ஏழு கடல், ஏழு மலை தாண்டி ஒரு சாகச வீரன் வந்துதான் தன்னை காப்பாற்றுவான் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கும் இளவரசிகள் பற்றிய பழைய ராணி காமிக்ஸ் கதைகள் உண்டு. இன்றைய சினிமாக்கள் அதுமாதிரியான எதிர்பார்ப்பு கொண்ட சமூகத்தையும் அவர்கள் எதிர்பார்க்கும் இளவரசன்களாக சினிமா கதாநாயகர்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அப்படியான  ஒரு கதை அமைப்பில் கத்தி திரைப்படம் வெளியாகி இருக்கிறது. கத்தி படம் சமூக பிரச்சனையை பேசுவதாக செய்தி பரவியது. நமது...
மண் மூடிய துயர வரலாறு – தி இந்து – 31-10-2014 1964 – 2014 சாஸ்திரி – சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு 1964 – 2014 சாஸ்திரி – சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு   இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக் கதைதான். பஞ்சத்தாலும் வறுமையாலும் அடிபட்டு, இலங்கைக்குப் பிழைக்கச் சென்று, குத்திக் குதறப்பட்ட இந்தியத் தமிழர்களின் துயரக் கதை. இந்தியர்கள், இலங்கையர்கள் இரு தரப்பினராலும் பேச மறுக்கப்படும்...
அரசியல் பித்தலாட்டங்களால் ஏமாற்றப்பட்டு நாளைய எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறதோ என எண்ணி ஏங்கும் ஒரு குறுந்தமிழ் சமூகம் மலையகசமூகம். தொழிற்சங்கப்போட்டியும், வாக்குகளுக்கான அரசியல் போட்டியும் இணைந்து ஒவ்வொரு அரசியல் தொழிற்சங்கமும் மலையகத்தை பாத்திகட்டி, வேலிபோட்டு மக்களை மந்தைகளாக நினைத்து கட்டிவைக்க முயல்கின்றன. இதுவே நடைமுறை உண்மையும் கூட. மலையக மக்களின் கடும் உழைப்பே, இலங்கையின் அனைத்து இனங்களினதும் சமூக வாழ்வை, நலன்களை உயர்த்திக் கொண்டிருக்கின்றன. இவர்களது உழைப்பு கடுமையான...
வட மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர்..அந்த மண்ணில் நடந்தேறிய முக்கிய சம்பவங்களில் சில.. உள்ளத்தை, உடல் என்னும் பெட்டகத்துக்குள் பூட்டி வைத்திருக்கும் அனைவராலும் இலகுவில் ஜீரணிக்க முடியாத ஒன்று..!2009 இல் முள்ளி வாய்க்காலில் ஏற்பட்ட இன அழிப்பை உலகமே மறக்க முடியாது என்றால் உண்மைத் தமிழனால் அவைகளை எப்படி மறக்க முடியும்? சுமார் ஒன்றரை லெட்சம் தமிழ் மக்கள் அழிக்கப் பட்ட கோரப் படுகளம் வன்னி..சுமார் நான்கு இலட்சம் தமிழ்...
  இலங்கை அணியின் நட்சத்திர வீரர் சங்கக்காரா முதல் ஒருநாள் போட்டியில் செய்த அதே தவறை 2வது ஒருநாள் போட்டியிலும் செய்தார். நேற்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 274 ஓட்டங்கள் குவித்தது. இந்த ஓட்டங்கள் இலக்கை நோக்கி இந்தியா துடுப்பெடுத்தாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக தவான், ரஹானே களமிறங்கினர். அணியின் ஓட்டங்கள் 18 என இருந்த போது, பிரசாத் வீசிய பந்தை ரஹானே எதிர்கொண்டார். அப்போது மட்டையில் பட்ட பந்து சங்கக்காராவுக்கு கேட்ச்...
  இந்திய அணி வீரர்கள் எங்களை விட எல்லா வகையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் என்று இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார். இலங்கை அணி இந்தியா சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியை தழுவிய இலங்கை அணி, 2வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வியடைந்தது. இந்த தோல்வி பற்றி இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறுகையில், முதலாவது ஒருநாள் போட்டியில்...
  தனது 16 வயதில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டித் தொடரில் ஆடிய சச்சின், இந்தியா-பாகிஸ்தான் தொடர் என்றால் என்ன என்பதை அறிந்ததாகத் தெரிவித்துள்ளார். சுயசரிதை நூலில் பாகிஸ்தானுக்கு எதிரான அந்தத் தொடரில் வக்கார் யூனிஸ் பந்தில் மூக்கில் அடிபட்ட தருணம் எப்படிப்பட்டது என்பதை வர்ணித்துள்ளார். இதுபற்றி அவர் சுயசரிதையில் கூறுகையில், சியால்கோட் டெஸ்ட் போட்டியில், வக்கார் பந்து வீச வந்த போது நான் ஒரு ஓட்டம் எடுத்திருந்தேன். வக்கார் ஒரு...
கத்தி படம் கிட்டத்தட்ட கோபி கதை தான் என்று சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், இது குறித்து முருகதாஸ் ஏதும் வாய் திறக்காமலேயே இருக்கிறார் . இந்நிலையில் முருகதாஸ்க்கு உதவி இயக்குனரிடம் கதை கேட்டு அதை அவரிடம் கொண்டு போய் சேர்ப்பதில் ஜெகனுக்கு முக்கிய பங்கு உள்ளது. அதேபோல் சமீபத்தில் சென்னையில் உள்ள சிவன் பார்க்கில் ஒரு உதவி இயக்குனரிடம் கதை கேட்டு கொண்டு இருந்தாராம் ஜெகன், உடனே அந்த வழியாக வந்த...
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கத்தி திரைப்படம் தமிழ் நாடு மட்டுமின்றி வெளி நாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இவர் தன் அடுத்த படம் மிகவும் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார். இப்படத்தின் கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் வேலைகளை ஒரு முன்னணி ஹாலிவுட் நிறுவனம் செய்யவிருக்கின்றது. சிம்புதேவன் இயக்கும் இப்படம் இரண்டு காலகட்டங்களில் நடப்பது போல் கதையாம். இதனால் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரத்தில் விஜய் நடிக்கவிருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள்...
 வள்ளிபுனம் கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது. காலை 9.30 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் கௌரவ.து.ரவிகரன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். இது தொடர்பில் மேலும் அறியவருகையில், இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 70க்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வள்ளிபுனம் கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றுள்ளது. பாடசாலையின் அதிபர் செல்வி.இ.பேரின்பராணி...