ஜனாதிபதி தேர்தல் சம்பந்தப்பட்ட அறிவிப்பு வெளிவரும் என்ற நோக்கில் உற்சாகம் கொண்டிருந்த பல அரசியல் வாதிகளின் கருத்துக்களையும், மலையக தலைமைகளின் அறிக்கைகளையும் ,ஜனாதிபதியை சந்தித்தல், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு தொடர்பான.... எதிர்கருத்துக்களை வெளியிடல் என்றெல்லாம் பல்வேறு விடயங்களுக்கு தமிழ் இனத்தின் அத்தனை ஆர்வமும் ,அடங்கி துன்ப நிலையாக மாறிவிட்டது. மீரியபெத்த மண்சரிவு சம்பவம். ஆம் அந்த துயர சம்பவம் இலங்கையில் மட்டுமல்லாது முழு உலகில் வாழும் தமிழினத்தையும் உலக மக்களையும்...
மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட இடத்திற்கு அவர் விஜயம் செய்துள்ளார். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களையும் அவர் சந்தித்துள்ளார். குறுகிய அரசியல் நோக்குடன் செயற்படுவதனை அரசியல்வாதிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். சுயலாப அடிப்படையில் செயற்படாது மண்சரிவு எச்சரிக்கை தொடர்பில் முன்கூட்டியே அரசியல்வாதிகள் கவனம் செலுத்தியிருந்தால் இந்த நிலைமையை தவிர்த்திருக்கலாம். இந்த துயர் மிகுந்த தருணத்தில் வடக்கிற்கும் மலையகத்திற்கும் இடையில் புதிய பிணைப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கத் தயார். பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியருக்கு...
இந்தியத் தலைநகர் டெல்லியில் சீக்கியர்கள், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தினை ஏந்தியவாறு இன்று போராட்டம் நடத்தியுள்ளனர். சீக்கிய இனப்படுகொலையின் 30வது ஆண்டு நினைவு தினத்தினை நினைவேந்தும் முகமாக இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில், இனப்படுகொலைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட இந்தியாவின் பிரதான தேசிய இனங்களான சீக்கியர்கள், காஷ்மீரியர்கள், நாகர்கள், தமிழர்கள் பங்குபற்றியுள்ளனர். இதேவேளை, இந்தப் பேரணியில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்தப் பேரணியில் கலந்து கொண்ட நாம் தமிழர்...
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் இந்தியத் திரையுலகை மட்டுமல்லாது ஹாலிவுட் திரையுலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ள படமாக 'ஐ' படம் இருந்து வருகிறது. வெறும் ஒரே ஒரு டீசரை மட்டுமே வெளியிட்டு இதுவரை சுமார் 80 லட்சத்திற்கும் மேல் யு டியுபில் பார்க்கப்பட்டு இந்தப் படம் சாதனை படைத்துள்ளது. அதே சமயம், மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தைச் சுற்றியும் ஆச்சரியப்படும் விதத்தில்...
முற்றிலும் புதியவர்கள் நடித்த பாதி உனக்கு பாதி எனக்கு என்ற படத்தின் ஆடியோ விழாவில், மறைந்த முன்னணி சினிமாவின் சாதனை கலைஞர்களின் புகைப்படங்களை வைத்து, அவர்களுக்கு இந்த படம் சமர்ப்பணம் என்று ஒரு பேனரை வைத்திருந்தனர். ஆனால், அதில் தற்போது உயிரோடு இருக்கும் டைரக்டர்கள் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், திரிலோகசந்தர் என்ற இயக்குனர்களின் படங்களும் இடம்பெற்றிருந்தது. அதனால், அதைப்பார்த்து விழாவுக்கு வந்திருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதுபற்றி சிலர் சொன்னபோது, அப்படக்குழுவினரும் அதிர்ந்தனர். குறிப்பாக, புதுமுக...
வட மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் போன்றவர்கள் வெளியால் நின்று எம்மை சீண்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாமும் அவர்களை சீண்டத் தயாராகவே இருக்கின்றோம். இத்துடன் இத்தகைய சீண்டும் செயலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என வடமாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் தெரிவித்தள்ளார். வட மாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் யாழ். ஊடக மையத்தில் இன்று திங்கட்கிழமை மதியம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்....
   மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றச்சென்று அந்நாடுகளில் தமது எஜமானிகள் மற்றும் தொழில்புரியும் நிறுவனங்களில் துன்புறுத்தல்கள் மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளான மேலும் 112 இலங்கையர்கள் சனிக்கிழமை(01)காலை நாடு திரும்பியுள்ளனர். தாம் தொழில் பெற்றுச்சென்ற நாடுகளில் தமது எஜமானிகள் மற்றும் தாம் தொழில் புரிந்த நிறுவனங்களில் ஒப்பந்தத்தை மீறும் வகையில் தமக்குரிய சம்பளம் வழங்கப்படாத காரணத்தினால் தாம் நாடு திரும்பியதாக அந்த பணியாளர்களில் ஒருவர் கூறினார். தாம் தொழில் புரிந்த வீடுகளில் உள்ள...
மேல் மாகாண சபை உறுப்பினரும் சமுர்த்தி அபிவிருத்தி, மற்றும் விவசாய ஆராய்சி உதவியாளர்கள் தொழிற் சங்கத்தின் செயலாளருமான ஜெகத் புஸ்பகுமார. கடந்த வெள்ளிக்கிழமை (ஒக்.31) வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சமுர்த்தி உத்தியோகத்தர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார் எனக் கூறப்படுகின்றது . அங்கு உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில், "ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சமுர்த்தி வேலை ஜனாதிபதி...
இலங்கை மீது ஐக்கிய நாடுகள் மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்காக கிளிநொச்சியில் வெற்று விண்ணப்பபடிவங்களை விநியோகித்த போது, கைது செய்யப்பட்டவருக்கும் தமக்கும் தொடர்புகள் இல்லை என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சில ஊடகங்கள் இந்த விடயத்தில் கூட்டமைப்பின் மீது குற்றங்களை சுமத்தியுள்ளன. கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டவருக்கு ஆழ்வார்பிள்ளை விஜயகுமார் என்பவரே வெற்று விண்ணப்ப படிவங்களை வழங்கியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் இந்த விஜயகுமார் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் இல்லை என்று கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இந்தநிலையில் விசாரணைக்காக...
மலையக மக்களின் பாதுகாப்பானதும் நிரந்தரமானதுமான வாழ்க்கை பற்றி இனி சிந்திக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். அண்மையில் பாரிய மண்சரிவினால் புதையுண்டுபோன கொஸ்லாந்த, மீரியபெத்த போன்ற இடங்களில் ஏற்பட்ட பாதிப்புக்களையும் பாதிக்கப்பட்ட மக்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மலையகத்தை சேர்ந்த ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் அக்கட்சியை சேர்ந்த முக்கியஸ்தர்கள் பிரதி அமைச்சர் ராதாகிருஸ்ணன் உட்பட...