இயற்கையின் வரமான மங்குஸ்தான் கண்களை பாதுகாப்பதுடன், உடல் வெப்பத்தையும் தணிக்கிறது.20 அடி முதல் 60 அடி உயரம் வரை வளரக்கூடியது மங்குஸ்தான் மரம். 'குளுசியாசியே' தாவர குடும்பத்தை சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் கார்சினியா மங்குஸ்தானா. எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்துக்கள் இப்பழத்தில் ஏராளமாக இருக்கிறது. 100 கிராம் பழத்தில் ஆர்.டி.ஏ. அளவில் 13 சதவீதம் நார்ப்பொருட்கள் அடங்கி உள்ளன. பி-குழும வைட்டமின்களான தயாமின், நியாசின், போலேட் போன்றவையும் கணிசமான அளவில், மங்குஸ்தானில்...
உணவு வகைகளில் ருசிக்காகவும், மணத்திற்காகவும் மட்டுமே கருவேப்பிலை சேர்க்கப்படுவதாக பலரும் கருதுகிறோம்.ஆனால் இதில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் அடங்கியுள்ளன. கருவேப்பிலை ஒரு சத்து நிறைந்த உணவு பொருளாகும், இதில் 63 சதவிகித நீரும், 6.1 சதவிகித புரதமும், ஒரு விழுக்காடு கொழுப்பும், 4 விழுக்காடு தாதுப்புகளும், 6.4 சதவிகித நார்ச்சத்தும், 18.7 சதவிகித மாவுச்சத்தும் இருக்கின்றன. சுண்ணாம்பு சத்து. மக்னீசியம், இரும்பு சத்து, தாமிர சத்து, கந்தக சத்து மற்றும் குளோரின்,...
பீட்சா, பர்கர் மற்றும் துரித உணவுகளின் பக்கம் ஈர்க்கப்பட்டுள்ள இன்றைய தலைமுறையினர், சத்தான காய்கறிகளை ஒதுக்கிவிடுகின்றனர். நாம் வேண்டாம் என்று ஒதுக்கும் காய்கறிகளில் சத்துக்கள் மட்டுமல்ல, பல்வேறு நோய்களை தீர்க்கும் அருமருந்தாகவும் உள்ளது. கத்திரிக்காய் அரிய மருத்துவ குணங்கள் கொண்ட கத்தரிக்காயை பலருக்கும் பிடிப்பதில்லை, பல வண்ணங்கள் இருந்தாலும் அனைத்திலும் உள்ள சத்துக்கள் ஒன்று தான். இதில் தசைக்கும், ரத்தத்திற்கும் உரம் தரும் வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாயு, பித்தம், கபம் போகும். அம்மை நோயால்...
சில தினங்களுக்கு முன்னர் மைக்ரோசொப்ட் நிறுவனம் ஸ்மார்ட் கடிகாரம் ஒன்றினை அறிமுகம் செய்தது.இதன்மூலம் ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு போட்டியாக மைக்ரோசொப்ட் நிறுவனமும் இணைந்துள்ளது. 200 டொலர்கள் பெறுமதியான இக்கடிகாரமானது 1.4 அங்குல அளவு மற்றும் 320 x 106 Pixel Resolution ஆகியவற்றினைக் கொண்ட திரையினைக் கொண்டுள்ளது. மேலும் இதயத்துடிப்பினை அறிந்து கொள்ளும் தொழில்நுட்பம், GPS தொழில்நுட்பம், Bluetooth 4.0 ஆகியவற்றுடன் iOS, Android மற்றும் Windows இயங்குதளங்களைக்...
சிம்பு தற்போதெல்லாம் எந்த விழாக்களிலும் பெரும் பாலும் கலந்துக்கொள்வது இல்லை. ஆனால், நண்பர்கள் பார்ட்டி என்றால் முதல் ஆளாக வந்து விடுவார். அந்த வகையில் சமீபத்தில் நடிகை த்ரிஷா வைத்த பார்ட்டி ஒன்றில் சிம்பு கலந்து கொண்டார், இதில் சிறப்பம்சம் என்னவென்றால் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியாவும் இந்த விருந்தில் பங்கேற்றார். மூவரும் ஒன்றாக இருக்கும் படி ஒரு போட்டோவை த்ரிஷா டுவிட்டரில் தட்டிவிட, தற்போது இது தான் ஹாட் டாபிக். ஏற்கனவே...
சித்தார்த், பாபி சிம்ஹா நடிப்பில் வெளிவந்த ஜிகர்தண்டா திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதிலும் குறிப்பாக பாபியின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தது. இப்படம் விரைவில் நடக்க உள்ள தெற்கு ஆசிய உலக சினிமா விழாவில் திரையிடப்பட உள்ளது. இதற்கு முன் இவ்விழாவில் ஆரண்யகாண்டம் படம் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இன் நற்செய்தியை கார்த்திக் சுப்புராஜ் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  
எந்திரன், கோச்சடையான் என டெக்னாலஜி சமந்தப்பட்ட ரஜினி படங்களை பார்த்து, எப்போது சூப்பர் ஸ்டார் தன் பழைய ஸ்டையிலுடன் வருவார் என அனைவரும் காத்திருக்கின்றனர். அவர்கள் எண்ணங்களை புரிந்து கொண்டு ரஜினி தன் வழக்கமான ஹிட் ஃபார்முலா இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருடன் இணைந்திருக்கும் படம் தான் லிங்கா. படத்தின் டீசரை பார்த்து முடித்த பிறகு நம் மனதில் நிற்பது ரஜினி, சூப்பர் ஸ்டார், தலைவர் இதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு...
தமிழ் சினிமாவில் 80களில் ரஜினி-கமல் ரசிகர்கள் என இரண்டு வகையாக மக்கள் பிரிந்து இருந்தனர். பின் அவர்கள் ஒரே மேடையில் சந்திப்பது, இவரை அவர் புகழ்ந்து பேசுவது என ரசிகர்களிடம் உள்ள ஈகோவை நீக்கினர். ஆனால், தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர்கள் ரசிகர்களுக்குள் மோதல் உருவாகியுள்ளது. கமல் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் அவருக்கு தமிழகம் முழுவதும் போஸ்டர் மற்றும் பேனர் அடித்து வருகின்றனர். இதில் ‘ நடிகர்களின் முதல்வர்’ என்று...
வடமாகாண விவசாய அமைச்சினால் நவம்பர் 1ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரையிலான காலப்பகுதி மாகாண மர நடுகை மாதமாக அறிவிக்கப்பட்டதற்கிணங்க இன்றைய தினம் நாரந்தனை பகுதியில் வடமாகாண முதலமைச்சரினால் மர நடுகை மாதம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்படி மர நடுகை திட்டம் வடமாகாணம் முழுவதும் இம்மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர், மாகாண விவசாய அமைச்சர், மாகாணசபை அவைத்தலைவர் ஆகியோர் கலந்துகொண்டு மர கன்றுகளை நாட்டிவைத்தனர். இந்நிகழ்வில்...
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுதிட்டம் இன்று பாராளுமன்றத்தில் அதி கூடிய வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து மலையகத்தில் ஹட்டன் பகுதியில் உள்ள மக்கள் பட்டாசு வெடித்து தங்களது சந்தோஷங்களை வெளிப்படுத்தியுள்ளனர். வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் ஆளுங்கட்சி நூறு வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது. இது தொடர்பான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றபோது ஆளுங்கட்சிக்கு ஆதரவாக 157 வாக்குகள் கிடைத்துள்ளன. எதிராக 57 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. வரவு-செலவுத்திட்ட...