந்த 2014-10-30ம் திகதி முள்ளியவளையில் காலை 10 மணியளவில் ஆரம்பமாகியிருந்தது. கணவனை இழந்து வறுமையால்...
ஐக்கிய தேசியக்கட்சி ஜே வி பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் இணைந்து புதிய எதிர்க்கட்சி முன்னணி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளன. இதற்கான அறிவிப்பு எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதியன்று ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட தினத்தன்று வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முன்னணி நீதிக்கான இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரரின் தலைமையில் கொழும்பு 2 முத்தையா பார்க்கில் அன்றைய தினம் அரசியல் நிகழ்ச்சித்திட்டத்தை வெளியிடவுள்ளது. கூட்டு எதிர்க்கட்சி...
கடந்த சில வாரங்களாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளிவந்தன. இரு பாராளுமன்ற உறுப்பினர்களும், ஒரு வடமாகாணசபை அமைச்சரும் அரசிற்கு விலைபோய்விட்டதாகவும், அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் அமைச்சர் பதவிக்காக இரகசிய சந்திப்புக்கள் இடம்பெற்றதாகவும் செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளது. இதனது உண்மைத்தன்மை என்னவென்று பார்க்கின்றபொழுது, குறித்த அரசியல்வாதிகளிடம் நேரடியாக தொலைபேசியில் தொடர்பினை மேற்கொண்டு வினவியதற்கமையவும், அவர்களுடைய கருத்துக்களின் படியும் இச்செய்தியில்...