வடக்குக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடைக்கு எதிராக வடக்கு மாகாணசபையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று யாழ்ப்பாண ஆயர் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக வெளிநாட்டவர்களுடன் புலம்பெயர்ந்த தமிழர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக வணக்கத்துக்குரிய ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் குறிப்பிட்டுள்ளார். காலத்துக்கு காலம் அரசாங்கம் தமது கொள்கைகளை மாற்றி வருகிறது. இந்தநிலையில் வெளிநாடுகளில் இருந்து வருவோர் தமது உறவுகளை பார்க்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இந்த தடை தேவையற்ற ஒன்றாகும். சுதந்திரமான நடமாட்டத்துக்காக இந்த பயணத்தடை நீக்கப்பட...
உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற நிறுவனங்கள் மாத்திரமல்லாது வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் கூட மகிந்த சிந்தனையை ஆராய்ந்து வருவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கூட்டுறவு பாதுகாப்பு நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். வெளிநாடுகள், உலக வங்கி அல்லது சர்வதேச நாணய நிதியம் என்பன ஆலோசனைகளை வழங்கினாலும்...
கொஸ்லாந்தை மீரியபெத்த மக்களுக்கு, மென்மேலும் நிவாரண உதவிகள் அவசியமில்லை. அனுதாப உணர்வால் உந்தப்பட்டு நிவாரண பொருட்களை ஊர்திகளில் கூட்டாகவோ, தனிபட்ட முறையிலோ எடுத்து செல்ல வேண்டாம் என்றும், அவ்விடம் கொண்டு செல்லப்படும் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவதற்கு நடைமுறை காரணங்கள் பல தடையாக இருக்கின்றன. இந்நிலையில், வாழ்விழந்த, வீடிழந்த குடும்பங்களுக்கு பாதுகாப்பான ஸ்தலத்தில் சொந்த நிலமும், அங்கு வாழ வீடும், குழந்தைகளுக்கு கல்வியுமே மீரியபெத்த மக்களின் இன்றைய பிரதான எதிர்பார்ப்புகளாக...
போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில், கொழும்பு உயர் நீதிமன்றத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் ஐவரையும் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். இந்த மீனவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று அறிவித்து விடுதலை செய்யாவிட்டால் தேவையற்ற பின்விளைவுகள் ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த நாள் விழா பொதுக்கூட்டம் மேல்புறம் சந்திப்பில் இன்று...
கொஸ்லாந்த, மீரியபெத்த மண்சரில் புதையுண்ட மக்களை மீட்க இராணுவத்தினர் கடந்த 6 நாட்களாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மண்சரிவில் 400 பேர் வரை காணாமல்போனதாக கூறப்பட்டாலும், இதுவரையில் 6 சடலங்களே மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிடுகையில், 2005ம் ஆண்டிலிருந்து மலை வெடித்து இருந்தது. வேறு இடத்திற்கு எழும்புமாறு கூறியிருந்தார்கள். ஆனால் வீடு கொடுக்காமல் இந்த மக்கள் எங்கே போவது. மக்கள் புதையுண்ட இடத்தை விட்டு இராணுவத்தினர் வேறு இடத்தில்...
சில பௌத்த துறவிகளின் நடவடிக்கைகள் பௌத்த மதத்திற்கு அவமானமாக மாறியுள்ளதாகவும் அவர்களின் காவிகள் கூட மாறிவிட்டது எனவும் பிரதமர் டி.எம். ஜயரத்ன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சில மதத் தலைவர்கள் தேவையில்லாமல் அரசியலில் ஈடுபடுகின்றனர். அத்துடன் புத்த மதத்தையும் புத்த பகவானையும் அரசியலுடன் சம்பந்தப்படுத்துகின்றனர். பௌத்த துறவிகள் ஜனாதிபதியாக வர வேண்டும் என்றும் புத்தரும்,பௌத்த மதமும் கோரவில்லை. இது காவி உடைக்கு அவமானமானது. இலங்கை என்பது பல இன மற்றும்...
பதுளை மாவட்டத்தில் அனர்த்தங்களின்போது பாதிக்கப்பட்டு அகதி முகாம்களில் உள்ளவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு,தொடர்ந்து பாதிப்புகள் எதிர்நோக்கவுள்ள பகுதிகளில் உள்ள மக்களை நிரந்தரமாக குடியேற்றம் செய்யப்படுவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கையினை எடுக்கவேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இன்று திங்கட்கிழமை பதுளை மாவட்டத்தில் அனர்த்தங்களின்போது பாதிக்கப்பட்ட கொஸ்லாந்த,மீரியபொத்த பகுதிகளுக்கு விஜயம் செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அப்பகுதிகளில் பகுதிகளை பார்வையிட்டதுடன்...
தமிழக மீனவர்களின் தூக்கு தண்டனைக்கு எதிராக வாதாட வழக்கறிஞர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் எமர்சன், வில்சன், பிரசாந்த், அகஸ்டஸ், லாங்லெட் ஆகிய 5 பேரும் கடந்த 2011ம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் சிறை பிடித்து செல்லப்பட்டனர். பின்னர் இவர்கள் மீதும், ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் பிடித்து வைத்திருந்த இலங்கை தமிழ் மீனவர்கள் மூவர் மீதும் போதை பொருள்...
கடந்த இரு வார காலங்களாக இலங்கை இராணுவப் புலனாய்வினரால் அலவ் பிள்ளை விஜேந்திரகுமார் எனப்படும் சன் மாஸ்ரர் தேடப்பட்டு வருவதாக பரபரப்பாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் இவருக்கும், இராணுவப் புலனாய்வினருக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக சன் மாஸ்ரரை இராணுவத்தினர் தேடவேண்டும் என்று பார்க்கின்றபொழுது, இவர் ஏற்கனவே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தீவிர ரசிகனாகவும், உறுப்பினராகவும் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினால் ஒழுங்குபடுத்தப்படுகின்ற ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றில் இவரே முன்னின்று செயற்பட்டவராவார்....
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தி சூப்பர்ஸ்டார் 2 விதமான கெட்டப்புகளில் நடித்து வரும் லிங்காவில் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்‌ஷி சின்ஹாவும், அனுஷ்காவும் நடித்து வந்தாலும், சோனாக்‌ஷி சின்ஹாவை விட அனுஷ்காவிற்குதான் படத்தி நிறைய காட்சிகளில் உள்ளதாம். ரஜினியின்ம் போராட்டத்திற்கு கைக்கொடுப்பது போன்ற அவரது கேரக்டர் என்பதால் சில காட்சிகளில் சூப்பர்ஸ்டாருக்கு சமமாக வெயிட் பர்பாமென்ஸ் கொடுத்து நடித்துள்ளராம். இவரது பர்பாமென்ஸைப் பார்த்த ரஜினியே அவரது நடிப்புத்திறனைக் கண்டு பாராட்டியதால் மேலும்...