தற்போதைய காலகட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங் கம் வகிக்கக்கூடிய கட்சிகளான புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் இதர கட்சிகளை பதிவு செய்வதாயின் ஒற்றுமையை நிலைநாட்டுவதென்பது மிகக்கடினமான விடயமாகவே அமையும். அவ்வாறு பதிவுசெய்யப்படவேண்டுமாயின் ஆனந்த சங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணியையையும் இணைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கின்றது. அவர் அதற்கெதிராகவே செயற்பட்டுவந்த ஒருவரும் கூட. பொதுவாக இக்கட்சிகள் அனைத்தும் ஒருகுடையின் கீழ் பதிவுசெய்யப்படுமாயின் தமிழரசுக்கட்சியினால் இக்கட்சிகள் அனைத்தும் ஓரங்கட்டப்படும். இறுதி யில்...
யாழ். கலைத்தூது மண்டபத்தில் நடைபெற்ற மாமனிதர் குமார் பொன்னம்பலம் நினைவு நிகழ்வில் சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல் 'ஐ.நா மனித உரிமைகள் பேரவை யின் விசாரணையும் தமிழ் மக்களின் எதிர்காலமும்' என்ற தலைப்பில் நினைவுப் பேருரையாற்றினார். அதன் முழு விபரம் வருமாறு:- சட்டத்துறையிலும் அரசியலிலும் பிரகாசித்து மக்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்திய பல தலைவர்களை இந்த நாடு கண்டிருக்கிறது. சட்டத்தில் பாண்டித்தியம் பெற்று தங்கள் வாதத்திறமையாலும், வாக்குவன்மையாலும் மக்களைக் கவர்ந்து புகழின்...
நாம் புலிகளைப் பற்றி பேசவில்லை! மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சினை பற்றியே பேசுகிறோம்: சம்பந்தன் வட மாகாணசபை அரசியல்வாதிகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வட மாகாணசபையின் ஆட்சி அதிகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது. எனினும், மாகாணசபையின் அரசியல்வாதிகளுக்கு எவ்வித அதிகாரங்களும் வழங்கப்படவில்லை. இடம்பெயர் மக்கள் தங்களது சொந்த இடங்களுக்கு செல்ல சந்தர்ப்பம் இல்லாத நிலைமை காணப்படுகின்றது. இராணுவத்தினர் வடக்கு தமிழ் மக்களின் காணிகளை கைப்பற்றியுள்ளனர்....
கொஸ்லந்த, மீரியபெத்தவிற்கு சென்றிருந்த தினப்புயல் ஊடகவியளாலர்  இம்மானுவேல் தர்சன் அவரினால் மிக கச்சிதமாண முறையில் மலைப்பகுதி  உடைந்து நொருங்கும் வீடியோ காட்ச்சி  இதோ......          TPN NEWS
  இஸ்லாமிய பெண் ஒருவர் முஸ்லீம் தீவிர வாதிகளினால் கல் எறிந்து கொல்லப்படும் பரிதாபம்
  இந்திய அமைதிப் படையினர் தமிழ்ப் பெண்களை வல்லுறவுக்குட்படுத்தினர்: கருணா குற்றச்சாட்டு நாடாளுமன்றில் இந்திய அமைதிப் படையினர் மீது பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், இந்திய அமைதிப் படையினர், இலங்கையில் தங்கியிருந்த 1987- 1990ம் ஆண்டு காலப்பகுதியில் பல தமிழ்ப் பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்தனர். அத்துடன் தமிழர்கள் பலர் கொல்லப்பட்டனர் என்று குற்றம் சுமத்தினார். கிழக்கில் இடம்பெற்ற இவ்வாறான சம்பவங்களுக்கு ஆதாரங்கள் உள்ளதாக முரளிதரன் குறிப்பிட்டார். இலங்கை...
ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம்! அரசநிறுவனங்களின் ஊடகவியலாளர்களுக்கு ஒரு லட்சம் அன்பளிப்பு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கெடுக்கும் வகையில் அரச நிறுவனங்களின் ஊடகவியலாளர்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அரச இலத்திரனியல் நிறுவனங்களின் ஊடகவியலாளர்களுக்கு முதலில் இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் இன்று சுயாதீன தொலைக்காட்சி மற்றும் லக்ஹண்ட ஊடகங்களின் பணியாளர்கள் இந்தக் கொடுப்பனவைப் பெற்றுள்ளனர். இவர்களுக்கு பணமாக 75 ஆயிரம் ரூபாவும், பரிசு வவுச்சராக 25 ஆயிரம் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது. தமது...
இன ஒற்றுமையை மேடைகளில் பேசாது செயற்ப்பாட்டில் காட்டவேண்டும் - வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர்... இன்றைய தினம் 03-11-2014 திங்கள் மதியம் வவுனியா மாவட்ட, வெங்கலச் செட்டிக்குளம் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட முகத்தாங்குளம், மருதமடு ஆகிய குளங்களில் சுமார் 90000 நன்னீர் மீன்குஞ்சுகள் வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் விடப்பட்டன. சிங்களவர்கள் வாழும் கிராமமான மருதமடு குளத்தில் மீன்குஞ்சுகளை விட்டபின்னர்,...
சாதிக்கும் சந்ததியின் 5ம் கட்ட நிகழ்வானது நேற்று காலை 9.30 மணியளவில் வள்ளிபுனம் க.உ.வித்தியாலயத்தில் ஆரம்பமாகியிருந்தது. 5ம் கட்டத்திற்கென உள்வாங்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து அந்நிகழ்வை சிறப்பித்திருந்தனர். புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள 8 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு அப்பாடசாலைகளில் பெற்றோரில் ஒருவரை அல்லது இருவரையும் இழந்து வறுமையோடு கல்வியை தொடரும் பாடசாலை மாணவர்கள் மேற்படி செயற்திட்டத்தில் உள்வாங்கப்பட்டமை...
பதுளை கொஸ்லாந்தை மண் சரிவால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளின் துயர் துடைக்க முன்வருவோம்.... வட மாகாண அமைச்சர் டெனிஸ்வரன்.. இன்று காலை 04-11-2014 செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் நகரின் பிரதான தளபாட விற்பனை நிலயத்தினரினால் ஒரு தொகை நிவாரணப் பொருட்கள் வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தொண்டர்களும் நலன்விரும்பிகளும் மன்னார் பேசாலை கிராமத்தில் இன்றைய நிவாரணப் பொருட்கள் திரட்டும்...